Ticker

6/recent/ticker-posts

Translate

வருங்காலத்தில் கட்டடத் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்? | எவ்வகை மாற்றங்களை நாம் வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம்? | கட்டடத் தொழில் நுட்பம் என்றால் என்ன? | Disaster resistant buildings | IOT | 3D printer | Bacterial concrete | Trace gardening |

      உணவு (food), ஆடை (cloth) மற்றும் வீடு (home) போன்ற மூன்று பொருட்களும் மனிதனின் அடிப்படை தேவை (basic needs) ஆகும். இந்த உலகில் பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தங்குவதற்கு (stay) வீடுகள் தேவை படுகிறது. மழையில் இருந்து காப்பதற்காக மனிதர்களுக்கு வீடுகள் தேவைப் படுகிறது. மனிதன் உறங்க (sleep), சாப்பிட (eat) மற்றும் வேலைகள் (work) செய்ய கட்டடங்கள் தேவை படுகின்றன. கட்டடங்களை கம்பி (steel), சிமெண்ட் (cement) மற்றும் மண் (sand) போன்ற பொருட்களின் மூலம் கான்கிரீட்களை (concrete) உருவாக்கி, பல கான்கிரீட்களை ஒன்றாகச் சேர்த்து கட்டடங்கள் உருவாக்கப் படுகிறது. மலைகள் (mountains), கடல் (ocean) ஓரம் மற்றும் பல்வேறு நிலங்களில் கட்டடங்கள் காட்டப்படுகிறது. உயரம் பெரிய மற்றும் அளவில் பெரிய என பல்வேறு வகையான கட்டடங்கள் (building) மனிதர்களால் காட்டப்படுகிறது. 



Workers in construction
Workers involving in construction of a Building


       ஆனால், கட்டடப் பணிகள் (construction works) நடக்கும் போது பல்வேறு விபத்துகள் (accidents) ஏற்படுகிறது. மேலும், கட்டிய கட்டடங்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சேதம் (damage) அடைந்து விடுகிறது. 

         அதனை சரி செய்யும் (correct) விதமாக, வருங்காலத்தில் (future) கட்டடத் (building) தொழில் நுட்பம் (Technology) எப்படி இருக்கும்? எவ்வகையான மாற்றங்களை (changes) நாம் வருங்காலத்தில் (future) எதிர் பார்க்கலாம் (expectation)? கட்டடத் தொழில் நுட்பம் (Construction technology) என்றால் என்ன?

கட்டடத் தொழில் நுட்பம் (Construction technology) என்றால் என்ன?

      கட்டடங்கள் (Buildings) மற்றும் வீடுகளை (home), பண்டைய காலங்களில் கற்கள் (stones), மண் (sand), தண்ணீர் (water) மற்றும் களிமண் (clay) போன்றவற்றை வைத்து கட்டடங்கள் மற்றும் வீடுகளை அமைத்தனார். எவ்வித இயந்திரம் (machine) பயன்படுத்தமால் பண்டைய கால மக்கள் கட்டடங்களை அமைத்தனார். தற்போது, நாம் பல வகையான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு தொழில் மற்றும் கட்டட நுட்பங்களை பயன்படுத்தி கட்டடங்கள் மற்றும் வீடுகளை கட்டுகிறோம். 


Tower crane building
Tower cranes are used for lifting heavy material for the construction of a Building.


மேலும், பிராமண்ட (Greatest) கட்டடங்களை மனிதனால் மட்டுமே கட்ட முடியும். இவ்வாறு, கட்டடக் கலையில் பல்வேறு வளர்ச்சிகள் பெரு வருகிறது. இதை தான் கட்டடத் தொழில் நுட்பம் என்பர். மேலும், நாம் தற்போது புயல் (cyclone), சுனாமி (tsunami) மற்றும் நிலநடுக்கம் (earthquake) போன்ற பேரிடர்களை (disasters) தாங்கும் (withstand) அளவிற்கு கட்டடங்கள் மற்றும் வீீடுகளை அமைத்து வருகிறோம்.

வருங்காலத்தில் (future) கட்டடத் தொழில் நுட்பம் (construction technology) எப்படி இருக்கும்? எவ்வகை மாற்றங்களை (changes) நாம் எதிர் பார்க்கலாம் (expectation)?

       எதிர்காலக் கட்டடங்கள் (future buildings), ஐ. ஓ. டி (IoT -Internet of things) எனும் கணினி மையம் (Computer based) கொண்டு இருக்கும் என நாம் வரும் காலங்களில் எதிர் பார்க்கலாம். வீட்டுப் பொருட்கள் (Household things) முதல் வீட்டில் வசிப்பவர்கள் (Residents) வரை அனைத்தும் நமது கணினி (computer) மற்றும் மொபைல் போன் (mobile phone) போன்ற டிஜிட்டல் கருவிகளுடன் (digital gadgets) பிணைக்கப் பட்டு இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தை சரியான நேரத்தில் உணவு உண்டதா, நோய்வாய்ப் பட்டவர்கள் (patients) மருந்துப் பொருட்களை எடுத்து கொண்டார்களா என்பன போன்ற பல வகையான தகவல்கள் செல்போனுக்கு நேராக வந்து சேரும்.


Wall damaged
View of a damaged wall


         காலம் செல்ல செல்ல, கான்கிரீட்களில் இருந்து மெல்லிய விரிசல்கள் (cracks) ஏற்படுவது வழக்கமான செயல் ஆகும். இதன் காரணமாக தான் கட்டடங்கள், ரோடு (road) மற்றும் மேம்பாலம் (bridge) போன்றியவற்றை சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுமுறை கட்ட வேண்டி வருகிறது. பொருட்கள் வீணாகிறது, சுற்றுச் சூழல் மாசு அடைகிறது. இதற்காகவே, தானே சரிசெய்து கொள்ளும் (self healing) படியான உயிரியல் (biological) தொழில் நுட்பம் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. மண், சிமென்ட் மற்றும் நீர் தவிர மேலும் ஒரு வகையான பாக்டீரியாவையும் (bacteria) கலந்து, இந்த உயிரி கான்கிரீட் தயாரிக்கப் படும். 


Beautiful window view
Beautiful window view
Amazing!!...


       ஜன்னலுக்காக (windows) மரத்தை இழைக்கும் போது, ஓரளவு மரம் வீணாகும். இது சுற்றுச் சூழலுக்குக் கேடு மற்றும் வீண செலவு ஆகும். 3டி அச்சுப்பொறி (3D printer) தொழில் நுட்பம் வழியே பொருட்களைக் கூட்டி கட்டடப் பாகங்களைத் தயார் செய்து வேக வேகமாக கட்டடத்தை எழுப்பிவிடலாம். 


Home gardening
Home gardening plants
Wow!!...


        பல மாடிக் கட்டடங்கள் கொண்ட வாழ்விடங்கள், சிறு நகரங்களிலும் பெருகி வருகின்றன. பசுமையற்ற முறையில் உருவாகும் இத்தகைய நகரங்களை கான்கிரீட் காடுகள் (forests) என நாம் கூறுகிறோம். உயர்ந்து வளரும் மாடிக் கட்டடத்தில் தாவரங்கள் (plants), கொடிகள் வளர்த்து பசுமை போர்த்திய கட்டடங்களை தயார் செய்ய முடியும். இவை காட்சிக்கு அழக்கூட்டுவதுடன் (decorations) மாசை அகற்றி நகரின் காற்றைத் தூய்மைப் படுத்தவும் உதவும். இவ்வாறு, பல வகையான மாற்றங்களை நாம் வரும் காலத்தில் எதிர் பார்க்கலாம். 

பேரிடர்களை (Disaster) தாங்கும் (withstand) கட்டங்களை (building) பற்றி!

      நிலநடுக்கம் (earthquake) போன்ற பேரிடர்களை (disaster) தாங்க கட்டடங்களை தனிமைப் படுத்தப்பட்ட (isolated) தளத்தில் (base) அமைப்பார். இதற்கு, ஈயம் ரப்பர் (lead rubber) தாங்கியை (bearing) கட்டடத்தின் கீழ் பகுதியில் அமைப்பார். இவை வளையத்தக்க (flexible) தன்மையில் இருக்கும். இது நிலநடுகத்தை தாங்கும் தன்மையை கொண்டது.

       வலுப் படுத்தப்பட்ட கண்ணாடியை (reinforced glass) கட்டடங்களில் பயன் படுத்துவார். இவ்வகை கண்ணாடிகள் அதிகமான விலைகளை (costly) கொண்டவை ஆகும். இவை அடர்த்தி (thick) அதிகம் கொண்டவை ஆகும். இவை ஒரு மணி நேரத்திற்கு 250 மைல் (mile) வரை காற்றை (wind) தாங்கும் (withstand) தன்மையை கொண்டவை ஆகும்.


Damaged Building
Building damaged due to natural disasters


        தீ எதிர்ப்பு (Fire resistant) சுவர் (wall) மற்றும் கூரைகளை (roofs) கட்டடத்தில் அமைக்க வேண்டும். மேலும், திட குழாய்கள் (solid pipes) பேரிடர்கள் போது, வளைந்து (bend) மற்றும் உடைந்து (break) விடும். இதன் காரணமாக கட்டமைப்பு சேதம் (structural damage) ஏற்படும். அதனால், வளையத்தக்க (flexible) குழாய்களை அமைக்க வேண்டும்.

       மூலைக் கூரைகளை (Hip roofs), கட்டடங்களின் சாய்ந்த (inclined) பக்கப் பகுதியில் அமைக்கப் படும். இதன் காரணமாக, காற்றியக் கவியல் (aerodynamics) மற்றும் காற்று எதிர்ப்பு (resistance) தன்மை அதிகரிக்கும். இதனை வீடுகளில் பயன் படுத்துவார். இவை பெரிய அளவு காற்றை தாங்கும் தன்மையை கொண்டது.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. ஐ. ஓ. டி (IOT) என்றால் என்ன?

       ஐ. ஒ. டி (IOT) என்றால் இணையம் உடைய பொருட்கள் (Internet of things) ஆகும். இவை வலைப்பின்னல் உடல் சார்ந்த பொருட்கள் (network of physical objects) கோட்பாடு அடிப்படையில் அமையும். இதற்கு, பொருட்களில் மேல் பதிக்கப்பட்ட சென்சார்கள் (sensor) மற்றும் மென்பொருட்கள் (software) பயன்படுத்த படும். மேலும், இந்த தொழில் நுட்பத்தை சாதாரண வீட்டு பொருட்களில் மேல் பயன் படுத்த முடியும். இதனின் பயன்பாடுகள் (uses)


IOT evolution
IOT - Internet of things is the future of man kind


         -மேகக்கணி பெரிய தரவு (Cloud big data),  

          -பகுப்பாய்வு (analytics),

         -மொபைல் தொழில் நுட்பங்கள் (mobile technologies),

         -இணைப்பு சேவைகள் (Connectivity), 

         -இயந்திரம் கற்றல் மற்றும் பகுப்பாய்வு (Machine learning and analytics),

         -செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence),

         -ஸ்மார்ட் உற்பத்தி சேவை (Smart manufacturing) மற்றும்

         -ஸ்மார்ட் பவர் கிரிட் (Smart power grid).

2. 3டி அச்சுப்பொறி (3D Printer) என்றால் என்ன?

        3டி அச்சுப்பொறி (3D printer) என்பது ஒரு இயந்திரம் ஆகும். இது மூன்று பரிணாமப் (Three dimensional) பொருட்களை உருவாக்கும் கருவி ஆகும். இவை பொருட்களை அடுக்கு மேல் அடுக்கு (layer by layer) என்ற முறையை பயன்படுத்தி பொருட்களை பல வடிவங்களில் உருவாக்க முடியும். இவை கணினி மூலம் வடிவமைப்பு (designed) பெறுகிறது. இதன் மூலம் தயாரிக்க தேவைப்படும் பொருட்களின் தேவை (requirements) குறைவாக செலவு ஆகும். இதனின் பயன்பாடுகள்


3D printer
3D printer machine printing something
What might be it?...


           -சேர்க்கை உற்பத்தி (Additive manufacturing),

           -கைவினைப் பொருட்கள் (crafts) மற்றும் கலைப் படைப்புகள் (artworks),

           -இயந்திர பொருட்கள் உற்பத்தி (Mechanical materials manufacturing),

           -கட்டுமானம் பணிகள் (construction works) மற்றும்

           -நகைகள் உருவாக்கும் (making jewellery) பணிகள்.

3. கான்கிரீட்யில் (concetre) பயன்படுத்த படும் (use) பாக்டீரியாவை (bacteria) பற்றி!

       பல வகையான பாக்டீரியாக்கள் கான்கீரிட்களில் பயன்படுத்த படுகிறது. இந்த பாக்டீரியா வகைகள் தானே சரிசெய்து கொள்ளும் (self healing) கான்கிரீட்யில் முக்கிய பங்கு பெறுகிறது. இவை கான்கிரீட்களில் உள்ளே கால்சியம் கார்பனேட் (Calcium carbonate) படிவுகளை (deposition) அமைக்கும். இதனால், கான்கிரிட்கள் வலு (strength) அடையும், ஆயுள் அதிகமாகும் (durability increases) மற்றும் நீண்ட காலம் நிலைத்தன்மை (long term sustainability) பெற்று இருக்கும். 

தானே சரிசெய்து கொள்ளும் கான்கிரீட்களில் பயன்படுத்த படும் பாக்டீரியா வகைகள்:


Bacteria good and bad type
Bacteria are both useful and harmful
Good are called as Probiotic
Bad are called as Pathogenic


         -பேசிலஸ் சப்டிலிஸ் (bacillus subtitles),

         -பேசிலஸ் சூடோஃபர்மஸ் (bacillus pseudofirmus),

         -பேசிலஸ் பாஸ்டூரி (bacillus pasteurii),

         -பேசிலஸ் ஸ்பேரிகஸ் (bacillus sphaericus),

         -பேசிலஸ் கோஹ்னி (bacillus cohnii) மற்றும்

         -பேசிலஸ் மெகாட்டோரியம் (bacillus megatherium).

4. உலகில் உள்ள (World s) தலைசிறந்த (greatest) கட்டடங்களில் (buildings) சில!

         -தாஜ் மஹால் (Taj Mahal)  (இந்தியா {India}),


Stunning view of Taj Mahal
Stunning view of The TAJ MAHAL
Wow......


          -பிரமிட் (Pyramids) (எகிப்து {Egypt}),

          -நுழைவாயில் வளைவு (Gateway arch) (யு. எஸ். ஏ {USA}),

          -கொலோசியம் (Colosseum) (இத்தாலி {Italy}),

          -உலக வணிக மையம் (World Trade centre) (யு. எஸ். ஏ {USA}),

          -தாமரை கோவில் (Lotus temple) (இந்தியா {India}),

          -பாறை குவிமாடம் (Dome of rock) (இஸ்ரேல் {Israel}),

          -வெள்ளை மாளிகை (White House) (யு. எஸ். ஏ {USA}),

          -லிங்கன் மையம் (Lincoln center) (யு. எஸ். ஏ {USA}),

          -ஷார்ட் (Shard) (யு. கே {UK}),

          -கோனார்க் சூரிய கோவில் (Konark Sun Temple) (இந்தியா {India}),

          -ஒபரா ஹவுஸ் (Opera House) (ஆஸ்திரேலியா {Australia}),


View of Opera House
Beautiful night view of Opera House


          -பாந்தியன் (Pantheon) (இத்தாலி {Italy}),

          -எலிசபெத் டவர் (Elizabeth Tower) (யு. கே {UK}),

          -புர்ஜ் கலீஃபா (Burj khalifa) (யு. ஏ. இ {UAE}),

          -கிழக்கு வாயில் மையம் (East gate center) (ஜிம்பாப்வே {Zimbabwe}) மற்றும்

           -சபை ஹவுஸ் 2 (Council house) (ஆஸ்திரேலியா {Australia}).

5. மாடித் தோட்டத்தின் (Trace Gardening) நன்மைகள் (benefits)!

      -இவை கட்டடங்களின் உட்புற வெப்பநிலையை (indoor temperature) குறைக்க உதவும். இதனால், ஏர் கண்டிஷனரின் (air conditioner) செலவு (expenses) குறையும். 

       -கட்டடங்கள் அதிகமான வெப்பம் உறிஞ்சுதல் (heat absorbing) தன்மையை குறைக்கும்.

       -ஆரோக்கியமான (healthy fruits) பழங்கள் மற்றும் காய்கறிகள் (vegetables) நமக்கு எளிதில் கிடைக்கும்.


Greeny vegetables
View of the Greeny vegetables
Yummy.....


       -நகர பறவைகளுக்கு (city weary birds) வாழ்விடமாக அமையும்.

       -சுற்றுச்சூழல் மாசு அடைவதை குறைக்கும்.

       -மழைநீர் சேகரிப்பில் (Rainwater harvesting) மிகவும் உதவும்.

       -இது சிறந்த பொழுதுபோக்கு (hobby) வேலை ஆகும்.

       -இது வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு அலங்காரம் (decetorations) அளிக்கும்.




*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

3 Comments

  1. On constructing tall buildings we use tower crane to lift things, how it works? How can tower crane lift heavy weight materials?

    ReplyDelete
    Replies
    1. We use tower crane to lift building materials to top of the building. Tower crane is not mobile vehicle because, it is fixed to the ground. Before, starting constructing a building, they first built a base for Tower crane using steel and concrete for better support. It has a cuboid shape blocks named Mast. Based on height, they use the number of blocks. At top, they set up climbing unit for extending tower's height.

      Delete
    2. On top of tower there is a operator cabin. The tower has a jib zone horizontally. There are two jib regions. One is working jib and other is counter jib. In working jib, there is a trolley for lifting weights. Counter weight is placed on counter jib. It's because for the balance of the Tower crane. For increasing tower height, they use hydraulic arm and add more mast based on their needs. It is ideal to built a tower crane close to the building for more support.

      Delete

Enter your comments :)