Ticker

6/recent/ticker-posts

Translate

தற்போதைய நவீன காலத்தில் மனிதன் பரிணாமம் வளர்ச்சி அடைகிறானா? | பரிணாமம் வளர்ச்சி என்றால் என்ன? | Darwin's Theory | Natural Selection | Neo Darwinism | Lactase Enzyme | Salmon fish | Scientific Classification | Normal Body Temperature |

                பரிணாமம் (evolution), இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு (organisms) தேவைப் படும் திறன் (ability) ஆகும். ஒரு உயிரினம் பரிணாமம் அடைந்தால் மட்டுமே, இந்த உலகில் உயிர் வாழ முடியும். சுற்றுச்சூழலுக்கு (environment) ஏற்ப உயிரினம் பரிணாமம் அடைந்தல் வேண்டும். மேலும், விலங்குகள் (animals) தனது உடல் உறுப்புகளை (body parts) பரிணாமம் அடைய செய்து, இந்த உலகில் பரிணாமம் அடைந்து வாழும். ஒவ்வொரு உயிரினமும் இந்த உலகில் பரிணாம வளர்ச்சி (evolution growth) அடைந்தால் மட்டுமே, எதிர் கால (future) பூமியின் சுற்றுச்சூழலின் நிலைக்கு ஏற்ப வாழ முடியும். இவ்வாறு, பரிணாம வளர்ச்சி அடைவது தான் ஒரு உயிரினத்தின் மிகவும் முக்கிய திறன் (ability) ஆகும். எனவே தான், இந்த உலகில் உள்ள சிறிய அளவு (small size) உயிரினத்தில் இருந்து பெரிய அளவு (large size) உயிரினம் வரை அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி அடைய முயற்சிகள் செய்யும்.


Image showing Modern Day Human Evolution
Image Showing Evolution of Human
Modern Day Evolution of Human Is the Development of Artificial Intelligence




                இவ்வாறு, இந்த உலகில் (world) உள்ள அனைத்து உயிரினங்களும் (organisms) பரிணாம வளர்ச்சி (evolution growth) அடைய விரும்பும் (interest) மற்றும் பரிணாம வளர்ச்சி மட்டுமே ஒரு உயிரினத்தை (organisms) இந்த உலகில் வாழ (live) வைக்க உதவும் (help). இப்படி இருக்கும் நிலையில் தற்போதைய (nowadays) நவீன காலத்தில் (modern times), மனிதன் (Human) பரிணாம வளர்ச்சி அடைகிறானா? பரிணாம வளர்ச்சி (evolution growth) என்றால் என்ன?


பரிணாம வளர்ச்சி (Evolution growth) என்றால் என்ன?

                  பரிணாம வளர்ச்சி (Evolution growth) என்பது ஒரு உயிரினத்தில் (organisms) ஏற்படும் பரம்பரையாகப் (heritable) பெறத்தக்க மாற்றங்கள் (changes) ஆகும். இந்த மாற்றங்களின் காரணமாக ஒரு உயிரினத்தை சேர்ந்த (related) மொத்த இனங்களும் (species) மாற்றங்கள் அடையும். இந்த பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு தலைமுறையில் (one generation) இருந்து மற்றொரு தலைமுறைக்கு (another generation) பரிமாற்றம் (transfer) அடையும்.


Evolution growth benefits
Evolution growth is one of the basic necessity of all living organisms in the world


 இதனை தான் பரிணாம வளர்ச்சி (Evolution growth) என்பர். பரிணாம வளர்ச்சி என்ற செயல் (action), பூமியில் (earth) உயிரினங்கள் தோன்றிய (origin) காலத்தில் இருந்து நடை பெற்று வரும் செயல் ஆகும்.

தற்போதைய (Nowadays) நவீன காலத்தில் (modern times), மனிதன் (Human) இப்போதும் பரிணாம வளர்ச்சி (Evolution growth) அடைகிறானா?

                  எல்லா விலங்குகள் போலவே மனிதனிடமும் பரிணாம வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக் (centuries) கிருமி (germs) நோய்த் தடுப்பில் (Immunization) நாம் கணிசமான வெற்றி கண்டுள்ள நிலையில் நமது உடலின் சராசரி வெப்பம் (normal body temperature) குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் (Researchers)  கருதுகின்றனர். 1850களில் சராசரி உடல் வெப்பம் (Normal body temperature) 98.6°F இருந்ததை "சாதாரண உடல் வெப்ப நிலையாகக்" கருதினார்கள். ஆனால் தற்போது தடுப்பூசி (Vaccine) மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotics) போன்ற மருந்துகளின் (medicines) பயன்பட்டால் நம்மைத் தாக்கும் கிருமிகளின் (germs) அளவு குறைந்துள்ளது. எனவே தான், சராசரி உடல் வெப்ப நிலை 97.9°F வெப்ப நிலையாக குறைந்துள்ளது என்கிறார்கள். 


Person taking injection in his shoulder
Uses of the Antibiotics and Vaccines has helped the Humans to fight against Deadly diseases
Thanks for Science!.. 


                        குழந்தைப் பருவத்தைத் (children stage) தாண்டிய பிறகு மனிதனைத் தவிர வேறெந்த விலங்கும் பால் (milk) பருகுவதில்லை. மாடுகளின் (cows) பாலை மனிதர்கள் பருகும் (drink) பழக்கம் வந்த பின்னர் பாலின் லாக்டோசை ஜீரணிக்கும் மரபணு (lactase enzyme gene) மாற்றம் ஏற்பட்டு உலகெங்கும் மனிதர்களிடையே பரவியுள்ளது.


Cow's milk in a table
Cow's milk has become the daily dose of lactose for many of us.
 Moo moo......


                         காட்டில் வேட்டையாட (hunt) வேண்டிய அவசியம் இன்றைய மனிதனுக்கு இல்லை. எனவே தான், மனிதனின் எலும்பு (Bones) இலகுவாக மாறி வருகிறது என்கிறார்கள். இவ்வாறு தற்போதைய நவீன காலத்தில் (modern times) வாழும் (living) மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றான்.

டார்வினின் (Darwin) இயற்கை தேர்வு (Natural Selection) கோட்பாடு (Theory) பற்றி!

                         டார்வின் (Darwin) பரிணாமம் பற்றிய கோட்பாட்டை, இனங்களின் தோற்றம் (Origin of Species) மற்றும் இயற்கையின் தேர்வு (Natural Selection) மூலம் விளக்கினார் (Explain). இவர் தான் பொருத்தமான உயிரினம் (Fittest organisms) மட்டுமே இந்த உலகில் பிழைக்கும் (survive) மற்றும் தனது இனங்களின் (species) மக்கள் தொகையை (population) பெருக்கும் என்று கூறினார்.


Charles Darwin's Image
Charles Darwin - Father of Evolution


இவரின் கவனிப்புகள் (Observation):

- அதிக உற்பத்தி (Over production):

 அனைத்து வாழும் உயிரினங்களும் தனது இனங்களின் மக்கள் தொகையை அதிகரிக்கும் (increases). சான்றாக சால்மன் மீன் (Salmon fish) தனது வாழ்நாளில் 28 மில்லியன் முட்டைகளை (million eggs) இடும் (lay). அனைத்து முட்டைகளும் குஞ்சு பெரித்தால் (Hatch), கடல் (ocean) முழுவதும் சால்மன் மீன்களாக தான் இருக்கும். அதே சமயத்தில், யானை (Elephant) தனது வாழ்நாளில் (life span) 6 யானை குட்டிகளை மட்டுமே பெற்று எடுக்கும்.

- இருப்புக்கான போராட்டம் (Struggle for existence): 

இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் வாழுவதற்கு உணவு (food), வாழும் இடம் மற்றும் தண்ணீர் தேவைப்படும். இந்த வளங்கள் (resources) குறைய குறைய உயிரினங்களுக்கு இடையே போட்டி (competition) உருவாகும். இந்த உயிரினங்களுக்கு இடையே ஏற்படும் போட்டிகள் இரு வகைப்படும். அவை உள் குறிப்பிட்ட போட்டி (Intra specific competition) (ஒரே இனங்களுக்கு (same species) இடையே ஏற்படும் போட்டி) மற்றும் இடை குறிப்பிட்ட போட்டி (Inter specific competition) (வெவ்வேறு இனங்களுக்கு (different species) இடையே ஏற்படும் போட்டி). இந்த போட்டி ஏற்படுவதற்கு வானிலை வேறுபாடுகள் (climate changes), வெள்ளம் (Floods) மற்றும் வறட்சி (Drought) போன்ற சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களே காரணம் ஆகும்.


Affects of Climate Change
Climate change is the major reason for extinction of many species.
We all must unite and fight against the Climate change.
whatever it takes.... We must unite.


- உலகளாவியலில் ஏற்படும் மாறுபாடு நிகழ்வுகள் (Universal occurrence of variations): 

இந்த உலகில் எந்த இரு உயிரினங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒத்த இரட்டை (Twins) உயிரினங்களும் மாறுபாடு கொண்டு இருக்கும். மாறுபாடுகள் தான் ஒரு உயிரினத்தின் சந்ததியை (offsprings) உயிரினங்களுக்கு இடையே ஏற்படும் போட்டியை (competition) கடக்க உதவும். இந்த மாறுபாடுகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு (one generation to another generation) மாற்றம் அடையும்.

- இயற்கையின் தேர்வு மூலம் இனங்களின் தோற்றம் (Origin of species by Natural Selection):

 இயற்கை தான் இந்த உலகில் அதிக ஆற்றல் (energy) கொண்ட பொருள் ஆகும். ஒரு உயிரினம் (organisms) இந்த உலகில் இருப்பு (existence) இருக்க போராடும் போது, அதனின் விளைவு (result) பொருத்தமான உயிரினம் (Fittest organisms) மட்டுமே இந்த உலகில் உயிர் பிழைக்கும். 


Modern Evolution of Human
Many new discoveries and inventions has led a way for the Modern day Evolution of the Human


- நியோ டார்வினிசம் (Neo Darwinism):

 டார்வினின் (Darwin) பரிணாம விளக்கம் (Evolution explanation) மற்றும் இயற்கையின் தேர்வின் (Natural selection) விளக்கம் ஆகியவற்றை மாற்றி அமைத்ததே நியோ டார்வினிசம் (Neo Darwinism) எனப்படும். டார்வினுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய உண்மைகள் (facts) மற்றும் கண்டுபிடிப்புகள் (inventions) தான் டார்வினின் பரிணாம கோட்பாட்டை (theory) மாற்றி அமைக்க காரணமானது. இந்த நியோ டார்வினிசத்தை உருவாக்க வாலஸ் (Wallace), ஹென்ரிச் (Heinrich), ஹாக்கல் (Haeckel), வெய்ஸ்மேன் (Weizmann) மற்றும் மெண்டல் (Mendel) போன்ற ஆய்வாளர்கள் (Researchers) உதவினார். இந்த கோட்பாடு (theory) உயிரினங்களின் மரபணு அதிர்வெணில் (frequency of genes) ஏற்படும் மாற்றங்கள் "பிறழ்வு (mutation), தனிமைப் படுத்துதல் (isolation) மற்றும் இயற்கையின் தேர்வு (Natural selection)" போன்ற காரணங்களால் (reasons) ஏற்படுகிறது என நியோ டார்வினிசம் (Neo Darwinism) கூறுகிறது.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (Frequently asked questions):

1. லாக்டோசை ஜிரணிக்கு (Lactase enzyme) பற்றி!

               லாக்டோசை ஜிரணிக்கு (Lactase enzyme), லாக்டோஸ் (lactose) என்ற ஊட்டச்சத்தை (nutrients) வயிற்றில் (stomach) ஜிரணிக்க (digest) உதவும். லாக்டோஸ் என்ற ஊட்டச்சத்து பால் (milk) மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களில் (milk products) காணப்படும். உடலில் லாக்டோசை ஜிரணிக்குவின் குறைபாடு (deficiency) வயிற்றுப் போக்கு (Diarrhea) மற்றும் பிடிப்புகள் (Cramps) போன்ற நோய்கள் (diseases) ஏற்பட காரணம் ஆகும். இந்த லாக்டோசை ஜிரணிக்கு மனிதன் மற்றும் பாலூட்டிகளின் (mammals) சிறிய குடலில் (Small intestine) காணப்படும்.


Milk and milk products
Milk and Milk products contains large number of Lactose in it.
Yummy.......


 இந்த ஜிரணிக்கு உடலில் உள்ள லாக்டோஸ்சை உடைக்க (break) உதவும். லாக்டோஸ்சை பால் சர்க்கரை (milk sugar) எனவும் கூறுவர். இது டிசாக்கரைடு (Disaccharide) வகையை சார்ந்தது ஆகும். இதனின் உகந்த பி எச் (ph) 8 ஆகும். இதனின் உகந்த (optimal) வெப்ப நிலை 35℃ல் இருந்து 40℃ ஆகும். லாக்டோசை ஜிரணிக்கை டாக்டோசை புளோரிசின் ஹைட்ரோவேஸ் (Lactase phlorizin hydrolase) அல்லது ஏல் பி எச் (LPH) எனவும் கூறுவர். இதில் ஏல் சி டி (LCT) என்ற மரபணு இடம் பெற்று இருக்கும். இது லாக்டோசை மரபணுவை உருவாக்க உதவும்.

2. சாதாரண உடல் வெப்ப நிலையை (Normal Body temperature) பற்றி!

                 சாதாரண உடல் வெப்ப நிலை (Normal body temperature) ஒரு நாட்டு (country) மக்களில் இருந்து மற்றொரு நாட்டு மக்களுக்கு இடையே வேறுபாடுகள் (changes) அடையும்.


Wooden Thermometer
Wooden Thermometer
Wow!....


 பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிக்களில் (Scientific reseraches) மூலம் மனிதனின் சாதாரண உடல் வெப்ப நிலை, ஒவ்வொரு தசாப்தக்கும் (Decade) 0.05°F குறைந்து வருகிறது. மேலும், 98.6°F என்ற சாதாரண உடல் வெப்ப நிலை 1800 ஆம் ஆண்டில் இருந்து வந்தது ஆகும். 

3. சால்மன் மீன் (Salmon fish) பற்றி மற்றும் அதனின் அறிவியல் வகைப்பாடு (Scientific classification) பற்றி!

                   சால்மன் மீன் (Salmon fish), கதிர் துடுப்பு மீன் (ray finned fish) இனங்களை (species) சார்ந்து ஆகும். இந்த வகை மீன்கள் வடக்கு அட்லாண்டிக் கடல் (Northern Atlantic ocean) பகுதிகளில் அதிகம் காணப்படும். இந்த வகை மீன்கள் தங்களது முட்டைகளை நீர் ஓடைகள் (streams) மற்றும் ஆறுகளில் (rivers) இடும். 


Salmon fish jumping up in river
Salmon fish jumping up in the stream of water.
What a heroic pose!! 


இதனின் அறிவியல் வகைப்பாடு:

இராச்சியம் (Kingdom): அனிமிலைய (Animalia)

பைலம் (Phylum): முதுகெலுப்பித் தொகுதி (Chordata)

வகுப்பு (Class): ஆக்டினோப்டெரிஜி (Actinopterygii)

வரிசை (Order): சால்மோனிஃபார்ம்கழ் (Salmoniformes)

குடும்பம் (Family): சால்மோனிடே (Salmonidae)

பேரினம் (Genus): சால்மோ (Salmon)

இனங்கள் (Species): எஸ். சம்பளம் (S. Salar) (வின்னேயஸ் (Linnaeus) 1758) 

இதனின் அறிவியல் பெயர் (scientific name) சால்மோ எஸ். சம்பளம் (Salmo S. Salar) ஆகும்.

       

*Note: The images in this post may or may not relevant to the topics.

        

Post a Comment

1 Comments

  1. Could Artificial intelligence evolution overtake the humanity Or it co exists with the humanity?
    Is A.I a threat to humanity existence?

    ReplyDelete

Enter your comments :)