Ticker

6/recent/ticker-posts

Translate

கீரை, காய்கறிகள் சாப்பிட்டால் கண்ணாடி போட அவசியம் இருக்காது, என்பன போன்ற கருத்துக்கள் உண்மையா? | உடல் நலம் என்றால் என்ன? | Beta carotene | Abelmoschus esculentus | Folate | Lutein | Zeaxanthin | Cataract |

                உடல் நலம் (Health), இந்த உலகில் வாழும் (living) அனைத்து மக்களுக்கும் தேவைப் படும் மிக முக்கிய தேவை ஆகும். ஏனெனில், ஒருவரின் உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டுமே, இந்த உலகில் மகிழ்ச்சியாக (happily) வாழ முடியும். ஒரு செயல் அல்லது ஒரு வேலையை (work) செய்வதற்கு உடல் நலமாக இருந்தால் மட்டுமே நமது உடல் இந்த செயலை எளிதில் செய்ய முடியும். சான்றாக, நீங்கள் இந்த வலைதளப் பதிவு (blog post) படிக்க விரும்பினால், உங்களது கண் பார்வை மற்றும் மூளையின் (Brain) செயல் திறன் ஆகியவை உடல் நலமாக இருந்தால், நீங்கள் நன்றாக எவ்வித சிக்கல்களின்றி (challenges) எளிதில் படித்து அறிந்து கொள்வீர்கள். எனவே தான், உடல் நலம் மனிதனின் முக்கிய வரம் ஆகும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" (Life without Diseases is the Wealthiest Life) மற்றும் "உணவே மருந்து" (Food is Medicine) போன்ற பழமொழிகள் (Proverbs) உடல் நலம் பற்றி கூறுகிறது.


Nutrients rich vegetables
Nutrients rich vegetables.
Can it cure health problems?
Find it out in this post.... :)


                இவ்வாறு உணவே மருந்து (Food is Medicine) போன்ற பழமொழிகளுக்கு (Proverb) ஏற்ப உணவு பொருட்கள் (Food products) மூலம் உடலை நலமாக (Health) வைக்க முடியும். இவ்வாறு இருக்கும் நிலையில், கீரை (spinach), காய்கறிகள் (vegetables) சாப்பிட்டால் கண்ணாடி (spectacles) போட அவசியம் இருக்காது, என்பன போன்ற கருத்துக்கள் உண்மையா? உடல் நலம் என்றால் என்ன?

உடல் நலம் (Health) என்றால் என்ன?

              உடல் நலம் (Health) என்பது நமது உடலில் உள்ள அனைத்து உடல் உறுப்புகள் (body parts) நன்றாக எவ்வித கோலாறுகள் (defects) இன்றி செயல்படுவது உடல் நலம் என்பது ஆகும். எப்போதும் சுறுசுறுப்பாக (active) மற்றும் கழைப்பின்றி உடலை வைத்தால் நீண்ட காலம் (long time) வரை நம்மால் வாழ முடியும். எனவே தான், விளையாட்டு வீரர்கள் (sports players) தனது உடலை மிகவும் வலிமையாக (strong) மற்றும் ஆரோக்கியமாக (Healthy) வைத்து இருப்பார்கள். 


Woman doing yoga
A woman doing yoga.
To keep her body mentally and physically fit.



அப்போது தான், இவர்கள் விளையாட்டை (sport) எளிதில் விளையாடி வெற்றி பெறுவர்கள். மேலும், உடல் சுரு சுருப்பாக இருந்தால் மட்டுமே மனிதனின் மூளை (Brain) புத்துணர்வுடன் (Refreshing) வேலை செய்யும். இதனால், ஒருவர் ஒரு செயலை (task) புத்துணர்வுடன் எளிதில் செய்து விட முடியும். எனவே தான், இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் (animals) உடல் நலம் மிகவும் தேவைப் படும்.

கீரை (Spinach), காய்கறிகள் (vegetables) போன்ற உணவு பொருட்களை (Food products) சாப்பிட்டால் கண்ணாடி (spectacles) போட அவசியம் இருக்காது என்பன போன்ற கருத்துக்கள் உண்மையா?

               கண் பார்வை (Eye vision) மற்றும் உடலியக்கச் (Body movements) செயற்பாட்டுக்கு வைட்டமின் ஏ (Vitamin A) தேவை படும். உடலில் இது உருவாக பீட்டா கரோட்டீன் (Beta carotene), லுடீன் (Lutein) மற்றும் ஸியாக்ஸான்தின் (Zeaxanthin) ஆகிய ஊட்டச்சத்துகள் (Nutrients) தேவை படும். பல்வேறு காய்கனிகளில் இவை செறிவாக உள்ளன. இவற்றில் குறைபாடு (Deficiency) ஏற்பட்டால் கண் பார்வை பாதிக்கப் படும் (Affected). போதிய அளவில் (not sufficient) இவற்றை உட்கொள்ளவில்லை என்றால் வயதாகும் போது விழித்திரை அழற்சி (Inflammation of Retina), தசைச் சிதைவு (Muscle degeneration) மற்றும் கண்புரை (Cataract) ஏற்படலாம்.


Spectacles in table
Spectacles in black and white picture
So classic....!


                       சுமாராக ஒரு நாளைக்கு சுமார் 700 மைக்ரோகிராம் (micro gram) அளவில் பீட்டா கரோட்டீன் (beta carotene) தேவை படும். ஒரு கிண்ணம் (blow) சர்க்கரை வள்ளிக் கிழங்கில் (Sweet potato) 961 mcg, ஒரு கிண்ணம் கேரட்டில் (carrot) 538 mcg, ஒரு கிண்ணம் மஞ்சள் பரங்கிக்காயில் (Yellow pumpkin) 953 mcg உள்ளது. கீரையும் செறிவான வைட்டமின் ஏ கொண்ட காய்கறி ஆகும். 


Vegetables in basket
Vegetables in a wooden basket.
So yummy!!!...


                       லுடீன் (Lutein), ஸியாக்ஸான்தின் (Zeaxanthin) ஆகிய இரண்டு ஊட்டச்சத்தும் (nutrients) சுமாராக ஒரு நாளைக்கு ஆறில் இருந்து பன்னிரண்டு மில்லி கிராம் (milli gram) வரை தேவை படும். நன்கு சமைத்த (well cooked) ஒரு கிண்ணம் கீரையில் (spinach) 6.7 மில்லி கிராம், முளைகட்டிய பயறுகளில் (sprouts) ஒரு மில்லி கிராம், ஒரு முட்டையில் (Egg) 0.2 மில்லி கிராம், நூறு கிராம் பப்பாளி பழத்தில் (Papaya fruit) 23 மில்லி கிராம் உள்ளது.

                        மேலும், சில வகையான உணவு பொருட்களை சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி (knowledge grow) அடையும் என்பன போன்ற கருத்துகளுக்கு எவ்வித அறிவியல் பூர்வமான (scientific) ஆதாரங்கள் (evidences) இல்லை. சான்றாக, வெண்டைக்காய் (Ladies finger) சாப்பிட்டால் கணிதம் (mathematics) வரும் என்று சொல்கிறார்கள். காய்கறிக்கும் அறிவுக்கும் தொடர்பு உள்ளதா?


Mathematics
Mathematics is the Queen of Sciences.

                       இதற்கான விடை இல்லை என அறிவியல் கூறுகிறது. வெண்டைக் காயின் தாவரப் பெயர் Abelmoschus esculentus பருத்தியும் (cotton) செம்பருத்தியும் (Hibiscus) ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை ஆகும். ஃபோலேட் (Folate) என்படும் வைட்டமின் பி9 (B9), வைட்டமின் ஏ (A), பாஸ்பரஸ் (Phosphorus), மக்னீசியம் (Manganese) மற்றும் கால்சியம் (Calcium) போன்ற முக்கியச் சத்துக்கள் வெண்டைக் காயில் செறிவாக உள்ளன. எனவே தான், வெண்டைக் காய் முக்கியமான ஆரோக்கிய உணவு (Healthy food) என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், வெண்டைக்காய் சாப்பிட்டால் கணித அறிவு (Mathematics knowledge) கூடும் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. நாம் தான் முறையாக கணிதம் பயில (learn) வேண்டும். சரியான சரிவிகித உணவு (Balanced diet) உடல் மற்றும் மன நல வளர்ச்சிக்குத் தேவைப் படும்.


Ladies finger slicing
Slicing of the ladies finger
What a shot!!


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently Asked Questions)

1. பீட்டா கரோட்டின் (Beta carotene), லுடீன் (Lutein) மற்றும் ஸியாக்ஸான்தின் (Zeaxanthin) பற்றி!

பீட்டா கரோட்டின் (Beta carotene):

            பீட்டா கரோட்டின் (Beta carotene) என்பது ஒரு தாவர நிறமி (plant pigment) ஆகும். இது தாவரத்திற்கு தேவை படும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களை தரும். இந்த பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ வாக உடலில் மாற்றப் படும். இந்த பீட்டா கரோட்டின் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற (antioxidant) தன்மையைக் கொண்டது ஆகும். இந்த பீட்டா கரோட்டின் ஊட்டச்சத்து கேரட், கீரை, தக்காளி மற்றும் இனிப்பு உருளைக் கிழங்கு (Sweet potato) போன்ற உணவு பொருட்களில் காணப்படும்.

லுடீன் (Lutein):

             லுடீன் (Lutein) கரோட்டினாய்டுகளின் (carotenoids) வகையை சார்ந்தது ஆகும். லுடீன் ஊட்டச்சத்துகள் பச்சை இலையுடைய காய்கறிகளில் (green leafy vegetables) மட்டுமே காணப்படும். சான்றாக காலே (Kale), கீரை மற்றும் மஞ்சள் கேரட் (yellow carrot) போன்ற உணவு பொருட்களில் லுடீன் ஊட்டச்சத்து காணப்படும். 


Carotenoid foods
Carotenoid rich foods in a basket.
Wow!!!

ஸியாக்ஸான்தின் (Zeaxanthin):

              ஸியாக்ஸான்தின் (Zeaxanthin) தான் இயற்கை நிலையில் (nature state) காணப்படும் கரோட்டினாய்டு (carotenoid) வகை ஆகும். இந்த ஸியாக்ஸான்தின் ஊட்டச்சத்து (nutrients) தாவரங்கள் மற்றும் சில வகையான நுண்ணுயிர்களால் (micro organisms) ஒருங்கிணைக்கப்பட்டது (synthesized) ஆகும். இந்த ஸியாக்ஸான்தின் ஊட்டச்சத்து கீரை, காலே (Kale), பச்சை பட்டாணி (green peas) மற்றும் கொத்தமல்லி (parsley) போன்ற உணவு பொருட்களில் காணப்படும். 

2. விழித்திரை அழற்சி (Inflammation of Retina), தசைச் சிதைவு (Muscle degeneration) மற்றும் கண்புரை (Cataract) பற்றி!

விழித்திரை அழற்சி (Inflammation of Retina):

                விழித்திரை அழற்சி (Inflammation of Retina) ஏற்பட நோய் தொற்றுகள் (Infectious retinitis) தான் காரணம் ஆகும். இதனின் விளைவு (result) விழித்திரையில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் தொற்றுகள் ஏற்பட வைரஸ்கள் (viruses), பாக்டீரியாகள் (Bacteria), பூஞ்சைகள் (Fungus) மற்றும் ஒட்டுண்ணிகள் (parasites) தான் காரணம் (reason) ஆகும். இந்த நோய்க் கிருமிகள் நோயாளிகளின் (patients) வயது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தன்மையை (Immune power) வைத்தே பாதிப்பை (affect) ஏற்படுத்தும்.

தசைச் சிதைவு (Muscle degeneration):

                 தசைச் சிதைவு (Muscle degeneration) ஏற்பட உடலில் ஏற்படும் உடல் செயல்பாடு பற்றாக்குறை (deficiency) தான் காரணம் ஆகும். இந்த பற்றாக்குறை ஏற்பட காயம் (injury) அல்லது உடல் நலமின்மை (illness) தான் காரணம் ஆகும். ஒரு தசை (muscle) பல நாள்களுக்கு செயல் படமால் இருந்தால், நமது உடல் அந்த தசையை உடைத்து ஆற்றலை (energy) சேமிக்கும்.


Patient getting eye treatment
A patient getting treatment for her eye defects.


கண்புரை (Cataract):

                 கண்புரை (Cataract) என்பது சாதாரண கண்ணில் (normal eye) உள்ள தெளிவான லென்ஸில் (clear lens) ஏற்படும் மேகமூட்டம் (clouding) ஆகும். இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. இதில் மூன்று வகைகள் உள்ளன. அவை:

 -அணு ஸ்கெலரோடிக் கண்புரை (Nuclear Sclerotic Cataract),                    

 -புறணி கண்புரை (Cortical Cataract) மற்றும்                                     

 -பின்புற துணைக் கேப்கலர் கண்புரை (Posterior Subcapsular Cataract) ஆகும்.

3. Abelmoschus esculentus பற்றி!

                 (Abelmoschus esculentus) அபெல்மாஸ்காஸ் எஸ்குலெண்டஸை ஒக்ரா (okra) தாவரம் அல்லது வெண்டைக்காய் (Ladies finger) எனவும் கூறுவார்கள். இந்த தாவரத்தின் தோற்றம் (origin) மேற்கு ஆப்பிரிக்கா (West African), எத்தியோப்பியா (Ethiopian) மற்றும் தெற்கு ஆசியா (South Asia) பகுதியில் ஏற்பட்டது என வரலாறு கூறுகிறது.


Ladies finger dish
A well cooked ladies finger dish.
Very delicious!!


இதனின் அறிவியல் வகைப்பாடு (Scientific classification):

இராச்சியம் (Kingdom): பிலன்ட்டே (Plantae)

கிளாட் (Clade): டிராக்கியோபைட்டுஸ் (Tracheophytes)

கிளாட் (Clade): ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (Angiosperms)

கிளாட் (Clade): யுடிகடுஸ் (Eudicots)

கிளாட் (Clade): ரோசிடஸ் (Rosids)

வரிசை (Order): மால்வால்கள் (Malvales)

குடும்பம் (Family): மால்லேசிய (Malvaceae)

பேரினம் (Genus): அபெல்மாஸ்காஸ் (Abelmoschus)

இனங்கள் (Species): எஸ்குலெண்டஸ் (esculentus)

4. ஃபோலேட் (Folate) ஊட்டச்சத்து பற்றி!

                    ஃபோலேட் (Folate) ஊட்டச்சத்தை வைட்டமின் பி9 (vitamin B9) எனவும் கூறுவர்கள். ஃபோலிக் அமிலத்தை (Folic acid) ஃபோலேடாக நமது உடலில் மாற்றி (convert) ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும். இதனை உணவு நிரப்பியாக (Dietary supplementary) பயன் படுத்தலாம். 


Folic acid rich foods
Folic acid rich foods.
Yummy!!!!


இதனின் சூத்திரம் (Formula) சி19 எச்19 என்7 ஒ6 (C19 H19 N7 O6) ஆகும். இதனின் மோலார் நிறை (molar mass) 441.4 கி/மோ (g/mol) ஆகும். இதனின் உருகும் நிலை (melting point)  250℃ ஆகும். ப்ரோக்கோலி ( Broccoli), அஸ்பாரகள் (Asparagus), லெண்ணெய் பழம் (Avocado) மற்றும் கீரை (spinach) போன்ற உணவு பொருட்களில் ஃபோலேட் (Folate) ஊட்டச்சத்து காணப்படும்.



*Note: The images in this post may or may not relevant to the topics.

                

Post a Comment

1 Comments

  1. Is vegetables and fruits are good for health or the meat products are good for health? Which one is better?

    ReplyDelete

Enter your comments :)