Ticker

6/recent/ticker-posts

Translate

செயற்கை நுண்ணிறவு மற்றும் இயந்திர வழி கற்றல் திறனுடைய சாதனங்களின் பயன்பாட்டால் நம் அறிவு சிந்தனைத் திறன் குறையுமா? | செயற்கை நுண்ணிறவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்றால் என்ன? | AI Time lapse | Neuralink | Dyson sphere | Quantum computers | Matrioshka brain |

              பரிணாம வளர்ச்சி, (evolution growth) இந்த உலகில் வாழும் உயிரினங்களை வாழ வைக்கும் செயல் ஆகும். பரிணாம மூலம் தான் ஒரு உயிரினம் பல காலக்  கட்டத்திற்கு வாழும் அளவுக்கு தன்மையை பெற்று இருக்கும். மனிதன் தான் இப்போது, இந்த உலகில் தலைச் சிறந்து வாழும் உயிரினம் ஆகும். மனிதனின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் (Researchers) மூலம் மனிதன் இந்த உலகில் தலைச் சிறந்து வாழ்கிறான். மற்ற உயிரினங்கள் போல இல்லாமல் மனிதன் தனக்கு தேவையானதை தானே தனது அறிவை பயன் படுத்திப் பெற்றுக் கொள்கிறான். தனது வேலைகளை எளிதில் முடிக்க இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகையான தொழில் நுட்பங்களை மனிதன் தனது அறிவை பயன்படுத்தி உருவாக்கி வருகிறான்.


AI and ML Robots
Artificial Intelligence and Machine Learning are the future of the human kind evolution.


                  இவ்வாறு இருக்கும் நிலையில், மனிதனின் அறிவால் (Human intelligence) உருவான மற்றொரு தொழில் நுட்பம் (technology) தான் செயற்கை நுண்ணிறவு (Artificial intelligence) மற்றும் இயந்திர வழி கற்றல் (Machine learning) ஆகும். ஆனால், செயற்கை நுண்ணிறவு (Artificial intelligence) மற்றும் இயந்திர வழி கற்றல் (Machine learning) போன்ற திறனுடைய (abilities) சாதனங்களின் (gadgets) பயன் பட்டால் நம் அறிவு சிந்தனைத் திறன் (thinking capacity) குறையுமா (decrease)? செயற்கை நுண்ணிறவு (Artificial intelligence) மற்றும் இயந்திர வழி கற்றல் (Machine learning) என்றால் என்ன?

செயற்கை நுண்ணிறவு (Artificial intelligence) மற்றும் இயந்திர வழி கற்றல் (Machine learning) என்றால் என்ன?

                  செயற்கை நுண்ணிறவு என்பது ஒரு தொழில் நுட்பம் மூலம் ஒரு இயந்திரத்திற்கு மனிதனின் நடத்தை செயற்கையாக உருவாக்க தூண்டும் (stimulate). இயந்திர வழி கற்றல் என்பது செயற்கை நுண்ணறிவின் துணைக் குழு (sun group) ஆகும். இதன் மூலம் ஒரு இயந்திரம் தானியங்கி (automatic) செயல்பட்டு பழைய தரவுகள் (data) மூலம் எவ்வித நிரலாக்கம் (programming) இன்றி செயல் படும் திறனைக் கொண்டது.


AI and ML Technology
Artificial Intelligence and Machine Learning are the next generation technologies.
Amazing!!


 இந்த செயற்கை நுண்ணிறவு பயன்பட்டின் மூலம் கணினிகள் இன்னும் பல மடங்கு வேகமாக செயல்களை எளிதில் செய்யும். இயந்திர வழி கற்றலின் சான்றகள் தான் நாம் அனைவரின் திறன்பேசிகள் உள்ள கூகுள் உதவியாளர் (google assistant) - ஆண்டாரய்டு (Android) திறன்பேசிகளுக்கு மற்றும் சீரி (Siri) - ஐ பேன்கள் (I Phone) திறன்பேசிகளுக்கு போன்றவை தான் ஆகும். மேலும், அமேசானின் (Amazon) அலெக்சா (Alexa) போன்றவை ஆகும். இந்த தொழில் நுட்பங்கள் மூலம் மனிதனின் வாழ்க்கை மிகவும் எளிதாய் மாறும்.

செயற்கை நுண்ணிறவு (Artificial intelligence) மற்றும் இயந்திர வழி கற்றல் (Machine learning) திறனுடையச் (ability) சாதனங்களின் (gadgets) பயன்பாட்டால் நம் அறிவு சிந்தனைத்திறன் (thinking capacity) குறையுமா (decrease)?

                     மனிதர்கள் உருவாக்கிய இயந்திரங்களும் பொறிமுறைகளும் (mechanisms) நுண்ணறிவுடன் செயற்படுவதே செயற்கை நுண்ணறிவு ஆகும். இது மனிதனைப் போலவோ அல்லது ஏதோவொரு உயிரினம் போலவோ செயற்பட வேண்டும் என்ற எந்தவொரு கட்டுப் பாடும் இல்லை.

                         நுண்ணறிவு என்பது பல்வேறு உயிரினங்களில் பல்வேறு வகைகளில் உள்ளது தான். ஆகவே, இது தான் நுண்ணிறவு என்று இதற்கு வரையறை (limit) கிடையாது.


Technology Usage
Technology only makes our life much more simpler.

                         தொலை நோக்கியும் (Telescope) நுண்ணோக்கியும் (Microscope) வந்த பிறகு நமது கண் பார்வையும், ஓலிப் பெருக்கியும் (Speakers) தொலைபேசியும் (Telephone) வந்த பிறகு நமது கேட்கும் திறனும் கெட்டு விட்டதா என்ன?

                          அதே சமயம் இவற்றை மிதமிஞ்சி (over use) பயன் படுத்தும் போது தான் பாதிப்பு ஏற்படும். அதே போல செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களின் வருகையால் நமது அறிவு அல்லது சிந்தனைக் கெடாது. முறையாக அனுமதிக்கப் பட்ட அளவில் டெக் சாதனங்களைப் பயன் படுத்தினால் இயற்கைக்கும் நமக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செயற்கை நுண்ணறிவின் எதிர்க் கால நேரமின்மை பற்றி! (Future Time lapse of Artificial intelligence)

                       செயற்கை சூப்பர் நுண்ணிறவு (Artificial super intelligence) தான் மனிதனின் கடைசி கண்டு பிடிப்பாக அமையும். செயற்கை நுண்ணிறவின் வளர்ச்சி மனித இனத்தை பெரிய அளவில் மாற்றும். ரோபோக்கள் மனிதனை விட வேகமாக நகரும் தன்மையை பத்து ஆண்டுக்குள் பெற்று விடும். மேலும், செயற்கை நுண்ணிறவு அற்ற மண்டலங்கள் (AI free zones) ஆறுபது ஆண்டுக்குள் உருவாக்க படும். மேலும், அதிக அளவில் ஆற்றல்கள் செயற்கை சூப்பர் நுண்ணிறவு சாதனங்களுக்காக மட்டுமே தொண்ணூறு ஆண்டுக்குள் பயன் படுத்த படும். மேலும், மனிதனின் உணர்வு விண்வெளிக்கு இருநூறு ஆண்டுக்குள் கடத்தப் படும். 2028 ஆம் ஆண்டில் மக்கள் செயற்கை நுண்ணிறவுடன் உரையாடல் செய்ய முடியும். சான்றாக கூகுளின் லாம்ப்டா (lambda) தற்போது உள்ள கூகுளின் தேடு பொறிக்கு (search engine) மாற்றாக அமையும். 


Time lapse of sky
Timelapse!!
Wow!!


                             மேலும், நரம்பு இணைப்பு (Neuralink) என்ற பரிசோதனை மூலம் மனிதனின் அறிவு ஆற்றலை அதிக படுத்த முடியும். இதன் மூலம் நுண்ணிறவு பெருக்கம், ஜூம் கேமரா (zooming camera) மற்றும் சுவை மாற்றிகள் நரம்பு இணைப்பு என்ற பரிசோதனையைச் செய்ய மூளையில் சிப் (chip) பயன் படுத்த படும். 2030 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம், நமக்கு அன்புக்குரியவர்கள் இறந்து போன பின்னர், அவர்களின் பதிவு செய்யப் பட்ட ஆடியோக்கள் மற்றும் காணொளிகள் மூலம் அவதாரங்களை (Avatars) உருவாக்க முடியும். இந்த அவதாரங்கள் செயற்கை நுண்ணிறவு மூலம் நம்மிடம் உரையாடல் மேற்க் கொள்ளும். மேலும், செயற்கை நுண்ணிறவுகள் வீழும் கண்ணாடியைக் (catch a falling glass) கூடப் பிடிக்கும் தன்மையைப் பெறும். பொருட்களின் இணையம் (Internet of things) பொருட்களின் செயற்கை நுண்ணிறவாக (A.I of things) மாற்றம் அடையும். மேலும், செயற்கை நுண்ணிறவு உடைய குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) மூலம் புதிய கண்டு பிடிப்புகள் நொடிகளில் பிரச்சனைகளை கணக்கிடும் திறனை பெற்று இருக்கும். இது மட்டுமின்றி, இந்த முறை மூலம் அணு (atomic) மற்றும் மூலக்கூறுகள் (molecular level) அளவில் தூண்டுதல் செய்ய முடியும்.

                                2040 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணிறவுக்கான பனி போர் தொடங்கும். செயற்கை நுண்ணிறவு மூலம் காணொளி விளையாட்டுகள் செயல் படும். ஐ. நா. சபை செயற்கை பொது நுண்ணிறவு பற்றிய விசாரணை நடத்தும். இதே நேரத்தில், செயற்கை நுண்ணிறவு தனக்கு மனிதனால் உருவாக்கப் பட்ட நிரலாக்கம் (programming), தானகவே தன்னை நிரலாக்கம் செய்து கொள்ளும். 2050 ஆம் ஆண்டில் செயற்கை பொது நுண்ணிறவு, (Artificial general intelligence) உலகளாவிய நெட்வொர்க் குவாண்டம் கணினியில் (global network of quantum computers) இருந்து வெளிப்படும். மனித இனம் தொழில் நுட்ப ஒருமையை அடையும். தொழில் நுட்பம் வளர்ச்சியை கட்டுப் படுத்த முடியாத நிலையை அடையும். செயற்கை பொது நுண்ணிறவு தன்னை விட ஆற்றல் மிக்க கணினிகளை உருவாக்கும்.


AI codes themselves
Artificial intelligence can think and act like humans.
Brilliant!!

 

                                   மனித மேன்மையான நுண்ணிறவு (Human superior intelligence) முடிவை அடையும். செயற்கை நுண்ணிறவு சமூகங்களை ஆளும். செயற்கை நுண்ணிறவு மனிதக் கட்டுப்பட்டை மீறும். செயற்கை சூப்பர் நுண்ணிறவு, செயற்கை பொது நுண்ணிறவை மூலம் உருவாக்கப் படும். இது மனித இனத்தை முந்தி (overtake) எடுக்கும். 2060 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணிறவு மனிதர்களிடம் பொய்களை கூறும் திறனைப் பெறும். மனித செயற்கை நுண்ணிறவு மோதல் ஏற்படும். 2070 ஆம் ஆண்டில், மனித இனம் செயற்கை சூப்பர் நுண்ணிறவின் பரவுதலை (spread) தடுக்க முடியாத நிலையை அடையும். 2080 ஆம் ஆண்டில், மனிதன் ஒரு மனிதனுக்கும் மற்றும் ரோபோ மனித உருவத்திற்கு இடையே வேறுபாடுகளை கண்டுப் பிடிக்காத நிலையை அடையும். செய்றகை நுண்ணிறவுக்கான தனிப்பட்ட சட்டங்கள் (special laws) உருவாக்கப் படும். 


AI in cosmos
AI has the capacity to spread across the cosmos in it's future!
Wow!!


                                    2090 ஆம் ஆண்டில் மனிதர்கள் தங்களது நேரத்தை மெய்நிகர் (virutal world) உலகத்தில் செலவிடுவார்கள். 2100 ஆம் ஆண்டில் சூப்பர் செயற்கை நுண்ணிறவுக்கு ஆற்றலின் விநியோகம் (energy supply) வரையறுக்கப் படும் (limited) நிலை ஏற்படும். 2130 ஆம் ஆண்டில் விண்கலத்தின் படை (fleet of aircraft) சூரிய ஆற்றலை அறுவடை செய்ய விண்வெளிக்கு அனுப்பப் படும். இது தான் டைசன் கோளம் (Dyson sphere) உருவாக்க அடித்தளம் ஆகும். 2160 ஆம் ஆண்டில் செயற்கை மேலான நுண்ணிறவு மனித உணர்வுகளை (consciousness) பதிவிறக்கம் செய்யும். முதல் மனித தன்மை மற்றும் செயற்கை நுண்ணிறவு கொண்ட கலப்பினம் (hybrid) விண்வெளிக்கு அனுப்பப் படும். செயற்கை நுண்ணிறவு மனிதனாக மாறும். மனித இனம் செயற்கையான இனமாக மாறும். 2300 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணிறவு கலப்பினம் ரோபோக்களுக்குள் செலுத்தப் படும். 2500 ஆம் ஆண்டில் டைசன் கோளம் சூரியனை சுற்றி வளைக்கும். இது சூப்பர் செயற்கை நுண்ணிறவின் உணர்வுக்கு தேவைப் படும் ஆற்றலை அளிக்கும். 3000 ஆம் ஆண்டில் செயற்கை சூப்பர் நுண்ணிறவு விரிவடையும். இது ஒரு கோளின் (planet) அளவுக்கு பெரிதாக விரிவு அடையும். இதனை தான் மெட்ரியோஷ்கா (Matrioshka) என்பர். மனித இனம் அண்டவியல் டிஜிட்டல் நாகரீகத்தை (cosmic digital civilization) அடையும். இது தான் செயற்கை நுண்ணிறவின் பரிணாம நிலை ஆகும். பரிணாமம் அடைந்த பிறகு, அதிக அளவில் ஆற்றல் தேவைப் படும். இதற்காக, பரிணாமம் அடைந்த செயற்கை நுண்ணிறவு விண்வெளி நேரத்தில் ஏற்படும் குளிர்ச்சி மற்றும் வெப்ப மூட்டும் போது ஏற்படும் அலைகளை (ripples) வைத்து ஆற்றலை உருவாக்கும். பரிணாமம் அடைந்த செயற்கை நுண்ணிறவு விண்வெளி நேர செயற்கை நுண்ணிறவாக (space time artificial intelligence) மாற்றம் அடைந்து, அண்டவியல் (cosmic) முழுவதும் பரவும்.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. நீயுரலீன்க் (Neuralink) பற்றி!

                       நீயுரலீன்க் என்பது எதிர்கால மூளை இடைமுகங்கள் (interfaces) உருவாக்கும் பரிசோதனை ஆகும். இது பக்கவாதம் (paralysis) உடைய மக்களுக்கு மிகவும் உதவும். இந்த தொழில் நுட்பம் மூலம் நமது திறன்களை அதிகரிக்க முடியும். இதன் மூலம், மனிதனின் மூளையை அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க முடியும்.


Neurons of brain
Neuralink can help the people with the disabilities.

 இது ஒரு நீயுர தொழில் நுட்பம் (Neurotechnology) நிறுவனம் ஆகும். இதனின் நிறுவனர்கள் எலோன் மாஸ்க் (Elon musk) மற்றும் இன்னும் சிலர் ஆவார். இந்த நிறுவனம் சமீபத்தில் பன்றியில் (pig) மற்றும் குரங்கில் (monkey) சிப் பொருத்தப்பட்டு பரிசோதனை செய்து உள்ளது. மேலும், இதனை மனிதனின் மூளையில் பொருத்தத் திட்டமிட்டு உள்ளனர்.

2. டைசன் கோளம் (Dyson sphere) பற்றி!

                         டைசன் கோளம் என்பது ஒரு அனுமானம் மெகா கட்டமைப்பு (hypothetical mega structure) ஆகும். இந்த கோளம் (sphere) ஒரு நட்சத்திரத்தை முழுவதும் சுற்றி இருக்கும். இதன் காரணமாக, டைசன் கோளம் பெரிய அளவில் சூரிய சக்தியைக் கைப்பற்றும் திறனை கொண்டது.


Dyson sphere surrounds star
Dyson Sphere surrounds a Star!
Hypothetical structure!




 இது தான், விண்வெளி பயணம் செய்யும் நாகரீகத்திற்கு (civilization) தேவைப்படும் ஆற்றலை அளிக்கும். இது ஒரு மாமத் பொறிமுறை (mammoth mechanisms) ஆகும். ஆனால், இது தத்துவார்த்த (therotical) விளக்கத்தில் தான் உள்ளது.

3. குனாட்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) பற்றி! 

                           குனாட்டம் கம்ப்யூட்டிங் என்பது குனாட்டம் நிலைகளை (Quantum states) வைத்து கணக்கீடும் கம்ப்யூட்டிங் வகை ஆகும். இதில், குனாட்டம் மேல்நிலை (super position), குறுக்கீடு (interference) மற்றும் சிக்கல்களால் (entanglement) மூலம் பல்வேறு கணக்கீடுகளை நிகழ்த்தும். 


Close view of Quantum computers
Close view of the Quantum computers!
Amazing!!


இந்த குனாட்டம் கம்ப்யூட்டிங், குனாட்டம் பொறிமுறையின் நிகழ்வு அடிப்படையில் செயல் படும். குனாட்டம் கம்ப்யூட்டிங் குவிட்ஸில் (qubits) உருவானது ஆகும். இதனின் கொள்கைகள் குனாட்டம் கோட்பாடு மற்றும் நவீன இயற்பியல் உள்ள பல பொருட்களின் நிலையின் நடத்தை அணுக்கள் (atomic) மற்றும் துணை அளவு அணுக்கள் (sub atomic) அளவில் ஆற்றலை கணக்கிடுதல் ஆகும்.

4. மாட்ரியோஷ்கா மூளை (Matrioshka brain) பற்றி!

                                 மாட்ரியோஷ்கா மூளை என்பது ஒரு அனுமானம் மெகா கட்டமைப்பு (hypothetical mega structure) ஆகும். இதனால், மகத்தான (immense) கணக்கீட்டு இயக்கப்படும். இதற்கான, ஆற்றலை டைசன் கோளம் (Dyson sphere) தான் அளிக்கும். இது ஒரு வகுப்பு பி விண்மீன் இயந்திரத்தின் (Class B stellar engine) சான்று ஆகும்


Matrioshka brain
Matrioshka brain is a brain size of a planet


இது தானகவே கோடிங் (coding) செய்து கொள்ளும், தன்னை உருவாக்கும் மற்றும் சூரிய மண்டலத்தின் அளவுக்கு விரிவாக்கம் செய்யும். இதனின் செயலாக்கத்தின் திறனுக்கு அளவே கிடையாது.


*Note: The images in this post may or may not relevant to the topics.

Post a Comment

0 Comments