உடல்நலம் (Health), இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கு தேவைப் படும் பொருள் ஆகும். ஏனெனில், ஒருவர்க்கு உடல் நலமாக இருந்தால் மட்டுமே பல்வேறு வகையான அன்றாட வாழ்க்கை (life) செயல்களை எளிதில் செய்ய முடியும். உடல்நலம் இன்றைய நவீன காலத்தில் (modern world) மிகவும் தேவைப் படும் பொருள் ஆகும். பல்வேறு வகையான நோய்களில் (diseases) இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு உடல்நலம் தேவைப் படுகிறது. உடல் நலத்தை நன்றாக வளர்க்க, பழங்கள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் (nutrients) நிறைந்த உணவு பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும், பல்வேறு வகையான உணவு பொருட்களை நாம் சாப்பிடுவதற்கு அதிக செலவு ஏற்படும். அது மட்டுமின்றி, நமக்கு தேவைப் படும் ஊட்டச்சத்துகளின் தினசரி அளவை அடைய பல கிலோக் கணக்கில் வரை உணவை எடுத்துக் கொள்ள நேரிடும்.
இவ்வாறு அதிகமாக உணவை எடுத்துக் கொண்டாலும், பல விளைவுகள் (effects) ஏற்படும். நமக்கு தேவைப் படும் ஊட்டச்சத்து அளவை அடைய நமக்கு உதவுவது தான் மாத்திரைகள் ஆகும்.
Golden tablets Wow! |
மாத்திரை (Tablets) என்றால் என்ன? மாத்திரையில் (Tablets) என்னென்ன வேதியியல் பொருட்கள் (chemical things it have) இருக்கும்? மாத்திரைகளை (Tablets) தொடர்ந்து உட்கொண்டு (regular intake) வந்தால், நாளடைவில் (After some days) அதனின் வீரியம் (power decrease) குறையுமா?
மாத்திரை (Tablets) என்றால் என்ன?
மாத்திரை (Tablets) என்பது ஒரு வகை உணவு தான். ஆனால், இயற்கையில் கிடைக்கும் உணவு போல் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கும். இதனை ஊட்டச்சத்து குறைந்தவர்கள் எடுத்து கொண்டால், இவர்களுக்கு தேவைப் படும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும்.
Tablets with thermometer placed on top of it ... |
ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும் என்பதற்காக, மாத்திரைகளை மட்டுமே உட்கொள்வது மிகவும் தவறான செயல் ஆகும். நோய் பதித்தவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே மாத்திரையை மருந்துவரின் பரிந்துரையின் (prescription) அடிப்படையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மாத்திரையில் (Tablets) என்னென்ன வேதியியல் பொருட்கள் இருக்கும் (chemical things it have)? மாத்திரைகளை (Tablets) தொடர்ந்து உட்கொண்டு (regular intake) வந்தால், நாளடையில் (after some days) அதனின் வீரியம் குறையுமா (power decrease))?
மாத்திரை மற்றும் எந்த ஒரு பொருளையும் உருவாக்க பூமியில் உள்ள வளங்களை மட்டுமே பயன்படுத்துவர். வேறு கிரகத்தில் இருந்து எடுத்து வரும் வளங்களை (minerals) வைத்து எல்லாம் மாத்திரைகளை உருவாக மாட்டார்கள். அதனால் அச்சம் கொள்ள வேண்டும். மாத்திரை உருவாக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல்வேறு தாவரங்களில் இருந்து எடுக்கப் படும் வளங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை வைத்து மாத்திரையை உருவாக்குவர்.
Tablets contains the nuritents that are taken from the plants and vegetables So no need to painic about tablets.... |
மாத்திரையின் மூலக் கூறுகள் (molecules) கனிமங்கள் மற்றும் சார்மங்கள் வைத்து தான் உருவாக்குவார்கள். அஸ்பேரின் (Aspirin) என்ற மாத்திரை வின்டர் பச்சை (Vinter green) எண்ணெயில் பல சுழற்சி (cycle) முறைகள் மூலம் தேவைப் படும் ஊட்டசத்தை எடுத்து மாத்திரையை உருவாக்குவார். மலேரியா (Malaria) என்ற நோய்க்கு மருந்தை ஒரு குறிப்பிட்ட செடியில் இருக்கும் தேவைப் படும் மூலக் கூறுகளை எடுத்து மாத்திரையை உருவாக்குவர். டியோக்ஸைசின் (Deoxycin) என்ற மருந்து நச்சு (toxin) பொருட்களில் இருந்து எடுத்த மூலக் கூறுகளை வைத்து மருந்தை தயரிப்பார்கள். பென்சிலின் என்ற மருந்து பென்சிலியம் நோட்டாட்டம் (Penicillium notatum) என்ற பூஞ்சையில் இருந்து தான் எடுக்கப் படுகிறது. இவ்வாறு, அனைத்து மருந்துகளும் இயற்கையில் இருந்து எடுத்து பின்னர், வேதியியல் முறைகள் மூலம் மாத்திரை தயரிக்க படுகிறது.
மருத்துவர் பரிந்துரைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரை எடுக்கும் போது, மருத்துவக் கண்காணிப்பும் அவசியம். இரைச்சல் இல்லாத கிராமத்திலிருந்து ஒருவர் சந்தடி மிகுந்த நகருக்கு வருகிறார் என வைத்துக் கொள்வோம். முதலில் நகரின் இரைச்சல் மற்றும் சந்தடி அவரைத் தொந்தரவு செய்யும். நாளடைவில் அந்த இரைச்சல் மற்றும் சந்தடி இவர்க்கு பழகி விடும். மிளகாயின் காரம், பாகற்காய் கசப்பு மற்றும் மிளகின் நெடி போன்றவையும் இப்படி தான். உடல் இந்த உணர்வுகளுக்குத் தகவமைந்து விடும்.
Always take medicine based on only Doctor prescription Don't take risks!!! |
அதே போல, தொடர்ந்து உண்ணும் மருந்தும் அதன் தாக்கத்தை இழந்து விடலாம். மருத்துக்குப் பழகிப் போன உடல், கூடுதல் அளவில் மருந்தை உட்கொண்டால் தான் அதே விளைவு ஏற்படும் என்கிற நிலை ஏற்படலாம். எனவே தான், ஒரே மருந்தைப் பல ஆண்டுகள் தொடர்ந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே அதனை தவிர்க்க மருந்தை மாற்றுவது அல்லது அதன் அளவை மாற்றுவது போன்ற வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
மாத்திரையின் (Tablets) நோய் எதிர்ப்பு சக்தி (Immune system) பற்றி!
இந்தியாவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) மற்ற ஐரோப்பிய நாடுகளை (European countries) ஒப்பிடும் போது எளிதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மக்களால் வாங்க முடியும். மருத்துவர்களின் பரிந்துரை இன்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வங்க முடியும். சான்றாக அமோக்ஸிசிலின் (Amoxycillin) என்ற மாத்திரையை எடுத்துக் கொள்ளும். இதில் எர் எக்ஸ் (Rx mark) என்ற குறி இடம் பெற்று இருக்கும். மேலும், இந்த மாத்திரையின் அட்டையில் வலது பக்கத்தில் சிவப்பு கோடு (red mark) இடம் பெற்று இருக்கும். இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை படியே வங்க வேண்டும். ஆனால், பலர் இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இன்றி வங்கி பயன்படுத்தி வருகின்றனர்கள். இது மிகவும் ஆபத்தான செயல் ஆகும்.
Rx is a Latin word It's meaning is to take with doctor prescription |
நுண்ணுயிர்கள் எதிர்ப்பிகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஒரே தன்மையை கொண்டு தான் இருக்கும். இந்த நுண்ணுயிர்கள் எதிர்ப்பிகள் பாக்டீரியா (Bacteria) போன்ற நுண்ணுயிர்கள் ஏற்படுத்தும் நோய்களை தடுக்க உதவும். இது பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் அல்லது பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றலை கொண்டது.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immune system) என்ற அமைப்பு இயற்கையிலேயே இடம் பெற்று இருக்கும். இதற்கு உடலில் உள்ள டி செல் மற்றும் பி செல் (T cell and B cell) தான் உதவும். பாக்டீரியா உணவு, காற்று மற்றும் தண்ணீர் மூலம் பரவும். பிறப்பிலேயே உள்ளர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி (Innate immunity) இடம் பெற்று இருக்கும். ஆனால், பாக்டீரியா எளிதில் இதனை தகர்க்கும் (break it). பாக்டீரியா ஆன்டிஜெனை (antigen) வெளியிடும். டி செல் மற்றும் பி செல் பாக்டீரியாவின் தகவல்களை சேகரிக்கும். இதனை நுண்ணுயிர் எதிர்ப்பிக்களுக்கு பரிமாற்றம் செய்யும்.
முயன்று பற்ற நோய் எதிர்ப்பு சக்தி (Acquired immunity), நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தமது நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பலப் படுத்த உதவும்.
பாக்டீரியா (Bacteria) மற்றும் மாத்திரையை (Tablets) வைத்து ஒரு பரிசோதனை (experiment) பற்றி!
நாம் ஒரு பெட்ரி டிஷ்யை (petri dish) வளர்ப்பு ஊடகத்துடன் எடுத்துக் கொள்ளும். 1 கிராம் மண்ணை 50 மி.லி நீர்த்த (dilution) செய்வோம். இதனை 10^-10 வரை நீர்த்த செய்வோம். இதில் 0.1 மி.லி எடுத்து டிஷ்லில் வைப்பர்கள். இதன் மேல் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்ற மாத்திரையை வைத்தால், இந்த மாத்திரையை சுற்றி சில ஆரங்கள் (radii) பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். இதே மண்ணை மற்றொரு டிஷ்யில் வைத்து, இதே மாத்திரை வைத்தால், இதனின் ஆரம் பரப்பளவு (area) குறையும். இதனை மீண்டும் மீண்டும் செய்தால் மாத்திரையின் ஆற்றல் (power) இழந்து போய் விடும்.
Bacteria grown in a petri dish |
இதற்கு காரணம், பாக்டீரியா நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிராக வளர்ச்சி அடைவது தான். இதனை எதிர்ப்பு பாக்டீரியா என்பர்.
அதனால், ஒரே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மாத்திரையை அதிகமாக பயன்படுத்தினால் இதனின் ஆற்றல் குறைந்து விடும். சான்றாக, 1961 ஆம் ஆண்டு மெதிசிலின் (methicillin) என்ற மாத்திரையை ஸ்டேஃபிளோகோகள் ஆரியஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியாவுக்கு எதிராக அதிகம் பயன் படுத்தியதால் இந்த பாக்டீரியா எம். எர். எஸ். எ (MRSA) என்ற எதிர்ப்பு பாக்டீரியாவாக (resistant bacteria) மாற்றம் அடைந்து விட்டது.
அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)
1. எர்.டி.எ (RDA) (தேவையான தினசரி கொடுப்பனவு) (Requried daily allowance) பற்றி!
எர்.டி.எ (RDA) வின் விரிவாக்கம் தேவையான தினசரி கொடுப்பனவு (Required daily allowance) ஆகும். இதனை உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் இந்தியா அதிகார ஆணையம் (Food safety and standards authority of India) (FSSAI) வெளியிட்டு உள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி, ஒரு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளைக்கு தேவைப் படும் ஊட்டச்சத்துகள்:
Always take sufficient nutrition food For a Healthy life!! |
வைட்டமின் டி (Vitamin D) - 400 ஐ.யு,
வைட்டமின் இ (E)- 7.5 முதல் 10 மி.கி வரை,
வைட்டமின் கே (K) - 55 மீயு.கி,
பயோட்டின் (Biotin) - 30 மீயு.கி,
பேண்டோதெனிக் அமிலம் (Pantothenic acid) - 5 மி.கி,
குளேரைடு (chloride)- 1800 முதல் 2300 மி.கி வரை,
குரோமியம் (Chromium) - 50 மீயு.கி,
தாமிரம் (copper) - 1.7 மி.கி,
கருமயிலம் (Iodine) - 150 மீயு.கி,
மாங்கனீசு (Manganese) - 4 மி.கி,
மாலிப்டினம் (Molybdenum) - 45 மீயு.கி,
பாஸ்பரஸ் (Phosphorus) - 600 மி.கி,
பொட்டாசியம் (Potassium) - 3750 மி.கி,
செலினியம் (Selenium) - 40 மீயு.கி,
சோடியம் (Sodium) - 2100 மி.கி,
வைட்டமின் எ (A) - 1 மீயு.கி,
ஃபோலிக் அமிலம் (Folic acid) - 1 மீயு.கி,
ஹிஸ்டைடின் (Histidine) - 12 மி.கி,
ஐசோலூசின் (Isoleucine) - 23 மி.கி,
லுசின் (Leucine) - 44 மி.கி,
லைசின் (Lysine) - 35 மி.கி,
மெத்தியோனைன் (Methionine) மற்றும் சிஸ்டைன் (Cysteine) - 18 மி.கி,
லைரோசின் (Tyrosine) மற்றும் பினாயில் அலனைன் (Phenylalanine) - 30 மி.கி,
திரியனின் (Threonine) - 18 மி.கி,
டிரிப்டோபன் (Tryptophan) - 4.8 மி.கி மற்றும்
வயலின் (Valine) - 29 மி.கி.
விரிவாக்கம்:
ஐ.யு - சர்வதேச அலகு (International unit)
மி.கி - மில்லி கிராம் (milli gram)
மீயு.கி - மைக்ரோ கிராம் (micro gram)
2. டி செல்கள் (T cell) மற்றும் பி செல்கள் (B cell) பற்றி!
முதன்மை லிம்பாய்டு திசுக்களில் (Primary lymphoid tissues) டி செல்கள் மற்றும் பி செல்களின் ஆரம்ப தலைமுறைகள் உருவாகும். இதனை டி மற்றும் பி லிம்போசைட்டுகள் என்பர்கள். இவைகள் எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ் (Thymus) பகுதிகளில் உருவாகும். இந்த இரண்டு செல்களும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நமது உடலில் இரண்டு வகையான நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த செல்கள் இருக்கும்.
View of T and B cells |
ஒன்று டி செல்கள் மற்றொன்று பி செல்கள் ஆகும். டி செல்கள் இரண்டு வகைப்படும் ஒன்று உதவியாளர் டி செல் மற்றொன்று கொலையளி டி செல் ஆகும். உதவியாளர் டி செல் பி செல்கள் உருவாக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தூண்டும். மேலும், கொலையளி (killer) டி செல்கள் நேரடியாக கருமி துகள்களை அழிக்கும்.
3. பென்சிலியம் கிரிஸேர்ஜெனம் (Penicillium chrysogenum) அறிவியல் வகைப்பாடு பற்றி!
பென்சிலியம் கிரிஸேர்ஜெனம் (Penicillium chrysogenum), பென்சிலியம் நோட்டாட்டம் (Penicillium notatum) எனவும் கூறுவார்கள். இவைகள் மிதமான மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் காணப்படும். இவ்வகை பூஞ்சைகள் உப்பு சார்ந்த உணவு பொருட்களில் காணப்படும்.
Penicillium grown on a tree trunk |
இதனின் அறிவியல் வகைப்பாடு:
இதனின் இராச்சியம் (kingdom) பூஞ்சை (Fungi) ஆகும்.
இதனின் பிரிவு (Division) அஸ்கோமிகோட்டா (Ascomycota) ஆகும்.
இதனின் வகுப்பு (Class) யூரோட்டியோமைசீட்ஸ் (Eurotiomycetes) ஆகும்.
இதனின் வரிசை (Order) யூரோட்டியேல்ஸ் (Eurotiales) ஆகும்.
இதனின் குடும்பம் (Family) ட்ரைகோகோமேசி (Trichocomaceae) ஆகும்.
இதனின் பேரினம் (Genus) பென்சிலியம் (Penicillium) ஆகும்.
இதனின் இனம் (Species) பி. கிரிஸேர்ஜெனம் (P. chrysogenum) ஆகும்.
*Note: The images in this post may or may not relevant to the topics.
1 Comments
Does intaking tablets only need doctor's prescription and not for the tonics?
ReplyDeleteDoes the intake of tonics also need doctor's prescription?
Enter your comments :)