வரைபடம் (Map) நாம் சிறுவயதில் பார்த்த ஒருப் பொருள் ஆகும். வரைபடம் மூலம் ஒரு ஊர், மாவட்டம், மாநிலம் மற்றும் நாடு எந்த வடிவத்தில் (shape) உள்ளது என்பதை நம்மால் அறிய முடியும். பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் வரைபடத்தைப் பற்றி மிகவும் ஆர்வத்துடன் படித்து அறிந்துக் கொள்வர். இந்த ஆர்வத்திற்கு காரணம் நம்மை சுற்றிய உள்ளப் பகுதிகளை நம்மால் காட்சியாகப் பார்க்க முடியும். வரைபடத்தின் மூலம் மனித வளர்ச்சி அதிகமாக அடைந்து உள்ளது. வரைபடத்தின் மூலம் ஆறுகள், மலைகள் மற்றும் பல இடங்களை நம்மால் காட்சிப் படுத்த முடியும்.
View of an olden map with compass placed on top Of the map So old..... As gold |
வரைபடத்தின் மூலம் தான் தற்போது உள்ள ஜி. பி. எஸ் (GPS) (உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு) (Global Positioning system) வேலைச் செய்கிறது. நாம் தற்போது செயற்கைக் கோள் (satellite) மூலம் வரைபடத்தை நம்மால் உருவாக்க முடியும்.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (before thousands of years) செயற்கைக் கோள் இல்லமால் (no satellite), எப்படி உலக வரைபடத்தை உருவாக்கி (How did they create world map) இருப்பர்கள்? நமக்கு கிடைத்த பழமையான வரைபடம் (oldest map) எது? அதில் எந்தப் பகுதியின் (Which place) வரைபடம் (Map) உள்ளது? வரைபடத்தை உருவாக்க (create) பண்டையக் காலத்தில் (olden times) எது உதவியாது?
வரைபடம் என்றால் என்ன? (What is a map?)
வரைபடம் என்றால் ஒரு நாடு அல்லது உலகத்தில் உள்ள கடல்கள், ஆறுகள் மற்றும் நாட்டின் எல்லைகள் போன்ற தகவல்களை கொண்டு ஒரு தாளில் (paper) வரைந்து அல்லது அச்சிடப்பட்டு இருக்கும். வரைபடம் மூலம் நம்மால் இயற்கையின் வலம், காடுகள், சாலைகள் மற்றும் ஏரிகள் போன்ற பல தகவல்களை நம்மால் அறிய முடியும். வரைபடத்தின் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எளிதில் செல்ல முடியும்.
World map drawn in the hands of a man Beautiful art!! |
நமக்கு கிடைத்த பழமையான வரைபடம்! (Old map ever founded!)
யூப்ரடீஸ் (Euphrates) நதியை ஒட்டிய பாபிலோன் (Babylon) பகுதியை மற்றும் அதனின் நிலப்பரப்பை வரைபடமாகத் தீட்டிய கி. மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த வரைபடம் தான், இதுவரை கிடைத்துள்ளவற்றிலேயே மிகவும் பழமையான வரைபடம் ஆகும். இந்த வரைபடத்தின் நடுவில் பாபிலோன் என்ற பகுதியும் மற்றும் யூப்ரடீஸ் என்ற நதியும், அதைச் சுற்றிய பண்டைய அசிரியா (Assyria) என்ற பகுதியும் அதனை சுற்றி வட்டவடிவில் ஒரு நிலப்பரப்புக் கொண்டு இருந்தது. இவை தான் அந்த வரைபடத்தின் இருந்தப் பகுதிகள் ஆகும்.
இந்த பழமையான வரைபடத்தில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏதுவும் இடம் பெறவில்லை. பிறகு, இதே காலகட்டத்தில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அனாக்சிமாண்டர் (Anaximander) தீட்டிய வரைபடத்திலும் அதே மாதிரி நீரால் சூழப்பட்ட வட்ட வடிவமான உலகின் நடுவே ஏஜியன் (Aegean) என்ற கடலும், அதைச் சுற்றிப் பெரிய நிலப்பரப்பு என்ற வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண்டையக் காலத்தில் வரைபடம் உருவாக்கப் பயன்படுத்திய முறைகள்! (In olden times, ways used for preparing maps!)
பண்டைய காலத்தில் வியாபாரம் (marketing) செய்யவும், அந்தந்த நாட்டின் உள்ள மனிதர்கள் பிற நாடுகளில் உள்ள அறிவைப் பெறவும் பயணம் செய்தனர். பயணம் போது, தாங்கள் பார்த்த மற்றும் கேட்ட தகவல்களைத் திரட்டித்தான், அந்தக் காலத்தில் பல வரைபடங்களைத் தயார் செய்தனர். அதன் பின்னர், மத்திய காலகட்டத்தில் பல ஐரோப்பியர்கள் (European) கடற் பயணம் செய்தனர். கடற் பயணம் மேற்கொண்ட போதுதான் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற பகுதிகளின் கடலோரப் பகுதிகள் பல வரைபடம் ஆக்கப்பட்டன.
View of A Olden Wooden ship in the ocean |
அறுபாகைமானி (Sextant) கொண்டு, பூமியில் தமது இருப்பிடத்தை அறிந்துக் கொண்டனர் மாலுமிகள் (Sailor). அதைப் பயன்படுத்தி மேலும் பல வரைபடங்களை தயாரித்தனர். பிறகு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய போன்ற நாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் அதனின் வரைபடங்கள் உருவாகின. இதற்கு இடையே உள்ள காலத்தில் இன்னும் பல பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல வரைபடங்கள் உருவாகின. சர்வே (survey) என்னும் திட்டங்கள் மூலம்தான், உலகில் உள்ள பல பகுதிகளின் வரைபடங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் முழுமையாக உருவாக்கப் பட்டனார்.
நவீன உலக வரைபடத்தை (Modern World map) பற்றி!
தற்போதைய உலக வரைபடத்தில் 195 நாடுகள் (countries) உள்ளன. மேலும், 7 கண்டங்கள் (continents) மற்றும் 5 பெருங்கடல்கள் (oceans) உள்ளன. சும்மர் 2,000 தீவுகள் (islands) மற்றும் 24 பாலைவனங்கள் (deserts) இந்த உலகத்தில் உள்ளது. ஆப்பிரிக்க கண்டம் (African continent), அண்டார்டிக்க கண்டம் (Antarctican continent), ஆசியா கண்டம் (Asian Continent), ஆஸ்திரேலியா கண்டம் (Australian contintent), யூரோப் கண்டம் (European continent), வட அமெரிக்கா கண்டம் (North American continent) மற்றும் தென் அமெரிக்கா கண்டம் (South American continent) என ஏழு கண்டங்கள் இந்த உலக வரைபடத்தில் உள்ளது. பசிஃபிக் பெருங்கடல் (Pacific Ocean), அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic ocean), ஆர்க்டிக் பெருங்கடல் (Arctic ocean), இந்தியா பெருங்கடல் (Indian ocean) மற்றும் அண்டார்டிகா பெருங்கடல் (Antarctic ocean) என ஐந்து பெருங்கடல்கள் இந்த உலக வரைபடத்தில் உள்ளது. மேலும், இரண்டு துருவங்கள் (poles) உள்ளது. அவை வடக்கு துருவம் (North Pole) மற்றும் தெற்கு துருவம் (South pole) ஆகும்.
உலக வரைபடத்தில் நில நடுக்கோடு (Equator), அட்சரேகை (latitude) மற்றும் தீர்க்கரேகை (longitude) போன்ற இடங்களை கண்டு பிடிக்க உதவும் அளவுகள் உலக வரைபடத்தில் உள்ளது.
வரைப்படத்தின் உள்ள வகைகள் (types):
-சாலை வரைபடம், (Road map)
-கால்வாய்களின் வரைபடம், (Canals system map)
-பாலங்களின் வரைபடம், (Bridges map)
-ரயில் பாதை வரைபடம், (Railway track map)
-விமான பாதை வரைபடம், (aeroplane air routes map)
-மலைகளின் மற்றும் காடுகளின் வரைபடம், (Mountains and forest map)
-ஏரி, கடல் மற்றும் ஆறுகளின் வரைபடம், (Lake, sea and river map)
-காலநிலை பகுதிகளின் வரைபடம், (climatic regions map)
-வெப்பநிலை மற்றும் அழுத்தம் பகுதிகளின் வரைபடம், (Temperature and pressure map)
-தாதுக்களின் வரைபடம் (Minerals map) மற்றும்
-மண் வளம் பகுதிகளின் வரைபடம். (Soil fertility map)
அடிக்கடிக் கேட்கபடும் கேள்விகள்: (Frequently asked questions)
1. யூப்ரடீஸ் நதி (Euphrates river) மற்றும் பாபிலோன் (Babylon) தற்போது எந்த நாட்டில் உள்ளது?
யூப்ரடீஸ் (Euphrates) நதி மிக நீண்ட நதி மற்றும் வரலாற்று ரீதியாக முக்கிய நதி ஆகும். யூப்ரடீஸ் நதி மேற்கு ஆசியாவில் (western Asia) உள்ளது. இந்த நதியின் தோற்றம் ஆர்மீனிய ஹைலேண்ட் (Armenian highlands), துருக்கி (Turkey) நாட்டில் அமைந்துள்ளது. இந்த நதி சிரியா (Syria) மற்றும் ஈராக் (Iraq) நாடுகள் வழியாகச் செல்லும். இந்த நதி பெர்சின் வளைகுடாவில் (Persian gulf) கடலில் கலுக்கும். இந்த நதி 2,800 கி. மீ. நிலம் கொண்டாது.
Satellite view of the Euphrates river |
பாபிலோன் (Babylon), பாபிலோனியா (Babylonia) நாட்டின் தலைநகரம் (captial) ஆகும். இது பண்டைய மெசொப்பொத்தேமியா (Mesopotamia) பகுதி ஆகும். இது ஹில்லா (Hillah) ஊரில், பேபி (Babi) மாநிலம், ஈராக் (Iraq) நாட்டில் அமைந்துள்ளது. இது யூ. நா. எஸ். கோ உலக ஹெர்டியேஜ் தளமாக (UNESCO world heritage site) அறிவிக்கப் பட்டுள்ளது. இது 4,319 ஆண்டுகள் பழமையான நகரம் ஆகும். பாபிலோன் என்ற சொல்லுக்கு "கடவுளின் வாயில்" (Gate of God) என்ற பொருள்.
2. அறிஞர் அனாக்சிமாண்டர் யார்? (Who is Anaximander?)
அறிஞர் அனாக்சிமாண்டர் (Anaximander) ஒரு கிரேக்க தத்துவஞானி (greek philosopher) ஆவார். இவர் லோனியா (Ionia) நாட்டின் தலைநகரமான மைலட்டஸில் (Miletus) பிறந்தார். இவரின் குரு தேல்ஸ் (Thales) ஆவார்.இவரின் மாணவன் தான் பித்தகோரஸ் (Pythagoras) ஆவார். இவர் 610 பி. சி. யில் பிறந்தார் மற்றும் 546 பி. சி. யில் இறந்துவிட்டார். இவர் மீமெய்யியல் (metaphysics), வானியல் (astronomy), வடிவியல் (geometry) மற்றும் புவியியல் (geography) போன்ற துறைகளில் சிறந்து இருந்தார். இவரின் சகாப்தம் (era) முன் சாக்ரடிக் தத்துவம் காலம் (Pre Socratic philosophy) ஆகும்.
View of a philosopher reading a book |
3. அசிரியா (Assriya) மற்றும் ஏஜியன் (Aegean) கடல் பகுதிகள் தற்போது உலகத்தில் எங்கு உள்ளது?
அசிரியா (Assriya), அசீரிய வல்லரசுயில் (Assyrian Empire) அமைந்துள்ளது. இங்கு அக்காடியன் (Akkadian), சுமேரியன் (Sumerian), அராமைக் (Aramaic) போன்ற மொழிகள் உள்ளன. இங்கு முடியாட்சி (Monarchy) மட்டுமே நடைபெறும். இது பண்டைய மெசொப்பொத்தேமியா மதம் (Mesopotamia religion) சார்ந்த நகரம் ஆகும். இதனின் சகாப்தம் (era) வெண்கலக் காலம் (Bronze age) ஆகும். அசிரியா சும்மர் 1,94,249 கி. மீ ^2 நிலப்பரப்புக் கொண்டாது. இங்கு மினா நாணயம் (Mina currency) பயன்படுத்துவர். அசூர் (Assur) இதனின் தலைநகரம் ஆகும்.
Olden sculpture drawn on a wall |
ஏஜியன் (Aegean) கடல் கிரேக்க (Greek) மற்றும் அனடோலியன் தீபகற்பங்கள் (Anatolian peninsulas) நடுவில் அமைந்துள்ளது. இதனின் நிலப்பரப்பு சும்மர் 2,15,000 கி. மீ. ^2 ஆகும். மத்திய தரைக்கடல் (Mediterranean sea) பகுதியில் அமைந்துள்ளது. கிரீஸ் (Greece), துருக்கி (Turkey), செர்மியா (Serbia), பல்கேரியா (Bulgaria) மற்றும் மாசிடோனியா (North Macedonia) நாடுகளில் உள்ள நதிகள் இந்த கடலில் சேரும்.
4. அறுபாகைமானி என்றால் என்ன? (What is Sextant?)
அறுபாகைமானி (sextant) என்பது ஒரு கருவி அதில் இரட்டை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் (double reflection mirrors) இருக்கும். இந்த கருவியின் மூலம் இரண்டு பார்க்க கூடியாப் பொருகளின் (visible objects) கோண தூரத்தை (angular distance) அளக்க முடியும். மலுமிகள் இதனை பயன்படுத்தி வானில் உள்ள அடிவாணம் (horizon) மற்றும் வானியல் பொருகளின் (astronomical objects) (எ.கா. சூரியன், நிலா, நட்சத்திரம்) இடையே உள்ள தூரத்தை (distance) அளக்க முடியும். இந்த கருவியை நமது கண் பார்வையின் மூலம் பயன்படுத்த வேண்டும்.
Sailors use Sextant instrument in olden times for their Navigation using stars as their reference point |
5. எந்த ஐரேப்பியர் இந்தியா மற்றும் அப்பிரிக்கா கடல் வழிதடத்தைக் கண்டுபிடித்தார்? (Which European found the sea ways for India and African?)
வாஸ்கோ டா காமா (Vasco da Gama) இந்தியா மற்றும் அப்பிரிக்கா கடல் வழிதடத்தைக் கண்டுபிடித்தார். இவர் ஒரு போர்த்துகீசிய ஆய்வாளர் (Portuguese explorer). இவர் போர்ச்சுகலில் (Portugal) 1460 ஆம் ஆண்டு பிறந்தார். பிறகு 1524 ஆம் ஆண்டு கோச்சியில் (Kochi) இறந்துவிட்டார். இவரின் கப்பலின் பெயர் நட்சத்திர கேப்ரியல் (Sào Gabriel) ஆகும்.
Sculpture of Vasco da gama and his crew |
6. கார்ட்டோகிராப்பி (Cartography) என்றால் என்ன?
கார்ட்டோகிராப்பி (cartography) அல்லது வரைபடம் தயாரித்தல் (map making) என்பது வரைபடத்தை தயாரிக்கும் படிப்பு மற்றும் பயிற்சி ஆகும். இதில் அறிவியல், கலை மற்றும் கிராஃபிக் (graphics) போன்ற திறமைகளின் பிரயோகம் (application) வேண்டும். இதில் தொகுப்பு (compilation) மற்றும் வடிவமைப்பு (desgin) பற்றிய சிறப்பு அறிவு பெறுதல் வேண்டும்.
Designing and making of map is called as Cartography |
3 Comments
I have seen the world map in a paper and also in globus. I tired to make the flat map into spherical shape but its not fit. And i also tried the vice versa way. Both of them are not fitted together. Why this happening?
ReplyDeleteIn the world map, Greenland is shown bigger than China. But, China is four times bigger than Greenland. So, the information given in the world map is wrong. The map is made by Remarkable theorem. Perfect cricle has zero curvature but sphere has positive curvature. Sphere can't be perfect flat surface and also vice versa. Sphere map (globus) can't be changed into flat map and also vice versa. So, sphere shape (globus) to flat surface can be done by changing upper and lower sphere as large size and the middle sphere as small size. So globus map can fit in flat map.
DeleteRemarkable theorem:
Delete"If a curved surface is developed upon any other surface. Whatever, the measure of curvature in each point remains unchanged."
Enter your comments :)