Ticker

6/recent/ticker-posts

Translate

அச்சம் என்றால் என்ன? | அச்சங்கள் அல்லது பயங்கள் இந்த உலகில் என்னென்ன இருக்கின்றன? | Types of phobia | Hypothalamus | Physiology | Adrenal gland | Adrenaline |

              அச்சம் (fear), மக்களின் அனைவரது வாழ்க்கையிலும் (life) வரும் ஒரு இயற்கையான (nature) உணர்ச்சி (emotion) ஆகும். நாம் நம் சிறுவயதில் விலங்குகள் மற்றும் பூச்சிகளைக்  கண்டால் அச்சம் கொள்வோம். மேலும், உயரத்தை (height) மற்றும் இருட்டைக் (dark) கண்டால் அச்சம் கொள்கிறோம். மேலும், மேடையில் ஏறி பேச (stage fear) மற்றும் பலர் இருக்கும் போது தனது திறன்களை (ability) வெளிபடுவத்தில் அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் கொண்டவன் மனிதன் ஆவன். மேலும், பல்வேறு உயிரினங்கள் மற்ற உயிரினங்களைக் கண்டு அச்சம் கொள்வது இயற்கையே. இவ்வாறு, ஒவ்வொரு தனிப்பட்ட (individual) மனிதர்க்கும் தனிப்பட்ட அச்ச குணம் இருக்கும். நாம் அச்சம் கொள்ளும் போது, நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

Fear of Nature
Everybody in this world have their own phobia!
Mother Nature decides it...


            இவ்வாறு, அச்சங்கள் (fear) நிறைந்த உலகில் மனிதன் (Human) வாழ்ந்து (live) கொண்டு இருக்கிறான். அச்சம் (Phobia) என்றால் என்ன? அச்சங்கள் (fear) அல்லது பயங்கள் (phobia) இந்த உலகில் (world) என்னென்ன இருக்கின்றன?

அச்சம் என்றால் என்ன? (What is mean by phobia?)

           அச்சம் (phobia) என்பது மனித உடலில் ஏற்படும் சிரிப்பு (smile), அழுகை (cry), ஆனந்தம் (happy) போன்ற உணர்ச்சிக்கள் ஓன்று தான். அச்சம் என்பது நாம் ஒரு செயலை செய்யும் போது, இந்தச் செயலின் எதிர்வினை (reaction) என்னவாக இருக்குமோ பற்றி அச்சுவதே அச்சம் எனப்படும். அச்சம் உடல், மனம் (mental) மற்றும் உளவியல் (physiology) அளவில் இருக்கும். இதனை ஒரு மன ஆரோக்கிய (mental health) பாதிப்பு என்பர். அச்சம் உருவாக மூளை (brain) தான் காரணம் ஆகும். 

Women with shadow fear
A women fearing from her shadow
Art...


நாம் ஒரு பொருளை பார்த்து பயந்தால், மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் (Hypothalamus) என்ற பகுதி பல்வேறு வகையான வேதியியல் பொருட்களை சுரக்கும். இதன் காரணமாக, நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அச்சம் என்பது இயற்கையிலேயே மனிதன் கொண்ட உணர்ச்சி ஆகும். ஆனால், நாம் அடிக்கடி அச்சம் கொண்டால் நமது உடலில் பல்வேறு வகையான பாதிப்புகள் (effects) ஏற்படும் என ஆராய்ச்சி ஆய்வாளர்கள் (researchers) கூறுகிறார்கள்.

என்னென்ன அச்சங்கள் அல்லது பயங்கள் இந்த உலகில் இருக்கின்றன? (What are the fears or phobia are in this world?)

          இந்த உலகில் மனிதர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அச்சக் கோளாறுகள் (phobia) இனம் காணப்பட்டுள்ளன. பாம்பைக் (snake) கண்டால் பீதி (fear) கொள்வது மனிதர்களிடம் இயல்பு தான். ஆயினும் பாம்பின் புகைப்படம், கூண்டில் (cage) அடைக்கப்பட்ட பாம்பு முதலியவற்றை கண்டு அஞ்சுவது இயல்பற்ற (not normal state) பீதி அல்லவா?


Snake in cage
Snake in a cage
Hisssss...



          ஒன்றின் மீது அல்லது ஒரு சூழலின் (surrounding) மீது வழக்கத்திற்கு மாறான வெறுப்போ (hatred), அச்சமோ கொண்டிருத்தல் அச்சக் கோளாறு எனப்படுகிறது. திறந்த வெளியைக் (open space) கண்டால் அச்சம் கொள்வது, அயல் நாட்டவரைக் (foreign person) கண்டால் வெறுப்புக் கொள்வது, லிஃப்ட் (lift) போன்ற மூடிய இடங்களில் (closed space) இருக்கும் போது ஏற்படும் அச்சம், விமானத்தில் பறக்க அச்சம், விலங்குகள் பற்றிய பீதி ஆகியவை அச்சக் கோளாறுகளில் சில வகைகள் ஆகும்.


Man with fear
A men fearing of seeing something
What might be it?.....


            குறிப்பிட்ட விலங்கின் அசுத்தம் (waste), அயல் இனத்தவர் மீது பாகுபாடு போன்றவை பண்பாடு (culture) சார்ந்து எழுகின்றன. சுமார் 5 முதல் 9 வயது வரை சில அச்சக் கோளாறு ஏற்படுவது இயல்பு தான். பெரும்பாலும் இவை காலப் போக்கில் மறைந்து விடும். இளம் வயதில் ஏற்படும் அச்சக் கோளாறுகள் தான் பல ஆண்டு காலம் நீடித்து நிற்கும். சிலந்தியைக் (spider) கண்டு அச்சம் போன்றவை கவலைப்படக் (worry) கூடிய கோளாறுகள் (effects) இல்லை. ஆனால், அயல் பழக்க வழக்கங்களைக் கண்டு அச்சப்படுவது சமூகச் சிக்கல்களை உருவாக்கும். எனவே, மருத்துவ உதவியை நாட வேண்டும்.

அச்சக் கோளாறுகளின் (Phobia) வகைகள்: (Types)

1. ஒலியியல் (Acousticophobia) - சத்தத்தைக் கேட்டு பயம், (fear of noise)

2. அக்ரோபோபியா (Acrophobia) - உயர்த்தைக் கண்டால் பயம், (fear of height)

3. அகோராபோபியா (Agoraphobia) - திறந்த வெளிகளைக் குறித்து பயம், (fear of open space)

4. அம்நீசிபோபியா (Amnesiphobia) - மறதிநோய் குறித்து பயம், (fear of amensia)

5. அந்தோபோபியா (Authophobia) - பூக்களைக் குறித்து பயம், (fear of flowers)

6. அர்சோபோபியா (Arsophobia) - தீயைக் குறித்து பயம், (fear of fire)

7. தன்னியக்கவியல் (Autophobia) - தனிமையில் இருப்பதைப் பற்றிய பயம், (fear of being alone)

8. பிப்லியோபோபியா (Bibliophobia) - புத்தகங்களைக் குறித்து பயம், (fear of books)

9. புரோமிட்ரோபோபியா (Bromidrophobia) - உடல் துர்நாற்றம் குறித்து பயம், (fear of body smells)

10. கார்சினோபோபியா (Carcinophobia) - புற்றுநோய் குறித்து பயம், (fear of cancer)


Women fear
A woman feared of something
Siting lonely....


11. கினாஸ்ட்ரோபோபியா (Claustrophobia) - சுற்றிலும் மூடப்பட்ட இடத்தைக் குறித்து பயம், (fear of enclosed space)

12. சைபர்ஃபோபியா (Cyberphobia) - கணினிகள் குறித்து பயம், (fear of computer)

13. சினோபோபியா (Cynophobia) - நாய்களை குறித்து பயம், (fear of dogs)

14. டெமோபோபியா (Demophobia) - கூட்டம் குறித்து பயம், (fear of crowds)

15. ஈகோபோபியா (Ecophobia) - வீட்டை குறித்து பயம், (fear of home)

16. குளோசோபோபியா (Glossophobia) - பொது இடத்தில் பேசுவது குறித்து பயம், (fear of speaking in public place)

17. ஹைட்ரோபோபியா (hydrophobia) - நீர் குறித்து பயம், (fear of water)

18. மாஸ்டிகோபோபியா (mastiaophobia) - தண்டனை குறித்து பயம், (fear of punishment)

19. மெலோபோபியா (melophobia) - இசை குறித்து பயம், (fear of music)

20. நிக்டோபோபியா (nycetophobia) - இரவு அல்லது இருட்டு குறித்து பயம், (fear of night)

21. ஒகோபோபியா (ochophobia) - வாகனங்கள் குறித்து பயம், (fear of vehicles)

22. ஓனொரோபோபியா (oneirophobia) - கனவுகள் குறித்து பயம், (fear of dreams)

23. பாஸ்மோபோபியா (phasmophobia) - பேய்கள் குறித்து பயம், (fear of ghosts)


Ghost fear
Most of the people in the world have the fear of ghosts


24. புளூட்டோபோபியா (plutophobia) - சொத்து குறித்து பயம், (fear of wealth)

25. சைக்கோபோபியா (psychophobia) - மனதை குறித்து பயம், (fear of mind)

26. ராடியோபோபியா (radiophobia) - கதிர்வீச்சுக்களை குறித்து பயம், (fear of radiations)

27. ரூபோப்போபியா (rupophobia) - அலுக்குகள் குறித்து பயம், (fear of dirt)

28. ஸ்கோலியோனோபோபியா (Scolionophobia) - பள்ளியை குறித்து பயம், (fear of school)

29. சிட்டோபோபியா (sitophobia) - உணவை குறித்து பயம், (fear of food)

30. டகோபோபியா (Tachophobia) - வேகத்தை குறித்து பயம், (fear of speed)

31. தியோபோபியா (Theophobia) - கடவுளை குறித்து பயம், (fear of god)

32. சினோபோபியா (Xenophobia) - அந்தியர்களைப் பற்றிய பயம், (fear of strangers)

33. புகைப்படபோபியா (photophobia) - ஒளியை பற்றிய பயம், (fear of light)

34. டீமனோபோபியா (Daemonophobia) - பிசாசுகள் பற்றிய பயம், (fear of devil)

35. ஓம்புரோபோபியா (Ombrophobia) - மழை பற்றிய பயம், (fear of rain)

36. ஹலோபோபியா (Hylophobia) - காடுகள் பற்றிய பயம், (fear of forests)

37. ஹீலியோபோபியா (Heliophobia) - சூரியன் பற்றிய பயம், (fear of sun)

38. அராச்னோபோபியா (Arachnophobia) - சிலந்திகள் பற்றிய பயம், (fear of spiders)

39. குரோமெட்டாபோபியா (Chrometaphobia) - பணம் பற்றிய பயம், (fear of money)

40. ஆங்கிலோபோபியா (Anglophobia) - ஆங்கிலத்தை பற்றிய பயம், (fear of using english)

41. டிப்சோபோபியா (Dipsophobia) - மது அருந்துதல் பற்றிய பயம், (fear of drinking alcohol)

42. ஐயோபோபியா (Iophobia) - விஷம் பற்றிய பயம், (fear of poison)

43. கக்கரோஹாஃபிபோபியா (Kakorrhaphiophobia) - தோல்வியை பற்றிய பயம், (fear of failure)

44. என்டொமபோபியா (Entomophobia) - பூச்சிகள் பற்றிய பயம் மற்றும் (fear of insects)


Fear of clouds
Fear of Clouds is quite bad for normal people
Living in open spaces
   

45. நெஃபோபோபியா (nephophobia) - மேகங்கள் பற்றிய பயம். (Fear of clouds)

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. ஹைபோதாலமஸ் பற்றி! (About Hypothalamus!)

          ஹைபோதாலமஸ் (Hypothalamus) மூளையின் உள்ள சிறிய பகுதி ஆகும். இது மூளையின் போஸ் (base) பகுதியில் பிட்யூட்டரி சுரப்பிக்கு (pituitary gland) அருகில் அமைந்துள்ளது. இது பல செயல்பாடுகளில் ஒரு முக்கிய பங்கை பெறுகிறது. ஹைபோதாலமஸ் பல வகையான ஹார்மோன்களை (hormones) சுரக்கும். 


Brain parts
View of the brain parts
Back view

இந்த ஹார்மோன்கள் உடல் வெப்ப நிலை (temperature), தாகம் (thirst), பசி (appetite), எடை கட்டுப்பாடு (weight control), உணர்ச்சி, தூக்க சுழற்சி (sleep cycle), பால் இயக்கி (sex drive), குழந்தை பிறப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளை ஒழுங்கு படுத்தும். (Regulates) ஹைபோதாலமஸில் சிறிய அளவில் பல கருக்கள் (nuclei) இடம் பெற்று இருக்கும். இவைகள் வளர்சிதை மாற்றங்கள் (metabolic process) மற்றும் தன்னாட்சி நரம்பு அமைப்பு (autonomic nervous system) செயல்பாடுகளுக்கு மிகவும் உதவும். 


2. உடலியல் என்றால் என்ன? (What is physiology?)

               உடலியல் (physiology) என்பது வாழ்க்கையின் அறிவியல் (science of life) ஆகும். இது உயிரியலின் கிளை (biology branch) ஆகும். இதனின் நோக்கம் (aims) வாழும் பொருட்களை புரிந்துக் கொள்ளுதல் மற்றும் அடிப்படை செல் (basis of cell) செயல்பாடுகளை மூலக்கூறுகள் அளவில் (molecular level) புரிந்துக் கொள்ளுதல் ஆகும். உடலியல் ஐந்து வகைப்படும்.


Physiology art
Physiology is the study of science of the life

 அவை:

   -மருத்துவ (medical) உடலியல்,

   -விலங்கு (animal) உடலியல்,

   -தாவரம் (plant) உடலியல்,

   -செல் (Cell) உடலியல் மற்றும்

   -ஒப்பிட்டு (Comparative) உடலியல் ஆகும்.


3. அட்ரினலின் ஹார்மோன் பற்றி! (About Adrenaline hormone!)

        அடரினலின் (Adrenaline) என்ற ஹார்மோன் (hormone) அட்ரீனல் சுரப்பில் (Adrenal gland) இருந்து சுரக்கப் படும். இதனின் செயல்பாடு உடலை "சண்டை அல்லது பறத்தல்" (fight or flight) என்ற செயல்பாட்டுக்கு தயார் செய்வது ஆகும். அட்ரினலினை எப்பிநெப்பிரின் (epinephrine) எனவும் கூறுவார்கள். இவை உள்ளுறுப்பு செயல்பாடுகளை ஒழுங்குப் படுத்தும். அட்ரினலன் நீள்வளையமையலிழையம் (medulla oblongata) பகுதியில் உள்ள நியூரான்களில் (neuron) இருந்து தயாரிக்கப் படும். 


Gland in humans
Diagrammatic representation of glands in the human body
Both male and female

இதனின் சூத்திரம் சி9 எச்13 என்ஓ3 (C9H13NO3) ஆகும். இதில் அட்ரினெர்க் ஏற்பிகள் (Adrenergic receptors) இருக்கும். அட்ரினலின் பயம் மற்றும் கோபம் போன்ற வலிமையான உணர்ச்சிகள் நடைபெறும் போது இரத்த ஸ்ட்ரீமில் (bloodstream) வெளியிடப் படும். இதன் காரணமாக, இதய துடிப்பு, தசை வலிமை மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். 



*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

1 Comments

  1. Is it true that some people sweat very high during fear of thing? Reason behind this?

    ReplyDelete

Enter your comments :)