Ticker

6/recent/ticker-posts

Translate

பிற தாவரங்கள் மீது ஒட்டுண்ணிகள் வளரும் போது, அதனதன் குணாதிசயங்களை ஒவ்வொன்றும் திருடிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறதா? | Parasitism | Researches on plants communication | Amensalism | Lichens | Plant mimicry |

         இந்த உலகில் (world) உள்ள அனைத்து உயிரினங்களும் (organisms) ஒன்றுரை ஒன்று சார்ந்து (dependent) தான் தங்களது வாழ்க்கை நடத்தி வருகிறது. அனைத்து உயிரினங்களுக்கும் பிற பொருட்கள் மற்றும் பிற உயிரினங்களின் உதவி தேவை படுகிறது. மேலும், சில வகையான உயிரினங்கள் பிற உயிரினங்களை சார்ந்து தனது வாழ்க்கை நடத்தி வருகிறது. இயற்கை (nature) இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு இடத்தில் வாழ்வதற்கு தேவை படும் திறன்கள் (ability) மற்றும் சுற்றுச்சூழலை அமைத்து உள்ளது. சான்றாக, நாம் குழந்தையாக இருக்கும் போது நாம் நமது பெற்றோரை சார்ந்து இருப்போம். இதுபோல, பல வகையான விலங்குகள் மற்றும் மனிதர்கள் உணவுக்காக தாவரங்கள் (plants) மற்றும் மரங்களின் வளரும் பழங்களை (fruits) சார்ந்து உள்ளோம். டார்வினின் (Darwin) கூற்றுப்படி, எந்த உயிரினம் அனைத்து சவால்களையும் தாங்கி, இந்த உலகில் வாழும் அளவுற்கு திறன்களை கொண்ட உயிரினமே சிறந்த உயிரினம் ஆகும். 



Cuscuta parasite
Cuscuta parasite in a plant



              ஆனால், சில வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் மற்றொரு தாவரங்கள் மீது வளர்ந்து, அதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளும். இவ்வாறு வாழும் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இந்த உலகில் அதிகம் வாழ்ந்து வருகிறது. இதனை நாம் ஒட்டுண்ணிகள் (parasite) என்று கூறுவோம்.        

                 இப்படி பிற தாவரங்களில் (plants) மீது ஒட்டுண்ணிகள் (parasites) வளரும் (growth) போது, அதனதன் குணாதிசயங்களை (characters) ஒவ்வொன்றும் திருடிக் கொள்ள (steal) வாய்ப்புகள் (chances) இருக்கிறதா? ஒட்டுண்ணிகள் (parasite) என்றால் என்ன?


ஒட்டுண்ணிகள் (Parasites) என்றால் என்ன?

       ஒட்டுண்ணிகள் (Parasites) என்றால் ஒரு வகையான் தாவரம் அல்லது உயிரினம் ஆகும். இது தன்னுடைய செயல்கள் (functions) மற்றும் தேவைக்கு (needs) பிற தாவரங்களை சார்ந்து இருக்கும். இவ்வாறு ஒரு உயிரினம் அல்லது தாவரம் மற்றொரு தாவரத்தை சார்ந்து இருப்பது பல வகையான பரிணாமம் வளர்ச்சி (evolutionary growth) அடைவதற்கு உதவும். 


Mushroom parasite
Mushroom is also like a parasite


மேலும், சில வகையான தாவரங்கள் ஒட்டுண்ணிகள் மூலம் பிற உயிரினங்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் (protect) கொள்கிறது. 

பிற தாவரங்கள் (plants) மீது மற்றொரு தாவரம் (plant) அல்லது உயிரினங்கள் (organisms) வளரும் போது, அதன்தன் குணாதிசயங்களை (characters) ஒவ்வொன்றும் திருடிக் கொள்ள (steal) வாய்ப்பு (chances) இருக்கிறதா?

        கஸ்குட்டா (cuscuta) எனும் தூத்துமக் கொத்தான், ஒரு வகையான ஒட்டுண்ணி (parasite) தாவரம் ஆகும். மரங்களின் மீது படர்ந்து வளரும். இந்த தாவரம் ஒரு மரத்தின் உணவைத் திருடி தன்னை வளர்ந்துக் கொள்ளும். இதை ஒட்டுண்ணித்தனம் (Parasitism) என்பர். ஒட்டுண்ணித்தனம் என்றால் வெவ்வேறு இனங்கள் (species) இடையில் இருக்கும் தொடர்பு ஆகும். இதில் சிறிய கூட்டாளி (small partner) உணவை பெரிய கூட்டாளியிடம் (larger partner) இருந்து எடுத்துக் கொள்ளும். இதனால், ஒட்டுண்ணி இனம் நன்மை அடையும். பெருத்திரள் இனம் (host species) தீங்கு அடையும். இதில் இரண்டு வகைகள் உள்ளது.

             ஒன்று, ஹோலோபராசைட் (Holoparasite) வகை ஆகும். இது பெருந்திரள் (host) தாவரத்தை சார்ந்து இருக்கும். இவை ஊட்டச்சத்துக்களை (nutrition) பெருந்திரள் தாவரத்தில் இருந்து எடுத்துக் கொள்ளும். இதனை, மொத்தம் ஒட்டுண்ணிகள் (Total parasites) என்பர். பாலனோஃபோரா (Balanophora), Orobanche மற்றும் ராஃப்லீசியா (Rafflesia) போன்றியவை ஹோலோபராசைட் (Holoparasite) என்பர்.


Parasite host plant
Parasite's host plant 


            மற்றொன்று, ஹெமிடாராசைட் (Hemiparasite) வகை ஆகும். இதில் ஒட்டுண்ணிகள் தண்ணீர் மற்றும் தாதுக்களை (minerals) பெருந்திரள் (host) இனத்தில் எடுத்துக் கொள்ளும். இவை ஒளிச்சேர்க்கையை (photosynthesis) தானே செய்துக் கொள்ளும். இவைகளை பகுதி ஒட்டுண்ணி (Parital parasite) என்பர். விஸ்கம் (Viscum), லோரந்தஸ் (Loranthus) (தண்டு {stem} ஒட்டுண்ணி) மற்றும் சாண்டலம் (Santaleum) (வேர் {Root} ஒட்டுண்ணி) போறியவை ஹெமிடாராசைட் (Hemiparasite) என்பர்.   

                உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் போட்டி (Competition) வகை. இதில் இரண்டு உயிரினங்கள் அல்லது இரண்டு இனங்கள் தொடர்பு அடையும். இதில் இரண்டும் தீங்கு (harmed) அடையும். இதில் இரண்டு வகைகள் உள்ளது. 

                 ஒன்று, உள்ளார்ந்த போட்டி (interspecific) வகை ஆகும். இந்த வகையில் ஒரே இனத்தை சார்ந்த இரண்டு தனிப்பட்ட (individual) உயிரினங்கள் தொடர்பு கொள்ளும். இது இப்படி நடைபெறுவதற்கு காரணம், ஒரே இடத்தில் பல உயிரினங்கள் இருக்கும் போது, அனைவருக்கும் ஒரே தேவை (needs) தான் இருக்கும். அதனால், அனைத்து உயிரினங்களும் தங்களது தேவையை நிறைவு (fulfill) செய்ய போட்டி இடும்.


Parasite plant
Parasite take nutrition from the host plant

            மற்றொன்று, Interspecific வகை ஆகும். இதில், வெவ்வேறு இனங்கள் தொடர்பு கொள்ளும். இது குறிப்பாக வறட்சி (Drought) அதிகம்  இருக்கும் இடங்களில் நடைபெறும். ஒவ்வொரு இனங்களும் தங்களது தேவைக்காக போட்டி இடும். 

             மிமிக்ரி (Mimicry) என்றால் ஒரு தாவரம் அல்லது உயிரினம் தங்களது வடிவம் (shape), தோற்றம் (Apperance) அல்லது அமைப்பை (structure) மாற்றிக் கொள்ளும் முறை ஆகும். இதனால், ஒரு உயிரினம் பிற உயிரினம் போலவே இருக்கும். இது உயிரினங்களின் தற்காப்பு (protection) பணிகளுக்கு உதவும். இதில் மூன்று வகைகள் உள்ளன. அவை:

               -மலர் மிமிக்ரி (Floral mimicry): 

        தாவரத்தில் உள்ள பூக்கள், பெண் பூச்சி போல வடிவத்தில் மாற்றம் அடையும். இது ஆண் பூச்சிகளை ஈர்க்கும் (attract). இதனால், மகரந்தச் சேர்க்கைகள் (pollination) எளிதில் நடைபெறும். Ophrys தாவரம் மலர் மிமிக்ரி செய்யும்.


Floral mimiry
A plant's flower has a insect like look


               -பாதுகாப்பு மிமிக்ரி (Protective mimicry):

           தாவரத்தில் உள்ள இலைகள், பூச்சிகள் போல வடிவத்தில் மாற்றம் அடையும். இதனால், சிறிய வகை பூச்சிகள் பெரிய பூச்சி போல் இருக்கும் இலைகளை பார்த்து பயந்து விடும். கராசியம் (Carausium morosus) மோரோசஸ் மற்றும் ஃபிலியம் கொலை (Phyllium frondosum) போன்ற தாவரங்கள் பாதுகாப்பு மிமிக்ரி செய்யும்.

              -Myrmecophily:

           இந்த வகையில் எறும்புகள் (ants) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மாம்பழ (Mango) மரம், லிச்சி (Litchi) மரம், ஜமுன் (Jamun) மரம் மற்றும் அகாசியா (Acacia) மரம் போன்ற வகையான மரங்களில் எறும்புகள் வாழும். எறும்புகள் மரங்களுக்கு காவலர்களாக (guards) பணி புரியும். இவை மரத்தை பிற வகையான உயிரினங்களிடம் இருந்து பாதுகாக்கும். இதற்கு மரம் எறும்புகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் அளிக்கும். அகாசியா எறும்புகள் (Acacia ants) Myrmecophily செய்யும்.

மரங்கள் (trees) மற்றும் தாவரங்களுக்கு (plants) இடையே உள்ள தகவல் தொடர்பு (Communication) பற்றிய ஆய்வு (Research)!

     மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையே தகவல் தொடர்பு (Communication) உள்ளது என, சமீபத்திய ஆய்வுகள் (researches) தெரிவிக்கின்றன. சான்றாக, ஆப்பிரிக்காவில் (Africa), ஒட்டகச்சிவிங்கி (Giraffe) விரும்பி உண்ணும் அக்கேசியா (Acacia) எனப்படும் சீமைக்கருவேல மரங்கள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. சீமைக்கருவேல மரத்தின் இலைகளை ஒட்டகச்சிவிங்கி உண்ணும் போது, அந்த மரம் எதிலீன் (ethylene) வாயுவை உமிழ்ந்தது. காற்று அடிக்கும் திசைையில் அது பரவி, அடுத்த சீீீமைக்கருவேல மரத்தை அடைந்த போது, அந்த மரம் விழித்துக் கொண்டு, தன் இலைகளில் டான்னின் (tannic acid) அமிலத்தைக் கூடுதலாகச் சுரப்பதாகக் (secretion) கண்டறியப்பட்டது. 


Giraffes in forest
Giraffes in a forest


டான்னின் அமிலம் மிகுந்த இலைகளை உட்கொண்டால் ஒட்டகச்சிவிங்கிக்கு உடல் உபாதைகள் (disorder) உருவாகும். அதாவது தனக்கு வந்த ஆபத்தை அருகே உள்ள மற்ற மரங்களுக்கு உணர்த்தும் விதமாக எதிலீன் வாயுவை உமிழ்கிறது. இதற்காக ஒட்டகச்சிவிங்கியும் சும்மா இல்லை. காற்று வீசும் திசையில் தான் எதிலீன் வாயு பரவி அந்த திசையில் உள்ள மரங்கள் தான் சுதாரித்துக் கொள்ளும். எனவே, ஒட்டகச்சிவிங்கி காற்று வீசும் திசைக்கு எதிர்த் திசையில் (opposite side) மேய்ச்சலைத் (graze) தொடர்ந்து என்று அந்த ஆய்வு கட்டுகிறது.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. தாவரங்கள் (plants) போலவே நுண்ணுயிரிக்களில் (micro organisms) ஒட்டுண்ணித்தன்மை (parasitism) ஏற்படுமா?

    நுண்ணுயிரிக்களில் ஏற்படும் ஒட்டுண்ணித் தன்மையை (parasitic) Amensalism  என்பர். இது  interspecific வகையை சார்ந்தது. இதில் இரசாயனங்கள் (chemicals) சுரப்பாது மூலம் தொடர்பு ஏற்படுகிறது. இதனை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiosis) என்பர். சான்றுகள்:

பென்சிலியம் நோட்டாட்டம் (Penicillium notatum)- இது பல்வேறு வகையான பாக்டீரியாவின் வளர்ச்சிகளை தடக்கும் (inhibit) தன்மையை கொண்டாது. இதனை பென்சிலின் (Penicillin) உருவாக்க பயன்படுத்துவர்.


Moss in wood
Moss in a wood


ஸ்டேஃபிளேகோகஸ் (Staphylococcus) மற்றும் ட்ரைக்கோடெர்மா (Trichoderma)- இவை புஞ்சைகளின் (fungus) வளர்ச்சியை தடுக்க உதவும்.

அஸ்பெர்கிலஸ் (Aspergillus)- இவை கருப்பு வால்நட்யின் (Black walnut) வேர்கள் (roots) மற்றும் ஹல்ஸ்களில் (hulls) காணப்படும்.

ஜுக்லான்ஸ் நிக்ரா (Juglans nigra)- இவை ஆல்கலாய்டு ஜுக்வோம்வை (alkaloids Juglone) சுரக்கும். இவை ஆப்பிள் (apple), தக்காளி (tomato) மற்றும் அல்பால்ஃபா (Alfalfa) போன்ற தாவரம் மற்றும் மரங்களின் நாற்றுகளை (seedlings) தடுக்க உதவும்.

2. லிச்சென்கள் (Lichens) என்றால் என்ன? 

        லிச்சென்கள் (Lichens) என்றால் பாசி (algae) மற்றும் புஞ்சையின் (fungi) கூட்டுவாழ்வால் (symbiotic association) ஏற்பட்ட உயிரினம் ஆகும். இதில் உள்ள பாசி கூட்டாளரை பைகோபியோன்ட் (Phycobiont) என்பர் மற்றும் புஞ்சை கூட்டாளரை Mycobiont என்பர். பாசி புஞ்சைகளுக்கு ஊட்டச்சத்துகளை (nutrition) அளிக்கும். மேலும், புஞ்சை பாசிகளுக்கு பாதுகாப்பு (protection) அளிக்கும். இவை பாசியின் ரைசினா (rhizinae) பகுதியில் உள்ள தாலஸ்யை (thallus) சரிசெய்ய உதவும். ஆக்சாலிக் (Oxalic) மற்றும் Usnic போன்ற அமிலங்களை சுரக்கும். இவை காற்று மாசுபடுத்திகளுக்கு (pollutants) உணர்திறன் (sensitive) கொண்டு இருக்கும். இவைகளை மாசு காட்டுபவர்கள் (pollution indicators) என்பர். இவைகளை லிட்மஸ் காகிதம் (litmus paper) தயாரிக்க பயன் படுத்துவர். ரோசெல்லா மாண்டாக்னே (Roccella montagnei) மற்றும் கிளாடோனியா (Cladonia rangiferina) (கலைமான் பாசி {Reindeer moss}) போன்றியவை லிச்சென் இனங்கள் ஆகும்.


Green moss
Green moss in a tree trunk


 லிச்சென்களின் வகைகள்:

    -கார்டிகோலஸ் (Corticolous) (பட்டையில் {bark} மேல் வளரும்),

    -லிக்னிகோலஸ் (Lignicolous) (மரத்தின் {wood} மேல் வளரும்),

    -Saxicolous (பாறைகளின் {rock} மேல் வளரும்),

    -டெரிகோலஸ் (Terricolous) (தரையில் {ground} வளரும்),

    -கீரஸ்ட்ரோஸ் (Crustrose) (பட்டை {crust} போல இருக்கும்),

    -ஃபோலியோஸ் (Foliose) (இலைகளை {leaf} போல இருக்கும்), 

    -Frutiose (புதர்கள் {shrub} போல இருக்கும்).

3. சீமைக்கருவேல (prosopis julifora) மரத்தை பற்றி!

       சீமைக்கருவேல மரத்தின் அறிவியல் பெயர் புரோசோபிஸ் ஜுலிஃப்ளோரா (Prosopis juliflora) ஆகும். இது புதர் (shrub) மற்றும் சிறிய மரம் வடிவில் இருக்கும். இதனின் பூர்வீகம் மெக்ஸிகோ (Mexico), தென் அமெரிக்கா (South America) மற்றும் கரீபியன் (Caribbean) ஆகும். இதனை ஆக்கிரமிப்பு களையாக (invasive weed) ஆப்பிரிக்க (Africa), ஆசியா (Asia) மற்றும் ஆஸ்திரேலியா (Australia) போன்ற இடங்களில் அமைந்துள்ளது. இவை 12 மீட்டர் உயரத்திற்கு வளரும் தன்மையை கொண்டது.


Prosopis juliflora
Prosopis juliflora plant


  

    எதிலீன் வாயு (ethylene gas) சூத்திரம் (formula) C2H4 ஆகும்.

     டான்னிக் (Tannic acid) அமிலத்தின் சூத்திரம் C76H52O46 ஆகும்.

     ஆக்சாலிக் அமிலத்தின் (Oxalic acid) சூத்திரம் C2H2O4 ஆகும்.

       Usnic அமிலத்தின் சூத்திரம் C18H16O7 ஆகும்.



*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

2 Comments

  1. Is disesase causing bacteria, virus and vectors are parasites? Most of them human as host. So, are they parasites?

    ReplyDelete
    Replies
    1. Bacteria and virus can live outside the body. It can survive for many days without any host. But, parasite require a living host for its survival. Bacteria can be killed by antibiotics. But virus can't be killed in most cases.
      Mosquito injects hepatic cells into host. It develops into hypnozite and then it forms merozoites. It later forms erythrocyte, tropnozite, erythrocyte and schizont are formed. It produces gametocyte. This cycle take place in liver. So, bacteria, mosquitoes and virus acts as a parasite for only increasing its population.

      Delete

Enter your comments :)