Ticker

6/recent/ticker-posts

Translate

காலப் பயணம் சாத்தியமாகுமா? | எந்த கோட்பாட்டின் அடிப்படையில் காலப்பயணத்தைப் பயன்படுத்த முடியும்? | காலப்பயணத்தில் உள்ள முரண்பாடுகள் | Catesian co-ordinates | Einstein's special relativity | Grandfather and Bootstrap paradox |

          நேரம் (Time) இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் ஒரு முக்கியப் பொருள் ஆகும். ஒருவர் நேரத்தை வீண்ணாடித்தால் (Time passing) மறுபடியும் அந்த நேரத்தைப் பயன்படுத்த முடியாது. அதனால் மக்கள் தங்களது நேரத்தை வீண்ணாக விரும்பம் மாாட்டர்கள். ''காலம் பொன் போன்றாது'' என்னும் பழமொழி (Proverb) காலத்தின் முக்கியத்தை (importance) உணர்த்துகிறது. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் பிறகாலத்தில் அதனின் விளைவுகளைச் சந்திக்க கூடும்.


         ஆனால், நாம் ஒருக் காலத்தைக் கடக்கும் கருவியை (Time Travel machine) உருவாக்கி, இதன் மூலம் நாம் கடந்தக் காலத்தில் செய்தத் தவறுகளைத் திருத்த முடியும்.

        ஆனால், அதற்கு முதலில் காலப் பயணம் (Time travel) சாத்தியமாகுமா (is possible)? காலப் பயத்தை எவ்வாறு பயன்படுத்துதால் (use) வேண்டும்? எந்தக் கோட்பாட்டை (theory) வைத்துக் காலப் பயணத்தைச் (Time travel) செய்ய (how) வேண்டும்? காலப் பயணத்தில் உள்ள முரண்பாடுகள் (paradox) என்ன?


Time Travel Machine
Time Travel
>>>>>Forward and Backward<<<<<


நேரம் என்றால் என்ன? (What is Time?)

         நேரம் என்றால் நாம் பயன்படுத்தும் காலத்தைக் குறிப்பிடும். நேரத்திற்கு உண்ணுதல், படித்தால் எனப் பலச் செயல்கள் நடைபெறுகிறது. பூமியும் நேரத்திற்கு ஏற்ப காலை மற்றும் மாலை, பனி மற்றும் மழைப் போன்றச் செயல்களைச் செய்கிறது. நேரத்தை நம்மால் கணக்கிட மட்டுமே முடியும். அதனை மாற்றுவதுக் (changing) கடினமானச் செயல் ஆகும். காலத்தை மாற்ற முடியும் எனக் காலப் பயணம் கோட்பாடுகள் கூறுகிறது.


Sand Hourglass
View of Sand Hourglass 


காலப் பயணம் சாத்தியமனால், எந்தக் கோட்பாட்டை மையமாகக் கொண்டுக் காலப் பயணத்தைப் பயன்ப் படுத்த வேண்டும்? (If Time travel is possible then, based on which theory does it works?)

       நேர்கோட்டின் (straight line) மீது நம்மால் முன்னே (Forward) செல்ல முடியும் மற்றும் பின்னே (Backward) செல்ல முடியும். அதே கோட்டிலிருந்துப் பக்கவாட்டில் உள்ள இடது (left) மற்றும் வலதுப் (right) புறம் (sides) செல்ல முடியும். அதுவே நாம் பறவையாக இருந்தால், நாம் ஆகாயத்தில் மேல் (up side) மற்றும் கீழ் (down side) உள்ள பகுதிகளுக்குச் செல்ல முடியும். இதை தான் x, y, z என்ற மூன்று பரிமாணங்கள் (dimensions) எனக் கணதத்தில் (Mathematics) காண்கிறோம். நாம் வாழும் இந்தப் பூமி மற்றும் விண்வெளி மூன்று பரிமாணங்களைக் கொண்டது.


Time machine model
Model of Time Machine 
Imagination....


          ஐன்ஸ்ட்னின் தத்துவப்படி (According to Einstein's philosophy), நேரமும் காலமும் இணைந்து நான்காவது பரிமாணம் இருக்கும். மூன்று பரிமாணங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. அதே போல தான் காலம் என்னும் நான்காம் பரிமாணம், பிற மூன்று பரிமாணங்களுடன் பிணைந்து இருக்கும். மூன்று பரிமாணங்களில் நாம் முன்னும் பின்னும், இடதும் வலதும், மேலும் கீழும் செல்வதுப் போல காலம் என்னும் நான்காம் பரிமாணத்தில் நம்மால் முன்னும் பின்னும் செல்வது தான் காலப் பயணம் எனப்படும்.

காலப் பயணத்தின் உள்ள முரண்பாடுகள் என்ன? (What are the paradox in the time travel?)

         காலப் பயணத்தில் பல முரண்பாடுகள் உள்ளன, அதனைப் பற்றி நாம் எடுத்துக்காட்டுக் கதைகளுடன் (story) பார்ப்போம்.

தாத்தாவைக் (Grandfather) கொன்ற (killed) பேரன்! (Grandson)

     அருணின் பாட்டி அம்மாள், அருணின் தாத்தாவைப் பற்றிப் புகழ்ந்து கூறுவர். ஆனால், அருணின் தாத்தா பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 

      அருண் தனது தாத்தாவின் சிறு வயது வாழ்க்கையைப் பார்க்க எண்ணினான். அருண் காலப் பயண இயந்திரத்தை உருவாக்கி, தனது தாத்தாவின் சிறு வயதுக் கையேடு (handbook) உள்ள நாள் ஒன்றுக்குச் சென்றான். 

      அருண் துரதிருஷ்டமாகக் கால இயந்திரம் தாத்தாவின் மேல் மோதிவிடுகிறது. அதனால், தாத்தா இறந்துவிடுகிறார். இதனால் அருணின் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் திருமணம் நடைபெறாமலே போய்விடுகிறது. இதன் காரணமாக அருணின் அப்பா பிறக்காமல் போய்விடுகிறார்.


Grandfather animation drawing
Grandfather smoking cigar 
Animation drawing


      அதனால், கால இயந்திரத்தை உருவாக்கிய அருண் பிறக்கவில்லை. அதனால், தாத்தாவின் மேல் கால இயந்திரம் மோதி இறக்கமாட்டார். தாத்தா அருணின் பாட்டியை திருமணம் செய்துகொள்வார். அருணின் தந்தையும் பிறப்பார். பின்னர், அருணும் பிறப்பான். பிறகு, காலத்தில் பின்னோக்கிச் சென்று, மறுபடியும் தாத்தாவை கொன்ற விடுவான்.

      பின்னர்,......   மறுபடியும் திருமணம் நடைபெறமால் போகும்.

      இந்த கதை ஒரு சூழலைப் (cycle) போல சுழன்றுக் கொண்டே இருக்கும். காலப் பயணத்தில் ஏற்படும், இந்த முரண்பாடுக்கு பாட்டன் முரண்பாடு (Grandfather paradox) என்று பெயர்.

கவிஞரைப் (poet) பாராட்டிய (praise) ரசிகர்! (Fan)

       ஒரு மிகச் சிறந்த கவிஞர் ஒருவர் ஒரு கவிதையை (poem) எழுதியுள்ளர். அதனை படித்த அவரின் ரசிகன் ஒருவர் சிலிர்த்துப் போய்கிறார். ஆனால், அந்த கவிஞர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரை பார்த்து பாராட்டியே தீரவேண்டும் என்று எண்ணி ரசிகன், காலத்தில் பின்னோக்கிச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.


Reading poem with cup of coffee
Man reading a poem with a cup of coffee


       கவிஞரைச் சந்தித்த ரசிகன், இந்த கவிதையைச் சொல்லிச் சிலாக்கிறீர்கள். குழப்பம் என்னவென்றால், கவிஞர் இந்த கவிதையை எழுதும் காலத்திற்கு முன்னரே, அவரைச் சந்தித்து, இந்தக் கவிதையைச் சொல்லிவிடுகிறீர்கள். அதற்கு கவிஞர், ''அடடா இப்படி ஒரு கவிதையை நான் இதுவரை எழுதவே இல்லையே. இப்பொழுது எழுதிவிடுகிறேன்'' என்று சொல்லி அந்த கவிதையை அவர் எழுதுகிறார் என்று கருதிக்கொள்வோம். அப்படி என்றால், உண்மையில் அந்த கவிதை வரிகள் எங்கிருந்து வந்திருக்கும்?

      இது போன்ற காலச்சிக்கல்களால் ஏற்படும் முரண்பாடுகளை பூட்ஸ்ட்ராப் முரண்பாடு (Bootstrap Paradox) என்பர்.

பாட்டன் முரண்பாட்டிற்கான தீர்வு (Solution to Grandfather paradox)!

    நமக்கு தெரிந்த வரை, காலம் ஒரே திசையில் தான் செல்லும். நாம் காலத்திற்கு பின்னால் (back) சென்றால், நாம் நமது கடந்தக் காலத்திற்கு (past) செல்ல முடியாது. நாம் நமது கடந்தக் காலம் போல் இருக்கும் நகல் (copy) காலத்திற்கு மட்டுமே செல்ல முடியும். இதனை மாற்று பிரபஞ்சம் (alternate universe) என்பர். ஆனால், இது குழப்பங்கள் (confusion) நிறைந்த மற்றும் பொருத்தமற்ற தீர்வு (irrelevant solution) ஆகும். இது நிகழ்வுகளின் வளையல் (looping of events) ஆகும். இதற்கு அறிவியல் பூர்வமான விடையை குவாண்டம் சூப்பர் போசிஷன் (Quantum superposition principle) கோட்பாடு தருகிறது. இந்த சுழல் என்பது தருக்க நிலைத்தன்மை (logical consistent) = இருப்பு (existence) இரண்டும் சமமாக இருக்காது (not equal). கடந்தக் கால காலப்பயணம் என்பது சாத்தியமற்றது (impossible) ஆகும்.

காலம் என்பது நிரந்தரமான மாயை! (Time is an illiusion!)

      'நேரத்தை வீணாக செலவழிக்காதே, நேரத்தை மிச்சப் படுத்து' என்று சொல்லும்போது, நேரத்தை ஒரு அளவு (Quantitative) போலக் கருதுகிறோம். 'காலப்போக்கில் போவோம்' என்று சொல்லும்போது, காலத்தை ஒரு ஊடமாக  (medium) கருதுகிறோம். காலப்பயணம் மட்டும் அல்ல, காலமே புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் இருகிறது.


Stairs loop
Stairs going up loop
Confusing...


            நவீன இயற்பியல் தத்துவங்களின் அடிப்படையில், காலப்பயணம் குறித்த யூகங்கள் இருந்தாலூம், இதுவரை யாரும் பணித்து நிரூபிக்கவில்லை. மறுபுறத்தில் காலப் பயணம் சாத்தியமில்லை எனவும் நிறுவவில்லை. எனவே, காலப் பயணம் என்பது இன்றைய அறிவியலைப் பொறுத்தவரை ஒரு புதிர்தான்!

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. கார்ட்சியன் ஆள்க் கூறுகள் என்றால் என்ன? (What is cartesian co- ordinates?)

       கார்ட்சியன் ஆள்க் கூறுகள் (cartesian co- ordinates) என்றால் ஒரு பொருளின் இருப்பிடம் (location) பற்றிக் கூறும் அல்லது குறிக்கும் கூறுகள் (points) ஆகும். இது ஒருப் புள்ளியின் சம்பந்தமான குறிப்பு புள்ளி (relative specific point) ஆகும். இந்த புள்ளி மிகவும் சிறிய அளவில் செங்குத்தாக இருக்கும். (Shortest perpendicular distance)


Wooden globe
Wooden globe in a wooden stand


X அச்சு (axes) என்றால் X ஆள்கூறுகள் (co- ordinates) ஆகும்.

Y அச்சு (axes) என்றால் Y ஆள்கூறுகள் (co- ordinates) ஆகும்.

Z அச்சு (axes) என்றால் Z ஆள்கூறுகள் (co- ordinates) ஆகும்.

2. ஐன்ஸ்ட்னின் காலப் பயணத்தைப் பற்றியக் கோட்டுபாடுகள் என்ன? (what are the Einstein theories about time travel?

      ஐன்ஸ்ட்னின் சிறப்பு சாார்பியல் (special relativity) கோட்டுபாடுப்படி நேரம் மெதுவாக (slow) அல்லது வேகமாக (speed) செல்லும் தன்மைக் கொண்டு இருக்கும். அது ஒரு பொருளைச் சார்ந்து (relative) இருக்கும். இது குறிப்பு சட்டகம் சார்ந்த (frame of reference) இருக்கும். இதை தான் ஐன்ஸ்ட்னின் சிறப்பு சார்பியல் கோட்டுபாடு என்பர்.


Einstein face art
Amazing art of Albert Einstein's Face


சிறப்பு சார்பியல் கோட்டுபாட்டின் (Special relativity theory) விதிகள் (laws):

    1. இயற்பியல் விதிகள் (Physics law's) அனைத்தும் மாறாதது (invariant). (ஒத்த இருக்கும்) (identical) இந்த விதி இடைநிலை (interial) குறிப்பு சட்டகத்தில் மட்டுமே செயல்படும்.

   2. வெற்றிடத்தில் (vacuum) ஒளியின் வேகம் எல்லாப் பார்வையாளர்களுக்கும் (all observers) ஒரே  மாதிரி இருக்கும். இதற்கு ஒளியின் இயக்கத்தைப் (motion of light) பொருட்படுத்தாமல் (regardless) இருக்க வேண்டும்.

3. பாட்டன் மற்றும் பூட்ஸ்ட்ராப் முரண்பாடுகளை கண்டுபிடித்தவர்கள் யார்? (Who proposed Grandfather and Bootstrap Paradox?)

   ரெனே பார்ஜாவெல் (Rene Barjavel), பாட்டன் முரண்பாட்டைக் (Grandfather paradox) கண்டுபிடித்தர். இவர் 1911 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாளன்று பிறந்தார். இவர் பிரஞ்சு ஆசிரியர் (French author) மற்றும் பத்திரிகையாளர் (journalist) ஆவார். இவர் பிரான்ஸ் (France) நாட்டில் உள்ள நியான்ஸ்யில் (Nyons) பிறந்தார்.


Paradox writings
paradox writing works on a paper


   ராபர்ட் எ ஹெய்ன்லின் (Robert A Heinlein), பூட்ஸ்ட்ராப் முரண்பாட்டைக் (Bootstrap paradox) கண்டுபிடித்தர். இவர் 1907 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் நாளன்று பிறந்தார். இவர் அமெரிக்கன் அறிவியல் புனைகதை ஆசிரியர் (science fiction author), வானூர்தி பொறியாளர் (aeronautical engineer) மற்றும் கடற்படை (naval officer) அதிகாரி ஆவார். இவர் அமெரிக்க (USA) நாட்டில் உள்ள கலிஃபோர்னியாவில் (Califorina) பிறந்தார்.

4. அளவு (Quantitative) மற்றும் ஊடகம் (Medium) என்றால் என்ன?

   அளவு (Quantitative) என்றால் ஒருப் பொருளின் அளக்கும் (measurable quantity) தன்மை ஆகும். எடுத்துக் காட்டுக்கள் நீளம் (length), நிறை (mass), வெப்ப நிலை (temperature) மற்றும் காலம் (time) ஆகியன அளவுகள் ஆகும்.

    ஊடகம் (Medium) என்றால் ஒரு ஆற்றலின் பரிமாற்றத்திற்கு (transfer of energy) உதவும் பொருள் ஆகும். இது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு (from one place to another) பரிமாற்றம் நடைபெறும். ஒலி (sound waves) அலைகள் ஊடகத்தில் மட்டுமே பரிமாற்றம் நடைபெறும். ஒளி (light waves) அலைகள் ஊடகம் இல்லாமல் பரிமாற்றம் நடைபெறும்.




*Note: The images in this post may or may not relevant to the topics.


Post a Comment

2 Comments

  1. Oh! Lots of theories on time travel. Last year i watched a movie "endgame" it also based on time travel. So time travel is all just a theory #notpossible ...

    ReplyDelete
  2. Yeah. There are many movies based on time travel theories. But it's all just a theory. Time travel may be possible or may not be possible. ?!

    ReplyDelete

Enter your comments :)