Ticker

6/recent/ticker-posts

Translate

சில வகை எறும்புகளை நாம் துன்படுத்தினால், அவைகள் நம்மை கடிக்கின்றன. சில வகை எறும்புகள் நம்மை கடிப்பதில்லை. அது ஏன்? | எறும்புகள் என்றால் என்ன? | Ant Species types | Ant Colony | Pheromones | Wasp | Ant scientific classification |

              எறும்புகள் (Ants) தான் இந்த உலகில் (world) மிகவும் சுருசுருப்பாக (actively) வாழும் உயிரினம் (organisms) ஆகும். எறும்புகள் கூட்டமாக (colony) வாழும் பூச்சி (insect) வகை ஆகும். எறும்புகள் தேனீக்கள் (bees) போலவே வாழும் பூச்சி வகை ஆகும். ஏனெனில், எறும்புகளும் தேனீக்கள் போலவே காலனி (colony) வாழும் பூச்சி வகை ஆகும். பூச்சிகள் தான் இந்த உலகில் அதிக அளவில் (large in numbers) வாழும் உயிரின வகை ஆகும். மேலும், எறும்புகளில் பல வகையான இனங்கள் (species) இந்த உலகில் வாழ்ந்து வருகிறது. எறும்புகள் தான் "ஒற்றுமையின் அடையாளம் (Shmbol for Unity) " என்பர்கள். ஏனெனில், எறும்புகள் ஒற்றுமையாக (unity) இருந்து பல்வேறு கடிமான செயல்களை (hard works) எளிதில் செய்து விடும். மேலும், நாம் எறும்புகளை துன்படுத்தினால (get attacked), சில வகையான எறும்புகள் நம்மை கடித்து (bite) விடும். இது தான் எறும்பின் தற்காப்பு முறை (Defense system) ஆகும்.


Ant climbing plant
Ant climbing a plant stem.
Close view shot!!
Wow!!!

 

              இவ்வாறு இருக்கும் நிலையில், சில வகையான (Some types) எறும்புகளை (Ants) நாம் துன்படுத்தினால் (get attacked), அவைகள் நம்மை கடிக்கின்றன (Bite). சில வகையான எறும்புகள் (Some types of ants) நம்மை கடிப்பதில்லை (Does not bite) அது ஏன்? எறும்புகள் என்றால் என்ன?

எறும்புகள் (Ants) என்றால் என்ன?

             எறும்புகளும் (Ant) பூச்சி (insect) வகையை சார்ந்த உயிரின வகை (organisms type) ஆகும். ஒரு எறும்பு புற்றில் (ant mound) ஓன்று அல்லது ஓன்றுக்கு மேற்பட்ட (one or more) ராணி எறும்புகள் (Queen ants) மட்டும் தான் இருக்கும். ராணி (Queen Ant) எறும்பு மட்டும் தான் எறும்பு புற்றில் (Ant mound) முட்டைகளை இடும் (lay eggs). எறும்புகள் தனது எடையை (weight) விட இருபது மடங்கு (twenty times) எடையைக் கூட தூக்கும் (lift) அளவுக்கு திறன் (ability) கொண்டவை ஆகும். எறும்புகளில் சுமார் 12,000 வகையான இனங்கள் (species) இந்த உலகில் உள்ளன. 


Ant heroic pose
Ant on top of a rock with a heroic pose.


ஏறத்தாழ (approximately) இந்த உலகில் வாழும் ஒவ்வொரு ஒரு மனிதனுக்கு (Human) ஒரு மில்லியன் எறும்புகள் (million ants) உள்ளன. எறும்புகள் எப்போதும் ஒருங்கிணைந்து (Integrated) தான் வேலைகளை (works) செய்யும். மேலும், எறும்புகள் கோடை காலத்தில் (Summer season) உணவு பொருட்களை (food products) சேமித்து (save) வைக்கும். பிறகு,மழை காலத்தில் (Rainy season) எறும்புகள் எவ்வித பிரச்சினைகள் (problems) இல்லாமல் வாழ முடியும். 

சில வகையான (Some types) எறும்புகளை (Ants) நாம் துன்படுத்தினால் (get attacked), அவைகள் நம்மை கடிக்கின்றன (Bite). சில வகையான எறும்புகள் (Some types of ants) நம்மை கடிப்பதில்லை (Does not bite). அது ஏன்?

                

Ants on palm
Ants on the palm of a hand.
Oops!!

சில எறும்புகள் (Ants) கடிக்கும் (bite) திறன் (ability) உள்ளவையாகவும், சில எறும்புகள் கடிக்கும் திறன் அற்றவையாகவும் (Does not bite) இருப்பதன் பின்னணியில் (reason behind) உள்ள  பரிணாம வளர்ச்சியை (evolution growth) விஞ்ஞானிகள் (researchers) கண்டுபிடித்து (identify) உள்ளனர். ஒரு காலத்தில் மனிதனுக்கும், குரங்களுக்கும் (Human and monkey) இருந்த பொது மூதாதையிடம் (common ancestor) இருந்து நவீன மனிதனும் (modern human), குரங்கு (monkey) வகைகளும் தோன்றின.


Wasp on wood
Wasp on top of a wood 
Sting!


                   அதுபோல, குளவிகளும் (Wasp), எறும்புகளும் (Ants) ஒரே பொது மூதாதையிடமிருந்து (common ancestor) தோன்றின. இரையைப் (prey) பிடிக்கவும் (catch), தன்னைப் பாதுகாத்துக் (protect) கொள்ளவுமே விஷம் (poison) கொண்ட கொடுக்குகளைக் (sting) குளவிகள் கொண்டுள்ளன. அதுபோல, எறும்பின் கடியும் (bite), வேட்டை (hunt) மற்றும் பாதுகாப்பு அமைப்பு (defense system) ஆகும்.

                    பண்டைய காலத்தில் (olden times) உருவான எறும்புகள் தனியாக வேட்டைக்குச் (hunting) சென்றன. தாம் பிடிக்கும் சிறு பூச்சிகளைக் கடிப்பதன் மூலம் செயலிழக்கச் (inactive) செய்து, கூட்டுக்குக் (colony) கொண்டு வரும். 


Ant face
Close view of ant face.
Amazing!!


                     சில வகை எறும்புகளின் வாய்ப் பகுதி (mouth part) வேறுபடும். அவற்றின் வாழ்க்கை (life), உணவு முறை, பாதுகாப்பு மற்றும் வேட்டை சார்ந்து, அவற்றின் வாய்ப் பகுதி பரிணாமம் (evolution) அடைந்துள்ளதைப் பாருங்கள்.

                     பரிணாமம் அடைந்த எறும்புகள், கூட்டமாக (swarms) உணவைத் தேடிச் செல்லும் உயிரியாக உருவாயின. மேலும், புதிதாக உருவெடுத்த எறும்புகள், சிறு சிறு பூச்சிகள்பூக்களின் (flower) தேன்  (honey) மற்றும் மடிந்த பூச்சிகளின் (death flower) உடலை உண்ணும் வகையாக மாறின. மனிதனில் வால் (tail) எப்படிக் காணாமல் போனதோ, அது போல சில வகை எறும்புகள் கொடுக்கை (sting) இழந்தன.

எறும்பு இனங்களின் வகைகள்: (Ants species types)

-நெருப்பு எறும்பு, (Fire Ant)

-மிர்மிசினே எறும்பு, (Myrmicinae Ant)

-கருப்பு தோட்ட எறும்பு, (Black garden ant)

-மெசர் பார்பரஸ்எ எறும்பு, (Messor barbarue ant)

-தச்சர் எறும்பு, (carpenter ant)

-பீடோல் எறும்பு, (Pheidole ant)

-தோட்டா எறும்பு, (Bullet ant)

-ஃபார்மிசினே எறும்பு, (Formicinae ant)

-பாரோ எறும்பு, (Pharaoh ant)

-மிர்மிகா ரப்ரா எறும்பு, (Myrmica subra ant)

-அட்டா எறும்பு, (Atta ant)

-மஞ்சள் புல்வெளி எறும்பு, (Yellow meadow ant)

-சிவப்பு மர எறும்பு, (Red wood ant)


Red wood ants
Swarms of Red wood ants.
Cluster!!



-டெட்ராமோரியம் இமிக்ராமஸ் எறும்பு, (Tetramorium immigrans ant)

-டேபினோமா மெலனோசெபலுவா எறும்பு, (Tapinoma melanocephalur ant)

-பொனெரினா எறும்பு, (Ponerinae ant)

-ஒகோபில்லா ஸ்மரக்டினா எறும்பு, (Oecophylla smaragdina ant)

-ஓடோன்டோமாச்சஸ் எறும்பு, (Odontomachus ant)

-சிவப்பு அறுவடை செய்பவர் எறும்பு, (Red harvestar ant)

-மோனோமோரியம் எறும்பு, (Monomorium ant)

-அர்ஜென்டினா எறும்பு, (Argentine ant)

-லேசியஸ் ஃபுலிகினோசஸ் எறும்பு, (Lasius fuliginosus ant)

-டோரிலஸ் எறும்பு, (Dorylus ant)

-மிர்மெக்சினே எறும்பு, (Myrmeciinae ant)

-ஜாக் குதிப்பவர் எறும்பு, (Jack jumper ant)

-அர்மேனியா எறும்பு, (Armania ant)

-இறைச்சி எறும்பு, (Meat ant)

-குட்டி கருப்பு எறும்பு, (Little black ant)


Little black ant
Little black ant on yellow flower.
Black + yellow = Blacow :)


-மின்சார எறும்பு, (Electric ant)

-டினோபோனேரா எறும்பு, (Dinoponera ant)

-மைர்மேசியா எறும்பு, (Myrmecia ant)

-நிலத்தடி எறும்பு, (subterranean ant)

-டேபினோமா செசியில் எறும்பு, (Tapinoma sessile ant)

-சஹாரன் வெள்ளி எறும்பு, (Saharan silver ant)

-தூதுவர் எறும்பு, (Messor ant)

-மாபெரும் காட்டு எறும்பு, (Giant forest ant)

-எசிடன் புர்செல்லி எறும்பு, (Eciton burchelli ant)

-டைட்டானோமைர்மா எறும்பு, (Titanomyrma ant)

-கேர்பரா பலவகை எறும்பு, (Carebara diversa ant)

-பிராச்சிமிர்மெக்ஸ் எறும்பு, (Brachymyrmex ant)

-லேசியஸ் னோக்கலாடாஸ் எறும்பு, (Lasius neglectus ant)

-மஞ்சள் பித்துப்பிடித்த எறும்பு, (yellow crazy ant)

-பொனேரா எறும்பு, (Ponera ant)

-ஃபார்மிகா எறும்பு, (Formica ant)

-நீண்ட கொம்பு பித்துப்பிடித்த எறும்பு, (longhorn crazy ant)

-தகனம் செய்பவர் எறும்பு, (crematograster ant)

-மிர்மெகோசைஸ்டு எறும்பு, (Myrmecocystus ant)

-லேசியஸ் எறும்பு, (lasius ant)

-ஓகெடெல்லுஸ் பளபளப்பான எறும்பு, (ochetellus glaber ant)

-ஹைடோனமர்மெசின் எறும்பு (Haidomyrmecin ant) மற்றும்

-ஹார்பெக்னாதோஸ் வெனட்டர் (Harpegnathos senator ant) எறும்பு.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. எறும்பு காலனி (Ant colony) பற்றி!

                எறும்பு காலனியின் (Ant colony) வாழ்க்கை சூழற்சி (life cycle): 

இனச்சேர்க்கை (Mating) -> அடித்தளம் (Foundation) -> வளர்ச்சி (Growth) -> இனப்பெருக்கம். (Reproduction)

எறும்பு காலனியில் ஒன்று அல்லது ஓன்றுக்கு மேற்பட்ட (one or more) முட்டை இடும் ராணி எறும்புகள் (egg laying Queen ants) இருக்கும். மேலும், மலட்டு (sterile) தொழிலாளி பெண் (female worker ant) எறும்பு இருக்கும் மற்றும் பாலியல் ஆண் எறும்பு (sexual male ant) இருக்கும். 


Ant colony mound
Ant mound
Top view!
Wow!


எறும்பின் வாழ்க்கை சூழற்சி: (Ant's life cycle)

முட்டைகள் (Eggs) -> லார்வாக்கள் (Larvae) -> பியூபா (Pupa) -> எறும்பு. (Ant)

தொழிலாளி பெண் எறும்பு, ராணி எறும்பு மற்றும் பாலியல் ஆண் எறும்பு ஆகிய மூன்றும் இந்த வாழ்க்கை சூழற்சி தான் பின்பற்றும். பிறகு, புதிய எறும்பு காலனியை உருவாக்க (establish) எறும்புகள் வேறு இடத்தைத் தேடிச் செல்லும். இதற்காக, பாலியல் சிறகுகள் (sexual winged ants) கொண்ட எறும்புகள் திரளாக (swarms) பறப்பட்டு, (depart) புதிய இடத்தில் புதிய எறும்பு காலனியை உருவாக்கும். 

2. எறும்புகள் (Ants) எவ்வாறு தொடர்புக் கொள்ளும்? (How does it communicates)

                  எறும்புகள் (Ants) ஓன்றுக்கு ஓன்று பெரோமோன்கள் (pheromones) மூலம் தொடர்புக் கொள்ளும். (Communicates) பெரோமோன்கள் என்பது ஹார்மோன்கள் (hormones) போன்ற வேதியியல் பொருள் (chemical substance) ஆகும். இது எறும்பின் உடலுக்கு வெளியே (outside the body) சுரக்கப் படும் (secreted).


Pheromones structure
Pheromones molecular structure.
Wow!


 இந்த பெரோமோன்கள், எச்சரிக்கை (warnings) மற்றும் உணவு சமிக்ஞைகளை (food signals) பிற எறும்புகளுக்கு அளிக்கும். மேலும், பார்மிக் அமிலம் (Formic acid) வேட்டையாடுபவர்களின் (predators) ஆபத்து எச்சரிக்கை (danger warning) பிற எறும்புகளுக்கு தெரிய வைக்க உதவும். இது மட்டுமின்றி, எறும்புகள் ஆண்டெனாக்கள் (Antennae) மூலமாகவும் தொடர்புக் கொள்ளும். 

3. குளவிகள் (Wasps) பற்றி!

                 குளவிகளை (Wasp) பார்க்க எறும்பும் (Ant) மற்றும் தேனீயும் (Bee) சேர்த்து கலந்த (both combined) பூச்சி போல இருக்கும். மஞ்சள் ஜாக்கெட்டுகள் (yellow jackets) மற்றும் ஹார்னெட்டுகள் (hornets) ஆகியவை தான் குளவிகளின் அதிகம் (commonly found) காணப்படும் குளவி வகை ஆகும். 


Wasp hive
Wasp hive.
Looks like bee hive


இவைகளின் தொல்பொருள் பதிவு (fossil record) ஜுராசிக் காலத்தை (Jurassic period) சார்ந்தது ஆகும். இவைகள் எறும்புகள் மற்றும் தேனீக்கள் போல காலனி (colony life style) வாழ்க்கை முறையில் வாழும். இதற்கு கொடுக்கு (sting) தான் தற்காப்பு அமைப்பு (defense system) ஆகும். 

4. எறும்பின் (Ant) அறிவியல் வகைப்பாடு (Scientific classification) பற்றி!

எறும்பின் அறிவியல் வகைப்பாடு: (Ant's Scientific classification)


Ant on leaf
Ant on top of a leaf.


இராச்சியம் (kingdom): அனிமிலியா (Animalia)

பைலம் (Phylum): ஆர்த்ரோபோடா (Arthropoda)

வகுப்பு (Class): இன்சேக்டா (Insecta)

வரிசை (order): ஹைமனோப்டெரா (Hymenoptera)

இன்ஃப்ரா வரிசை (Infra order): ஆக்சுலேட்டா (Aculeata)

சூப்பர் குடும்பம் (super family): ஃபார்மிகாய்டியா (Formicoidea)

குடும்பம் (family): ஃபார்மிசிடே ,லாட்ரோயி 1809 (Formicidae, Latreille)

எறும்பு இனங்களில் (Ant species) 21 வகையான துணை குடும்பங்கள் (sub families) உள்ளன.

எறும்பின் அறிவியல் பெயர் (Ant's scientific name) ஃபார்மிசிட (Formicidae) ஆகும்.



*Note: The images in this post may or may not relevant to the topics.

                

Post a Comment

1 Comments

  1. I saw many ants died, because they just fell into a small bowl of water. Is Ants are bad swimmers? Also can Ants withstand hotness and coldness?

    ReplyDelete

Enter your comments :)