Ticker

6/recent/ticker-posts

Translate

பூமியைப் போலவே சூரிய மண்டலத்தில் இருக்கும் அனைத்து கோள்களிலும் மழை பெய்யுமா? | எவ்வித தன்மை கொண்ட மழை பெய்யும்? | Light year | Solar system | HD189733b | OGLETR56b | Rainbow | 'Diamond Rain in Saturn' |

            மழை (Rain) உலகில் உள்ள அனைவரும் விரும்பும் மற்றும் ரசிக்கும் பொருள் ஆகும். நாம் நம் சிறு வயதில் மழைக் காலத்தில் மழையில் காகிதக் கப்பல்களை (paper boat) செய்து மழைநீரில் விளையாடிக் கொண்டு இருந்தோம். மழை மனிதர்க்கு மட்டும் இல்லாமல் பிற விலங்குகளையும் மகிழ்ச்சி படுத்தும். விலங்குகள் மழையில் விளையாடிக் கொண்டு இருக்கும். மயில்கள் நாடனமடும் மற்றும் பறவைகள் அழகாகக் கூவும். நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பும். விவசாயிகள் (farmers) வாய்க்கால்லை மழைநீர் வெளிச் செல்ல வேலைச் செய்துக் கொண்டு இருப்பார்.  குழந்தைகள் செற்றில் விளையாடிக் கொண்டு இருப்பர். மழையால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.



Water droplets falling
Water droplets falling in water
Amazing picture!!!


             மழை (Rain) பூமியில் (Earth) உள்ள ஒரு இன்றியமையான பொருள் ஆகும். பூமியைப் போலவே சூரிய மண்டலத்தில் (solar system) இருக்கும் அனைத்துக் கோள்களிலும் (planets) மழை (Rainfall) பெய்யுமா? மற்ற கோள்களில் (other planets) எவ்வித தன்மைக் (texture) கொண்ட மழை பெய்யும்? (Other than solar system) சூரிய மண்டலத்தை தவிர வேறு எந்தக் கோள்களில் (other planets rain fall) மழை பெய்யுமா?

மழை என்றால் என்ன? எப்படி உருவாகிறது?  (What is rain? How it forms?)

           மழை என்றால் மேகங்கள் (clouds) உள்ளச் சிறுச் சிறுத் தண்ணீர் துளிகள், மேகத்தில் இருந்து பூமியில் உள்ள நிலப்பரப்புக்கு வருவது மழை எனப்படும். நிலப்பரப்பில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் உள்ள தண்ணீர் சூரியனின் வெபப்பத்தால் தண்ணீர் நீர் அவியாகும். இந்த நீர் அவிகள் (vapour) மேகத்திற்குச் சென்று குளிர்ந்து தண்ணீர் துளிகளாக மாறும், இதே முறைகள் மறுபடியும் மறுபடியும் நடந்து மேங்களில் தண்ணீர் துளிகள் அதிகம் சேரும். இதன் காரணமாக மேகங்கள் கருமை நிறம் பெற்று மழையாக பொழியும்.


View of Rain clouds
Amazing view of Rainy clouds
Wow!!


பூமியைப் போலவே சூரிய மண்டலத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களிலும் மழை பெய்யுமா? (Like earth, does planets in the solar system have rainfalls?)

     நீங்கள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள் ஒரு செய்தியைப் பற்றி. அதுவே, சனிக்கோளில் (Saturn) வைர (diamond) மழை பொழிகிறது! சனிக்கோளில் அதிகபட்சம் சும்மர் 1 செ. மீ. அளவு வரையுள்ள வைரத் துணுக்குகள் இருக்கும். சனிக்கோளில் உள்ள வாயு (gas) மண்டலத்தில் உருவாகி, அவை கீழே மழை போல் விழுகின்றன. அக்கோளின் மையத்தில் மிகக் கூடுதல் வெப்பம் உள்ளதால், வைரத் துணுக்குகள் மீண்டும் உருகிவிடும். சனிக்கோளின் வாயு மண்டலத்தில் செறிவாக மீத்தேன் (methane) அதிகம் உள்ளது. அங்கே வீசும் காற்றின் உராய்வு விசை (friction) மூலம் தான், அங்கு நிலை மின்சாரம் உருவாகி மின்னல்கள் நிலபரப்பை நோக்கி அடிக்கும். அந்த மின்னலின் போது, அங்கு உள்ள மீத்தேன், கார்பனாக (carbon) மாறும், பிறகு அவை அழுத்தம் காரணமாக கிராபைட் (graphite) மற்றும் வைரமாக மாறும் என விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதே போல, நெப்டியூன் (Neptune) கோளிலும் நடைபெறலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.


View of Jupiter and earth
View of Jupiter planet with earth in its frame
Bros...


       வீனஸ் (Venus) எனும் வெள்ளிக்கோளில் சல்ஃப்யூரிக் அமில (sulphuric acid) மழை பொழிகிறது! ஆயினும் இந்த அமில மழை, வெள்ளிக்கோளின் தரையைத் தொடாது. அதன் தரைப்பரப்பின் வெப்பம் சராசரியாக 480, டிகிரி இருக்கும். எனவே தான், சும்மர் 25 கி. மீ உயரத்தை அடைந்ததும் அமில மழை மறுபடியும் ஆவியாகிவிடும். செவ்வாய்க் (Mars) கோளில் கார்பன்டை ஆக்லைடு (carbon dioxide) பனியாக உருகி, உலர்பனி மழை பொழியும் என விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வியாழன் (Juptier) கோளில் திரவ நிலையின் (liquid state) உள்ள ஹீலிய (helium) மழை பொழியும் என விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


Close view of Venus planet
Venus has the most toxic atmosphere in the solar system
Venus, Nasa is coming for you with two new mission
DAVINCI+ and VERTIAS by the end of 2030


சூரிய மண்டலத்தை தவிர வேறு கோள்களில் மழை பொழியுமா? (Other than solar system, Does any planets have rainfall?)

       பூமியில் இருந்து 63 ஒளியாண்டுகள் (light years) தொலைவில் உள்ள ஒரு கோள். இதனின் பெயர் HD189733b. இதில் சிலிக்கான் (silicon) (கண்ணாடி) மழை பொழிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தரைப்பரப்பில் வெப்பம் சும்மர் 2,000 டிகிரி கொண்ட OGLETR56b எனும் கோளில் இரும்பு மழை பொழியக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Galaxies in space
Amazing view of the galaxies in space
Interstellar space welcomes you......


மழை பெய்யும் போது (Rainfall), வானவில் (Rainbow) எப்படி உருவாகிறது (How does form)? பிற கிரகங்களில் (other planets) வானவில் உருவாகுமா?

         வானவில், மழை துளி (water droplet) மற்றும் சூரிய ஒளியினால் (sunlight) உருவாகும். வானில் இரட்டை (double) வானவில் உருவாகும். இதற்கு, வெள்ளை ஒளி (white light) மற்றும் தண்ணீர் துளி தேவை படும்.  வெள்ளை ஒளியை சூரியன் தரும். மேலும், தண்ணீர் துளி மழையில் இருந்து வரும். வானவில் எப்போதும் சூரியனின் எதிர் திசையில் (opposite direction) தான் உருவாகும். வெள்ளை ஒளி தண்ணீர் துளியை தொடும் போது, பிற நிறங்கள் பிரிந்து (separate) உருவாகும். இதனை ஒளி சிதறல் (dispersion) என்பர். இப்படி நடப்பதற்கான காரணம், ஒளியின் வேகம் காற்று மற்றும் வெற்றிடத்தில் (vacuum) சமமாக இருக்கும். ஆனால், தண்ணீரில் ஒளியின் வேகம் குறைவாக இருக்கும். இதனால், ஒளி தண்ணீர் துளியில் வளையும் (bend). இதனை, ஒளிவிலகல் (refraction) என்பர்.

      வெள்ளை ஒளியில் ஏழு நிறங்கள் இருக்கும். ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு அலை நீளங்களைக் (wavelength) கொண்டு இருக்கும். அதனால், ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு வேகத்தில் செல்லும். மேலும், வெவ்வேறு கோணத்தில் (angle) வளையும். தண்ணீர் துளியில் இரட்டை ஒளிவிலகல் (refraction) நடைபெறும். வானவில் என்பது ஒரு ஒளியில் மாயை (optical illusion) ஆகும். 


View of rainbow
View of a rainbow in a grassland
Amazing!!!


        சாதாரண (normal) வானவில் இரட்டை ஒளிவிலகல் மற்றும் ஒரு பிரதிபலிப்பு (reflection) மூலம் உருவாகும். இந்த வானவில் மேலே மற்றொரு வானவில் உருவாகும். இதனை இரண்டாவது (secondary) வானவில் என்பர். இது இரட்டை ஒளிவிலகல் மற்றும் பிரதிபலிப்பு மூலம் உருவாகும்.

        சூரிய ஒளி மற்றும் தண்ணீர் துளி இருக்கும் அனைத்து கிரகங்கள் (planets) வானவில் உருவாகும். பிற கிரகங்களில் வானவில் இதே நிறங்களில் தான் இருக்கும்.

   வானவில் நிறங்கள்: ஊதா (violet), இண்டிகோ (Indigo) , நீலம் (Blue), பச்சை (Green), மஞ்சள் (Yellow), ஆரஞ்சு (Orange) மற்றும் சிவப்பு (Red). 


தெரிந்துக் கொள்வோம்: (Get known)

          நீர்ப் பிடிப்பு கொண்ட மழை, நமக்கு தெரிந்தவரை பூமியில் மட்டுமே! ஒரே ஒரு ஹைட்ரஜன் (hydrogen) மற்றும் ஆக்சிஜன் (oxygen) கொண்ட ஹைட்ராக்சில் (hydroxyl) மழை, நிலவில் பொழிவதாக, டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கண்டுபிடித்தார்.


IQ art
Interesting right??...


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. ஒளியாண்டு என்றால் என்ன? (What is light year?)

       ஒளியாண்டு என்றால் ஒளி (light) ஒரு ஆண்டில் (a year) கடக்கும் தூரம் (distance) ஆகும். ஒளியாண்டு வெற்றிடத்தில் (vacuum) பயணம் செய்யும் போது கணக்கிடப்படும். 

    ஒளியாண்டு = ஒளியின் வேகம் (velocity of light) × ஒரு ஆண்டு (year) (விநாடிகள்) (in seconds) ஆகும்.

2. சூரிய மண்டலத்தின் உள்ள கோள்கள் யாவை? (What are the planets in the solar system?)

     -புதன், (Mercury)

     -வெள்ளி, (Venus) 

      -பூமி, (Earth)

      -செவ்வாய், (Mars)

      -வியாழன், (Juptier)

      -சனி, (Saturn)

      -யுரான்ஸ், (Uranus)

      -நெப்டியூன். (Neptune)


Solar system view
View of all the planets in the solar system aligning in a straight line
But reality hurts...!! 


3. கோள்கள் மற்றும் அதனை ஆய்வு செய்யும் செயற்கைக் கோள் யாவை? (Satellites for each planet in the solar system?)

       புதன் (Mars) - மரைனர் (Mariner) 10, தூதர் (Messenger) மற்றும் பெப்பி கொழும்பு. (Bepi colomob) (ஜாக்சா (JAXA), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) (European space agency) இருக்கும்.

        வெள்ளி (Venus) - வெனேரா (Venera) 1, அமெரிக்கன் மரைனர் (American mariner) 2 மற்றும் ஸோண்ட் (Zond) (நாசா (NASA), சோவியத் ஒன்றியம் (Soviet union) இருக்கும்.

         பூமி (Earth) - ஐ. எம். எஸ் (IMS), மைக்ரோசாட் (Microsat) மற்றும் கார்டோசாட். (Cartosat) (இஸ்ரோ (ISRO) இருக்கும்.

         செவ்வாய் (Mars) - செவ்வாய் சுற்றுப்பாதை கோள் (Mars orbiter mission), நொசோமி (Nozomi) மற்றும் போபோஸ் (Phobos) (இஸ்ரோ (ISRO), ஜாக்சா (JAXA) இருக்கும்.

         வியாழன் (Jupiter) - ஜுனோ (Juno) (நாசா (NASA) இருக்கும்.

         சனி (Saturn)- வாயேஜர் (voyager) மற்றும் ஹ்யூஜென்ஸ் (Huygens) (நாசா (NASA) இருக்கும்.

         யுரான்ஸ் (Urans) - வாயேஜர் (voyager) (நாசா) (NASA) இருக்கும்.

         நெப்டியூன் (Neptune) - வாயேஜர் (நாசா) இருக்கும்.


Satellite in LEO
View of the Soyuz spacecraft in the space


4. விண்வெளி ஆய்வாளர்கள் கோள்களை எதனைப் பயன்படுத்திக் கண்டுபிடிப்பார்கள்? (Astronomer use which techniques to find planets?)

      விண்வெளி ஆய்வாளர்கள் தொலைநோக்கி (telescopes), செயற்கைக் கோள்கள் மற்றும் வானொலி (Radio) தொலைநோக்கி மூலம் கோள்களைக் கண்டுபிடிப்பார்கள். செயற்கைக் கோளில் உள்ள டிரான்ஸ்பாண்டர் (transponder) மற்றும் ஒருங்கிணைந்த ரிசீவர் (integrated recevior) மூலம் வானொலி அலைகள் (waves) வைத்து கோள்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பார்கள். தொலைநோக்கிக்கள் விண்வெளியில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் அமைந்து இருக்கும்.


James Webb telescope
The greatest space telescope of man kind
 James Webb telescope
 is launched successfully on 25 December 2021


5. HD189733b மற்றும் OGLETR56b ஆகியக் கோள்களை யார் கண்டுபிடித்தார்?

     HD189733b என்ற கோளை பிரான்ஸ் (france Astronomer) வானியலாளர்கள் கண்டுபிடித்தனார். இந்த கோள் உல்பெக்குலா (Vulpecula) என்ற நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்துள்ளது. பிரான்ஸ் வானியலாளர் சங்கத்தின் பெயர் பூச்சிட் அல் (Bouchy et al) ஆகும். ஹாட் புரோவென்ஸ் (Haute provence) ஆய்வகத்தில் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது.


Dark side of planet
View at the dark side of the planet


    OGLETR56b என்ற கோளை கோனாச்சி (konachi) என்ற வானிலை ஆய்வாளர் கண்டுபிடித்தார். இந்த கோளை 2002 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது.


Planet asteroid
A planet surrounded by lightning and asteroids

     மீத்தேன் (methane) - CH4, இது ஒரு அல்கேன் (alkane) ஆகும். இதனின் நிறை (mass) 16.04 g/mol. இதனின் அடர்த்தி (density) 0.657 Kg/m^3. 

     கார்பன் (Carbon) - அணு எண் (Atomic number): 6. இதனின் உருகும் நிலை (melting point) 3,550°C ஆகும்.

     வைரம் (Diamond) - இதனின் அடர்த்தி 3.51 g/cm^3 ஆகும். இது ஆக்டோஹெட்ரல் (octahedral shape) வடிவம் ஆகும்.

     கிராபைட் (Graphite) - அதனின் அடர்த்தி 2.23 g/cm^3 ஆகும். இது அறுகோண (hexagonal shape) வடிவம் ஆகும்.

     சிலிக்கான் (Silicon) - இதனின் நிறை 28.08 g/mol ஆகும்.


Scientific calculator
Scientific calculator placed on top of a book


      சல்ஃப்யூரிக் அமிலம் (Sulphuric acid) - H2SO4, இதனின் நிறை 98.07 g/mol ஆகும். இதனின் அடர்த்தி 1.83 g/cm^3 ஆகும்.

     கார்பன்டை ஆக்லைடு (Carbon dioxide) - CO2, இதனின் நிறை 44.01 g/mol ஆகும். இதனின் கொதிக்கும் நிலை (Boiling point):. 78.46°C ஆகும்.

     ஹீலியம் (Helium) - இதனின் நிறை 4.002 ஆகும். இதனின் கொதிக்கும் நிலை -268.9°C.

     ஹைட்ராக்சில் (Hydroxyl) - OH, இதனின் நிறை 17.007 ஆகும்.




*Note: The images in this post may or may not relevant to the topics.



     

Post a Comment

3 Comments

  1. How can the voyager satellite can travel upto the neptune planet without any problems? If it's easy means why we are not sending more and more satellites to large distance planets?

    ReplyDelete
    Replies
    1. Voyager 2 satellite has many defence systems to with withstand space asteroids,meteoroids and also many particles in space. Space is very large. So, satellite has a less chance of getting hit by the large particles in the space. It has defence system that will break particles if it hits the satellite. Satellite is designed as if a system gets damaged, other system can work independently. The energy source for this satellite is Radio waves. Plutonium 238 isotope is also installed in that as a another source for energy.

      Delete
    2. Voyager satellite took 12 years to reach Neptune. So, it's hard to launch satellites to large distances. Also till now, there is no confirmation about any new satellites that are going to launch for the Neptune planet exploration.

      Delete

Enter your comments :)