Ticker

6/recent/ticker-posts

Translate

பலரையும் கவரும் நிறம் அல்லது நிறங்கள் எது? | இவ்வாறு நிறங்கள் நம்மை கவர்வதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? | நிறங்கள் என்றால் என்ன? | Rubik's cube | Color Survey | Scattering of light | Rayleigh's scattering | Reason for sky colour |

        நிறங்கள் (colours) இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்கள் மற்றும் இடங்களில் இருக்கும். ஒரு பொருள் அழகாக இருக்க, நிறங்கள் மிகவும் உதவுகிறது. ஒரு காட்சியின் அழகை (beauty) நிறங்கள் தான் தீர்மானிக்கிறது. சான்றாக, இயற்கை (nature) அல்லது மரம் (tree) என்றால் நமக்கு பச்சை (green) நிறம் தான் நினைவுக்கு வரும். வானம் (sky) மற்றும் கடல் (ocean) என்றால் நமக்கு நீலம் (blue) நிறம் தான் நினைவுக்கு வரும். காகம் (crow) என்றால் நமக்கு கருமை (black) நிறம் தான் நினைவுக்கு வரும். இப்படி நிறங்கள் தான் பொருட்களின் அழகை தீர்மானம் (determine) செய்கிறது. மேலும், ரூபிக் கியூப்யை (Rubik's cube) நிறங்களை வைத்து தான் நம்மால் விளையாட முடியும். இவ்வாறு நிறங்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது.



Skin art in face
Colourful skin art in face
Amazing!!!



           நிறங்கள் (colours) இந்த உலகில் (world) உள்ள அனைவரையும் (all) கவரும் (attract) தன்மையைக் (power) கொண்டது. மேலும், பலரையும் (many people) கவரும் (attract) நிறம் (colour) அல்லது நிறங்கள் (colours)  எது? இவ்வாறு நிறங்கள் (colours)  நம்மை கவர்வதற்கான (attract) காரணங்கள் (reason) என்னவாக இருக்கும்? நிறங்கள் (colours) என்றால் என்ன?

நிறங்கள் (colours) என்றால் என்ன?

      நிறம் என்றால் சூரியனின் வெள்ளை ஒளியில் (Sun light) இருந்து வரும் அதனின் தொகுதி நிறங்கள் ஆகும். (consistuent colours) ஒரு பொருள் சில நிறங்களை உறஞ்சி (absorbs) தன்னுள் வைத்துக் கொண்டு மற்ற நிறங்களை வெளியிடும். இப்படி பொருட்களால் வெளியிடும் நிறங்கள் தான், நாம் கண்களுக்குத் தெரியும். சான்றாக, மரம் மற்றும் செடிகளின் இலைகள் சூரியனின் வெள்ளை ஒளியில் இருந்து பச்சை நிறத்தை தவிர மற்ற அனைத்து நிறங்களையும் உறிஞ்சும். 


Colour pencils in water
Colour pencils in water
Colour + Water = Water colour...


இதன் காரணமாக, பச்சை நிறத்தை இலைகள் (leaf) வெளியிடும். இதனால் தான், இலைகள் நம் கண்களுக்கு பச்சை நிறத்தில் தெரியும். இவ்வாறு ஒரு பொருள் (thing) தனது நிறத்தைை (colour) பெறுகிறது. வெள்ளை நிறத்தின் தொகுதி நிறங்கள்: ஊதா (violet), இண்டிகோ (Indigo) , நீலம் (Blue), பச்சை (Green), மஞ்சள் (Yellow), ஆரஞ்சு (Orange) மற்றும் சிவப்பு (Red) போன்ற நிறங்கள் ஆகும்.

பலரையும் (many people) கவரும் (attract) நிறம் (colour) அல்லது நிறங்கள் (colours) எது? இவ்வாறு நிறங்கள் (colours) நம்மை கவர்வதற்கான (attract) காரணங்கள் (Reason) என்னவாக இருக்கும்?

      இந்த உலகில் உள்ள மக்களுக்கு பிடித்த நிறம் (favourite colour) எது என்ற கேள்விக்கு விடையை பல கருத்துக் கணிப்புகள் (survey) மூலம் 1920 ஆம் ஆண்டில் இருந்து தேடி வருகின்றனர். பெரும்பாலும், மக்களுக்கு பிடித்த நிறம் எது என்ற கேள்விக்கு, நீலம் (blue) நிறம் தான் விடையாக வரும். சமீபத்தில் நூறு நாடுகளை (country) சார்ந்த சுமார் 30,000 நபர்களிடம் (persons) நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் படி அடர் பசுமைநீல நிறம் (teal colour) தான் முதலிடத்தைப் பிடித்தது.


Purple Rose flower
Beautiful view of purple coloured Rose flower 


       சிலருக்கு சிவப்பு (red colour) நிறத்தில் இருக்கும் பூ  மீது பிரியமும், இரத்தம் (blood) கண்டால் அச்சமும் ஏற்படலாம். எனவே, குறிப்பிட்ட நிறத்தைக் கொண்ட பல பொருட்கள் மீது நமக்கு ஏற்படும் உணர்வுகளின் சராசரி (average) அந்த நிறத்தின் மீதான நமது மதிப்பீடாக (remarks) அமைந்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

          உலகம் முழுவதும், எந்தப் பண்பாட்டை (culture) சார்ந்தவர் என்றாலும் ஆகாயம் (Atmosphere) மற்றும் நீர் நிலைகளின் (water bodies) நிறம் நீலம் தான் இருக்கும். எனவே தான் பலரது விருப்ப நிறத்தை தொகுக்கும் போது நீல நிறம் முதலிடத்தை வகிக்கிறது என ஆய்வாளர்கள் விளக்கம் தருகின்றனர்.


Mountain scenery
Amazing view of mountain scenery
Wow!!! 


          சிவப்பு, பச்சை நிறத்தை விரும்புவர்களும் கணிசமாக உள்ளனர். மேலும், விருப்ப நிறம் எனும் உணர்வு பிறவி முதல் அப்படியே நிலை பெறுவது இல்லை. வளர வளர நாம் ஒருவரது பிடித்தமான நிறம் மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், நாம் அன்றாட கண்ணும் காட்சிகளுக்கு ஏற்ப நமது பிடித்த நிறம் அமையும் எனவும் சில ஆய்வுகள் கூறுகிறது. இவ்வாறு பிடித்த நிறம் அமைவதற்கு பல காரணங்கள் (reason) உள்ளன.

ஒளி சிதறலை (Scattering of light) பற்றி! 

      சூரிய ஒளி பூமியின் வளிமண்டலம் (atmosphere) வாயிலாக பூமியின் நிலபரப்புக்கு (surface) உள்ள வரும். வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் (particles) ஒளியின் திசையை (direction) மாற்றும் (change) தன்மையை கொண்டது. இதனை தான், ஒளி சிதறல் (scattering of light) என்பர். இந்த ஒளி சிதறல் ரெயிலின் சிதறல் சட்டம் (Raleigh's Scattering law) வாயிலாக வேலை செய்யும். 

       காலை நேரங்களில் ஒளி சிதறல் நடைபெறும் போது, ஊதா (violent) நிறம் தான் குறுகிய அலைநீளம் (shorter wavelength) கொண்டது. அதன் காரணமாக, ஊதா நிறம் அதிகம் ஒளி சிதறல் அடையும். ஊதா நிறத்திற்கு அடுத்த படியாக நீலம் (blue) நிறம் தான் அதிகம் ஒளி சிதறல் அடையும். ஆனால், நமது கண் ஊதா நிறத்தை விட நீலம் நிறத்திற்கு அதிகம் உணர்திறன் (sensitive) கொண்டது. இதன் காரணமாக தான், வானம் (sky) நீல நிறத்தில் நமக்கு காட்சி அளிக்கும். 


Morning sun rise
Morning sun rise view
Calming!!!


         சூரிய உதயம் (Sun rise) மற்றும் சூரிய அஸ்தமனம் (Sun set) நடைபெறும் போது, சூரிய ஒளி அதிக தூரம் (distance) பயணம் (travel) செய்யும். இதன் காரணமாக, நீலம் நிறம் குறுகிய அலைநீளம் கொண்டது. அதனால், நீலம் நிறத்தின் சிதறல் தொலைவில் சென்று விடும். ஆனால், சிவப்பு நிறம் நீண்ட அலைநீளம் கொண்டது. அதனால், இது குறைவாக ஒளி சிதறல் அடைந்து நமது கண்களுக்கு சென்று அடையும். இதன் காரணமாக தான், வானம் சிவப்பு (red) நிறத்தில் காட்சி அளிக்கும்.

           ஆனால், மேகங்களில் (clouds) நிறங்கள் சமமாக (equal) ஒளி சிதறல் அடையும். இதன் காரணமாக மேகங்கள், வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும். மழை மேகங்கள் (Rain clouds) கருப்பு (black) நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம், மேகத்தில் இருக்கும் தண்ணீர் துளிகள் (water droplets) மேகத்தில் உள்ள தூசி (dust) துகள்கள் வாயிலாக ஒடுக்கம் (condensation) அடையும். இதன் காரணமாக, மேகங்கள் (clouds) ஒளிபுகா நிலைக்கு (opaque) மாற்றும் அடையும்.


Sun set view
View of Sun set
Pleasant view!!


             விண்வெளி வீரர்களுக்கு (Astronauts) பூமியின் வானத்தை விண்வெளியில் இருந்து பார்க்கும் போது கருப்பு நிறத்தில் தான் காட்சி அளிக்கும். இதற்கு காரணம், பூமியின் வளிமண்டலத்திற்கு (atmosphere) மேலே வெற்றிடம் (Vacuum) தான் இருக்கும்.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. ரூபிக் கியூப் (Rubik's cube) பற்றி!

        ரூபிக் கியூப் (Rubik's cube) என்பது ஒரு 3டி சேர்க்கை புதிர் (3D combination puzzle) ஆகும். இது 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்தவர் எர்னெ ரூபிக் (Erno Rubik) ஆவார். இவர் ஒரு கட்டிடக்கலை பேராசிரியர் (Architecture professor) ஆவார். 


Rubik's cube in table
Unsolved rubik's cube in a table

இதற்கு மந்திரம் கியூப் (magic cube), வேகம் கியூப் (speed cube) மற்றும் புதிர் கியூப் (puzzle cube) என்று பெயர்கள் உண்டு. இதனை விற்பனை செய்த நிறுவனம் Ideal Toy Corporation ஆகும். இந்த உலகில் சுமார் 350 மில்லியன் (million) ரூபிக் கியூப்கள் (Rubik's cube) விற்கப்பட்டுள்ளது (sold out).

2. டீல் நிறம் (Teal colour) என்றால் என்ன?

       டீல் நிறம் (Teal colour) என்பது நீலம் (blue) மற்றும் பச்சை (green) நிறங்களின் கலவை ஆகும். இதனை உருவாக்க நீல நிறத்தை பச்சை நிறத்தின் அடித்தளத்தில் (base) கருப்பு அல்லது சாம்பல் (grey) நிறத்தை வைத்து டீல் நிறத்தை உருவாக்க படும். டீல் (teal) மூன்றாம் நிலை நிறத்தை (tertiary colour) சார்ந்த வகை ஆகும்.


Teal colour
View of the Teal colour

 இதனின் பெயர் ஒரு பறவையின் (bird) பெயரில் இருந்து வந்தது. அந்த பறவையின் அறிவியல் பெயர் Anas crecca ஆகும். இந்த நிறம் அந்த பறவையின் தலையின் (head) பட்டையில் (stripe) இடம் பெற்று இருக்கும்.

3. தாவரத்தின் இலைகள் (leaf) ஏன் பச்சை (green) நிறத்தை மட்டும் வெளியிடுகிறது?

         தாவரத்தின் இலைகள் (leaf) பச்சை நிறத்தில் காட்சி அளிப்பதற்காக காரணம், இலைகளில் உள்ள குளோரோபில் (chlorophyll molecules) மூலக்கூறுக்கள் ஆகும். இதில் சிறப்பு ஜோடி (special pair) வகையான குளோரோபில் இடம் பெற்று இருக்கும். இலைகள் சிவப்பு (red) நிறத்தை தான் அதிகம் பயன் படுத்தும்.


Leaf in beach
Leaf in the beach 

 மேலும், பயன் படுத்தமால் இருக்கும் பச்சை நிறத்தை இலைகள் பிரதிபலிக்கும் (reflection). இதனால் தான், இலைகள் பச்சை (green) நிறத்தில் காட்சி அளிக்கும்.

4. ரெயிலின் ஒளி சிதறலை (Rayleigh's scattering) பற்றி!

    ரெயிலின் ஒளி சிதறல் (Rayleigh's scattering law) சட்டம் இரு வகைப் படும். அவை ரெயிலின் சிதறல் (Rayleigh's scattering) மற்றும் ரெயிலின் அல்லாத சிதறல் (Non Rayleigh's scattering) ஆகும்.

 ரெயிலின் ஒளி சிதறல் (Rayleigh's scattering):

          ஒளி சிதறல் (scattering) அனுக்கள் (atoms) மற்றும் மூலக்கூறுக்கள் (molecules) வாயிலாக நடைபெறும். இதனின் அளவு (size), ஒளியின் அலைநீளத்தை (wavelength) விட குறைவாக இருக்கும். இதனை தான், ரெயிலின் ஒளி சிதறல் (Rayleigh's scattering) என்பர்.

ரெயிலின் அல்லாத ஒளி சிதறல் (Non Rayleigh's scattering):

          ஒளி சிதறல் பெரிய துகள்கள் (large particles), தூசி (dust) மற்றும் தண்ணீர் துளிகளால் (water droplets) ஒளி சிதறல் அடையும். இதனின் அளவு, ஒளியின் அலைநீளத்தை (wavelength) விட அதிகமாக இருக்கும். இதனை தான், ரெயிலின் அல்லாத ஒளி சிதறல் (Non Rayleigh's scattering) என்பர்.

5. மயில் இறகுகளின் (Peacock feathers) பயன்பாடுகள்!

     மயில் இறகுகள் (Peacock feathers) வண்ணங்கள் (colourful) நிறைந்து இருக்கும். ஆனால், மயில் இறகுகளில் ஒரே ஒரு நிறமி (pigment) தான் இருக்கும். இது பழுப்பு (brown) நிறத்தை மட்டும் தான் வெளியிடும். ஒளி அலைகளின் (waves) முகடுகள் (crest) ஒரே மாதிரியாக இருந்தால், ஆக்கபூர்வான குறுக்கீடு (constructive interference) உருவாகும். 


Peakcock feathers
Peacock feathers
Beautiful!!!

அலைகள் வெவ்வேறாக இருந்தால், அழிவுகரமான குறுக்கீடு (Destructive interference) ஆகும். இது மின் வாசகர் (E reader) கிருவியில் பயன்படுத்த படுகிறது. இது நிறங்களின் அலைநீளத்தை (wavelength) வைத்து வேலை செய்யும். இது சிவப்பு (red), பச்சை (green), நீலம் (blue) மற்றும் கருப்பு (black colours) நிறங்களை பயன் படுத்தும்.



*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

9 Comments

  1. Bro the white cloud gives us white colour but black color gives us black due to water and dust but in white color cloud also have water and dust then why it gives white .

    ReplyDelete
    Replies
    1. As we said that clouds have water droplets and dust particles. Normal clouds have small amount of water droplets and dust particles as compared to the Rain clouds. Normal cloud scatters all the consistuent colours of sunlight equally. Rain cloud is big and thick clouds. So the upper part of the rain clouds, scatters the most of the sunlight and the lower part of the rain clouds doesn't get enough light to scatters to reach our eyes. So rain clouds appear black in colour to our eyes.

      Delete
  2. I want to know about the optical fiber and it all uses, working,making every thing please.

    ReplyDelete
    Replies
    1. I will try to upload a post on Optical fiber in the upcoming posts ASAP .... :)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Here we go!
      Check it out in our blog.
      About Optical fibre.

      Sorry for the delay :(.
      But we have done our best.
      Enjoy it!

      Delete
  3. What is meant by teritary colour? Is there are most types in colours? ...

    ReplyDelete
    Replies
    1. Tertiary colour is also called as intermediate colour. It is made by full of one primary colour with half of the other primary colour in a colour space. It forms tertiary colour. It is also made by mixing or intermixing pairs of secondary colour type. Tertiary colour is the most used type of colour used in the paints, pigments and dyes.

      Delete

Enter your comments :)