Ticker

6/recent/ticker-posts

Translate

ஒமோகா 3 ஃபேட்டி ஆசிட் என்றால் என்ன? | இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் யாவை? | EPA, DHA & ACA | Lipids | Ester | Carboxylic acid | Aromatic Compounds | Aliphatic Compounds |

            உணவு (food) தான் ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ஆற்றலை (energy) அளிக்கிறது. அரிசி, நெல் மற்றும் கம்பு (Rye) போன்ற உணவுகளை நாம் சாப்பிட்ட பின், அந்த உணவை உடல் செரிமானம் (digest) செய்து நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஆற்றலை தருகிறது. உணவில் இருக்கும் சத்துக்கள், வைட்டமின் (vitamin) போன்ற பொருட்கள் தான் ஆற்றலை நமது உடலுக்கு தருகிறனார். ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் (nutrients) நிறைந்த உணவு தேவைப்படும். சான்றாக, எலும்புகளுக்கு கல்சீயம் (Calcium) ஊட்டச்சத்துக்கள் தான் அதிகமாக தேவைப்படும். எனவே தான், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண பலரும் எடுத்துரைப்பார்கள். மேலும், சில வகை பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் உணவு பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.



Salmon fish on fire
Salmon fish frying on fire! 
Wow!



                இப்படி உணவில் (food) வைட்டமின் (vitamin), கல்சீயம் (Calcium) போன்ற பல ஊட்டச்சத்துக்கள் (nutrients) இருக்கும். அதில் ஓன்று தான், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (Omega 3 Fatty Acids) ஆகும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (Omega 3 Fatty Acids) என்றால் என்ன? இதனை உணவில் (food) சேர்த்துக் கொண்டால் (Add) ஏற்படும் நன்மைகள் (Benefits) யாவை? ஃபேட்டி ஆசிட் (Fatty Acids) என்றால் என்ன?

ஃபேட்டி ஆசிட் (Fatty Acids) என்றால் என்ன?

               ஃபேட்டி ஆசிட் கார்பாக்சிலிக் ஆசிட் (Carboxylic acid) வகையை சேர்ந்தது ஆகும். இது அலிபாடிக் (Aliphatic) சங்கலி கலவையை கொண்டு இருக்கும். இயற்கையாக இருக்கும் ஃபேட்டி ஆசிட்களில் கிளைகள் அற்ற கார்பன் அணுக்கள் (Carbon atoms) தான் இருக்கும். இவைகள் தான் கொழுப்பின் முக்கிய மூலம் ஆகும். இவைகள் எஸ்டர்கள் (Esters) ஆகவும் இருக்கும். ஃபேட்டி ஆசிட்கள் தான் முக்கிய உணவு  ஊட்ச்சத்துக்களை அனைத்து விலங்களுக்கும் வழங்கும். 


Fatty acid structure
Fatty Acid Structure 
So cool!


ஃபேட்டி ஆசிட்கள் இரண்டு வகை படும். அவை நிறைவுற்றது (Saturated) மற்றொரு நிறைவுறாதது (Unsaturated) ஆசிட்கள் ஆகும். இவைகள் தான், திசுக்கள், இதயம் மற்றும் மற்ற உறுப்புகளுக்கு செல் சவ்வு உருவாக்கவும் மற்றும் ஆற்றலை சேமித்து வைக்கவும் உதவும்.

ஒமோகா 3 ஃபேட்டி (Omega 3 Fatty Acids) ஆசிட் என்றால் என்ன? இதனை உணவில் (Food) சேர்த்துக் கொண்டால் (Add) உணவில் ஏற்படும் நன்மைகள் (Benefits) யாவை?

          மனித மற்றும் விலங்கு உடல் செல்களால் ஆனது. செல்கள் மீது செல் சவ்வு (membrane) என்னும் போர்வை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்தச் செல் சவ்வுக் கட்டமைப்பில் ஒமோகா 3 ஃபேட்டி ஆசிட் முக்கியக் கூறு ஆகும். இது ஒரு வகையான கொழுப்புப் பொருள் ஆகும்.

             ஒமோகா 3 ஃபேட்டி ஆசிட் (Omega 3 Fatty acid) உள்ள அமிலங்கள்:

- ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் (Alphalionlenic Acid), இதனை சுருக்கமாக ALA என்று அழைப்பார்கள்,

- இகோசாபென்டயினோயிக் அமிலம் (Eicosapentanoic Acid), இதனை சுருக்கமாக EPA என்று அழைப்பார்கள் மற்றும்

- டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் (Docosahexaenoic Acid), இதனை சுருக்கமாக DHA என்று அழைப்பார்கள்.


Omega 3 Fatty products
Omega 3 Fatty Acids rich foods
In a table..


இவைகள் மூன்றும் ஒமோகா 3 ஃபேட்டி அமிலத்தில் அடங்கும்.

               இதில் ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் (Alphalionlenic Acid) ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலம் ஆகும். அதாவது, மனித உடலுக்கு இந்தக் கொழுப்புப் பொருள் மிகவும் தேவை என்றாலும், உடலியக்கத்தால் (motion) இந்த அமிலத்தை உருவாக்க முடியாது. உணவாக உட்கொண்டால் தான் மட்டுமே இந்த அமிலம் உடலுக்கு கிடைக்கும். ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் (Alphalionlenic Acid) முதலில் இகோசாபென்டயினோயிக் அமிலமாகவும் (Eicosapentanoic Acid), பின்னர் டொகோசாஹெக்சாயினோயிக் (Docosahexaenoic Acid) அமிலெமாகவும் உடலியக்க நிகழ்வு வழியே ஓரளவு உருவாக்கிக் கொள்ளும். ஆயினும் இதன் அளவு உடலில் மிகவும் சொற்பமாகவே ( few) இருக்கும்.


Omega 3
Omega 3 rich products 


                 எனவே, உணவு வழி தான் ஒமோகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் அதனின் மூன்று அமிலங்களையும் [ ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் (Alphalionlenic Acid), இகோசாபென்டயினோயிக் அமிலம் (Eicosapentanoic Acid) மற்றும் டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் (Docosahexaenoic Acid) ] பெற முடியும்.

                 ஒவ்வொரு நாளைக்கு இளம் வயதினருக்கு சுமார் 1.6 கிராம் ஒமோகா ஃபேட்டி ஆசிட் தேவைப் படும். சும்மர் 100 கிராம் நெய், மீன், காலிஃபிளவர் போன்ற பொருட்களில் இது உண்டு. மேலும், தாவரங்களிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய்களிலும் இது செறிவாக உள்ளது. இதயம், மூளை, இரத்த நாளங்கள், நுரையீரல் மற்றும் நோய் தடுப்பாற்றல் (immune) மண்டலம் முதலியவை சரியாக இயங்க இந்தக் கொழுப்புப் பொருள் தேவைப் படும்.

ஒமோகா 3 ஃபேட்டி (Omega 3 Fatty Acids) ஆசிட்களில் உள்ள அமிலங்களை (Acids) பற்றி!

ஆல்ஃபாலினோலெனிக் அமிலம்: (Alphalionlenic Acid)

- இதனின் சூத்திரம் (Formula) சி18 எச் 30 ஒ 2 (C18H30O2) ஆகும்.

- இதனின் மோலார் நிறை (Molar mass) 278.43 கி/மோல் (g/mol) ஆகும்.

- இதனின் அடர்த்தி (Density) 0.9164 கி/செ.மீ (kg/cm)^ 3 ஆகும்.

- இது பாலி நிலையற்றக் கொழுப்பு (Poly Unsaturated Fats) மற்றும் அத்தியாவசிய கொழுப்பு ஆகும்.

- இதனின் ஐபக் பெயர் (IUPAC name) ஆக்டாடெகா - 9, 12 ,15 -ட்ரைனோயிக் அமிலம் ( octadeca -9, 12, 15- trienoic acid) ஆகும்.

இகோசாபென்யினோயிக் அமிலம்: (Eicosapentaenoic acid)

- இதனின் சூத்திரம் (Formula) சி20 எச்30 ஒ2 (C20H30O2) ஆகும்.

- இதனின் மோலார் நிறை (molar mass) 302.451 கி/மோல். (g/mol)

- இதனின் உருகும் நிலை (melting point) -54℃ ஆகும்.

- இதனின் ஐபக் பெயர் (IUPAC name) ஈகோசா - 5, 8, 11, 14, 17 - பென்டெனோயிக் அமிலம் ( eicosa -5, 8, 11, 14, 17-pentenoic acid) ஆகும்.


Fresh and fired food
Fresh and Fired foods
Yummy....


டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம்: (docosahexaenoic acid)

- இதனின் சூத்திரம் (Formula) சி22 எச்32 ஒ2 (C22H32O2) ஆகும்.

- இதனின் மோலார் நிறை (molar mass) 328.488 கி/மோல் (g/mol) ஆகும்.

- இதனின் அடர்த்தி (density) 943 கி / மீ (kg/m)^3 ஆகும்.

- இதனின் உருகும் நிலை (melting point) -44℃ ஆகும்.

- இதனின் ஐபக் பெயர் டோகோசா - 4,7,10,13,16,19 - ஹெக்ளெனோயிக் அமிலம் (docosa -4, 7, 10, 13, 16 ,19 -hexaenoic acid) ஆகும்.

ஒமோகா 3 ஃபேட்டி ஆசிடை ஒமோகா 3 எண்ணெய்கள் எனவும் கூறுவார். இதில் ஆல்ஃபாலினோலெனிக் அமிலம், (ALA) இகோசாபென்டயினோயிக் அமிலம் (EPA) மற்றும் டொகோசாஹெக்சாயினோயிக் அமிலங்கள் (DHA) இருக்கும். அதனால், இதனை என் 3 கொழுப்பு ஆசிட் ( n 3 fatty acids) என்று கூறுவார்கள். இதனின் சூத்திரம் சி60 எச்92 ஒ6 (C60H92O6) ஆகும். இதனின் மூலக்கூறு எடை (Molecular weight) 909.4 கி (kg) ஆகும்.


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்:(Frequently asked questions)

1. லிப்பிடுகள் (Lipids) மற்றும் எஸ்டர் (Ester) பற்றி!

லிப்பிடுகள்: (Lipids)

- இது ஒரு வேதியியல் பொருள் ஆகும்.

- இது தண்ணீரில் கரையாது (insoluble) மற்றும் ஆல்கஹால், ஈதர் (ether) மற்றும் குளோரோஃபார்ம் (chloroform) போன்ற கலவைகளில் கரையும்.

- இவைகள் தான் உடலின் முக்கிய உயிர் வாழும் கூறுகள் (living cells) ஆகும்.

- லிப்பிடுகளில் ஃபேட்டி ஆசிட், நடுநிலை (neutral) கொழுப்பு, மெழுகு (wax) மற்றும் ஸ்டெராய்டுகள் (steroids) இருக்கும்.

- கிளிசரைடுகள் (Glycerides), கிளிசரைடுகள் அல்லாதவை (non Glycerides) மற்றும் சிக்கலான (complex) லிப்பிடுகள் போன்ற உயிர்க் மூலக்கூறுகள் இருக்கும்.


Lipids structure
Lipids structure


எஸ்டர்கள்: (ester)

- இவைகள் அமிலத்தில் இருந்து பெறப்பட்ட வேதியியல் கலவைகள் ஆகும். 

- அமிலத்தில் உள்ள ஹைட்ராக்ஸி (hydroxy) கூறுகளை அல்கோக்ஸி (alkoxy) கூறுகளாக மாற்றம் அடையும்.

- இதனை சுவைகள் (flavours), வாசனை திரவியங்கள் (perfumes), அழகுசாதன பொருட்கள் (cosmetic), பெயிண்டுகள் (paints) மற்றும் வார்னிஷ்களில் (varnishes) பயன் படுத்துவார்கள்.

- இவைகள் இனிப்பு வசனை (sweet smell) மற்றும் குறைந்த நிலையற்ற தன்மை (low volatility) கொண்டு இருக்கும். 

- அதனால், எஸ்டர்களை பிசின்கள் (resins) மற்றும் நெகிழிகளில் (plastics) பயன் படுத்துவார்கள்.


Ester molecular structure
Ester molecular structure 


2. ஒமோகா 3 ஃபேட்டி ஆசிட்களின் (Omega 3 fatty acids) ஆரோக்கியா நன்மைகள் (Health benefits) பற்றி!

- இரத்த ட்ரைகிளிசரைடுகள் (triglycerides) குறைக்கப்படும்.

- பெருங்குடல் (Colon), புரோஸ்டேட் (Prostate) மற்றும் மார்பாகப் புற்றுநோய் போன்ற புற்றுநோய் பாதிப்புகளை குறைக்கும்.

- கல்லீரல் (liver) உள்ள அதிகப்படியாக கொழுப்புகள் குறையும்.

- இது மனச்சோர்வு மற்றும் கவலை போன்றவற்றை உணர்ச்சிகளை குறைக்க உதவும்.

- இது அழற்சி (inflammation) மற்றும் முடக்கு வாதம் (rheumatoid arthritis) போன்ற நோய்களை குறைக்க முடியும்.


Fresh vegetables and fruits
Fresh vegetables and fruits
In a table.....


- மாதவிடாய் வலியை (menstural pain) குறைக்கும்.

- குழந்தைகளில் ஏற்படும் ஆஸ்துமாவை (Asthma) கட்டுப்படுத்தும்.

- இது குழந்தையின் ஆற்றல் (intelligence) மற்றும் கண் ஆரோக்கியத்தைத் தாய்ப்பால் (mother's milk) மூலம் அதிகப் படுத்த உதவும்.

- இது அல்சைமர் (Alzheimer's diseases) நோய் மற்றும் முதுமை போன்றவற்றை குறைக்க உதவும்.

3. கார்பாக்சிலிக் (Carboxylic Acid) அமிலம் பற்றி!

     கார்பாக்சிலிக் (Carboxylic) அமிலம் ஒரு கரிம (Organic) அமிலம் ஆகும். இதில் COOH கூறுகளுடன் அல்கோக்ஸி (alkoxy) குழு இணைந்து இருக்கும். இதில் அமினோ (amino) மற்றும் கொழுப்பு அமிலம் (fatty acids) இருக்கும். இதனை உயிரியல் பாலிமர்கள் (biopolymers), பூச்சு (coatings), பிசின் (adhesive) மற்றும் மருந்து பொருட்களில் பயன் படுத்தப் படும். 


Carboxylic acids
Carboxylic Acids rich foods


இதனை கரைப்பான்கள் (solvents), சேர்க்கைகள் (food additives), நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antimicrobials) மற்றும் சுவைகள் (Flavourings) போன்றவற்றில் பயன் படுத்த படுகிறது.

4. நுறுணமான (Aromatic compound ) கலவைகள் மற்றும் அலிபாடிக் (Aliphatic compound) கலவைகள் பற்றி!

      நுறுமண (Aromatic) கலவைகள் அல்லது பென்சீன் இணைந்து (Benzene conjugated) கலவைகள் என்று அழைப்பார்கள். இதில் இணைந்த பிளானர் மோந்திர (planar ring) அமைப்பை இடமாற்றம் செய்யப்பட்ட பை லெக்ட்ரான்கள் (pi electrons) மூலம் உருவாக்கப் படும். இதில் இரட்டை (double) மற்றும் ஒற்றை (single) பாண்ட்கள் (bonds) இடம் பெற்று இருக்கும். இதில் நிலையற்ற ஹைட்ரோகார்பன்கள் (hydrocarbons) மோந்திர அமைப்பில் (ring structure) இடம் பெற்று இருக்கும்.


Herbs leaves
Herbs..  
So fresh !!!


       அலிபாடிக் (Aliphatic) கலவைகள், சுழற்சி (cyclic) கலவைகள் வகை சேர்ந்தது ஆகும். இவைகள் நிறைவுற்றது ஹைட்ரோன்கள் (hydrocarbons) திறந்த சங்கிலி (chain structure) அமைப்பால் உருவானவை ஆகும். இவைகள் எரியக்கூடிய (flammable) தன்மையை கொண்ட கலவைகள் ஆகும். அதனால், அலிபாடிக் (Aliphatic) கலவைகளை எரிபொருளாக பயன் படுத்துவர்கள். மீத்தேன் (methane), எத்திலீன் (ethylene) மற்றும் திரவ இயற்கை எரிவாயு (liquefied natural gas) போன்றவை அலிபாடிக் (Aliphatic) கலவைகள் (compounds) ஆகும்.


Aromatic compound diagram
Aromatic compound diagram 



   

*Note: The images in this post may or may not relevant to the topics.



        

Post a Comment

2 Comments

  1. Is there any tablets or medicine for omega rich fats? Like iron rich tablets..
    Is there any Omega tablets?....
    :)

    ReplyDelete
    Replies
    1. Yes, There are Omega 3 fatty acids are available in tablets. Omega 3 fatty acid can reduce the risk of the heart disease. Tablets are been used along with diet to help lower levels of certain blood fat ( triglycerides) and help to raise the level of good cholesterol. Omega 3 fatty acids are more in brown colour eggs. So, always eat brown colour eggs

      Delete

Enter your comments :)