Ticker

6/recent/ticker-posts

Translate

எதிர் காலத்தில் மனித இனம் நிஜமாகவே பூமியை விட்டு, வேறு கிரகத்தில் வாழ வேண்டிய நிலை வருமா? | இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா? | Red Giant | SpaceX | NASA | DART | Starship | Mars Colonization | Elon musk |

              பூமி (Earth), இந்த மாபெரும் பிரஞ்சத்தில் (Universe) தண்ணீர், உயிரினங்கள், மரங்கள் மற்றும் ஒரு உயிரினம் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையைக் (condition) கொண்ட ஒரே கிரகம் (planet) ஆகும். பூமியில் மனிதன் மற்றும் பல்வேறு வகையான விலங்குகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. மேலும், மரங்கள் மற்றும் செடிகளில் பூக்கள் வளர ஏற்ற சூழ்நிலையை கொண்டது பூமி கிரகம் மட்டுமே ஆகும். ஆனால், பூமியில் மக்கள் தொகை அதிகரிப்பு, கட்டிடங்கள் (construction) கட்டுவதற்காக இயற்கை வளங்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்களால் பூமியின் உள்ள வளங்கள் (resources) மற்றும் வாழ்வதற்கு தேவை படும் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் (changes) அடைந்து வருகிறது. இவ்வாறு மனிதனின் செயல்களால் மழை பெய்யும் முறைகளில் மாற்றங்கள் அடைகிறது. அதன் காரணமாக, புயல் (cyclone) போன்ற பேரிடர்கள் (disasters) ஏற்படுகிறது. மேலும், விண்வெளியில் (Space) பெரிய அளவுகளில் உள்ள சிறுகோள்கள் (Asteroids) பூமியின் மேல் விழுந்தால், டைனோசர்கள் (Dinosaurs) அழிந்தது போலவே, மனித இனமும் (species) அழிந்து விடுமோ என்று மக்கள் ஆச்சுகிறார்கள்.



Earth and moon photo
Earth and moon in a single frame
Wow!!!
Fantastic view...!



           இவ்வாறு, பூமியில் (Earth) வாழ்வதற்கு (live) பல சிக்கல்கள் (challenges) இருந்தாலும் நாம் இதுவரை நன்றாக (good) தான் பூமியில் (Earth) வாழ்ந்து (live) வருகிறோம். எதிர்க் காலத்தில் (Future) மனித இனம் (Human species) நிஜமாகவே (Really) பூமியை விட்டு (leaving earth), வேறு கிரகத்தில் (different planet) வாழ வேண்டிய (live) நிலை (condition) வருமா (come)? இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் (chances) உள்ளதா (is there)?

பூமியின் சிறப்பை (About Earth speciality) பற்றி! 

           இந்த பிரபச்சத்தில் (universe) நாம் அறிந்த வரை பூமியில் மட்டுமே தான் அதிக அளவில் தண்ணீர் திரவ நிலையில் (liquid state) காணப்படுகிறது. மேலும், பூமியில் மட்டுமே தான் வாழ்வதற்கு ஏற்ற வளிமண்டலம் (atmosphere) உள்ளது.


Tree growing in glass
Tree sapling 
Growing in a glass


 பூமியின் வளிமண்டலம் நம்மை சூரியனில் இருந்து வரும் கடுமையான கதிர் வீச்சுக்களில் (harmful radiation) இருந்து நம்மை பாதுகாக்கிறது. அது மட்டுமின்றி, பூமியில் மட்டுமே தான் மனிதன் மற்றும் விலங்குகள் சுவசிக்க (breathe) தேவை படும் ஆக்ஸிஜன் (Oxygen) அதிகம் காணப்படுகிறது.

எதிர்க் காலத்தில் (Future) மனித இனம் (Human species) நிஜமாகவே (Really) பூமியை விட்டு (leaving earth), வேறு கிரகத்தில் (different planet) வாழ வேண்டிய (live) நிலை (condition) வருமா (come)?

             மனித இனம் பூமியை விட்டு, வேறு கிரகத்தில் வாழ வேண்டிய நிலை நிச்சியமாக (confirmly) ஏற்படுவதார்க்கு வாய்ப்புகள் (chances) அதிகம் உள்ளது. ஏனெனில், இன்னும் ஐநூறு கோடி ஆண்டுகள் கடந்த பின்னர், நம் சூரிய குடும்பத்தில் (solar system) நடுவில் உள்ள சூரியன் என்ற பெரிய நடசத்திரம் (star), சிவப்பு ராட்சச (Red Giant) விண்மீனாக மாறி உருவம் பெரிதாகும். இந்த நிகழ்வு நடைபெறும் போது சூரியன் பெரியதாகி  பூமிக்கு நெருக்கமாக கூட (close) வந்து விடலாம். அப்போது கடல்கள் ஆவியாகி (evaporates), சுட்டெரிக்கும் வெப்பம் (temperature), பூமி முழுவதும் பரவும். அதன் பின்னர் சூரியன் வெடித்துச் சிதறி (brust), வெள்ளைக் குள்ள (white dwarf) விண்மீனாக மாறி விடும்.


Close view of Sun
Close view of Sun
Wow!!


                 அப்போதும் பூமியில் மனிதர்கள் இருப்பார்கள் அல்லது மனிதர்களில் பரிணாமம் (evolution) வளர்ச்சி அடைந்து வேறு உயிரிகள் தோன்றிவிடுமா என்பதெல்லாம் யூகம் (guess) தான் செய்ய முடியும். அப்போது பூமியில் கருவிகளைப் (machines) படைத்து, சிந்தனை செய்யும் உயிரி இருந்தால், அந்த நுண்ணறிவு (intelligence) உடைய உயிரி, பூமியில் இருந்து வேறு இடத்தை தேடும் என்பதில் சந்தேகமே இல்லை.


Dinosaur seeing asteroid
Dinosaurs seeing an asteroid coming


                   இந்த நிலை ஏற்பட சுமார் ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகும். சுமார் ஆறு கோடி ஆண்டுகள் முன்னர் பூமியின் மீது பெரும் விண்கல் (meteoroids) மோதி பிரளயம் (catastrophe) ஏற்பட்டது. அதுவரை பல லட்சம் ஆண்டுகள் பூமியில் ராஜாவாகத் (King) திரிந்த டைனோசர்கள் அந்த விண்கல் மோதலின் தொடர்ச்சியாக அடுத்த சில லட்சம் ஆண்டுகளில் மடிந்து விட்டன. (Death)

                   அது போல பெரும் விண்கல் மோதும் வாய்ப்பு இல்லை என்றாலும் அப்படிப்பட்ட மோதல் ஏற்பட்டு, மனித இனம் நிலைத்து (stable) வாழ்வதற்கான சவால் ஏற்படலாம். அப்போது வேறு கிரகங்களுக்குச் சென்று தன் இனத்தை தக்கவைக்க (retain) மனிதன் முயற்சி (efforts) செய்வான் என்பது உறுதி.


Space travel
Space travel
Imagination Art!!


                  இவ்வாறு விண்கல் பூமியில் மேல் மோதுவதை தடுக்க மற்றும் வேறு கிரகத்தில் மனித இனம் வாழ்வதற்கான முயற்சிகளை நாசா (NASA) மற்றும் ஸ்பாஸ் எக்ஸ் (Space X) போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் (Space Research companies) முயற்சி செய்து வருகிறது.

விண்கல் (asteroid) தடுப்பு (Defense) செயற்கோளைப் (Satellite) பற்றி!

             விண்கல் தடுப்பு செயற்கோளின் பெயர் டார்ட் (DART) ஆகும். டார்ட் பெயரின் விரிவாக்கம் இரட்டை விண்கல் திசை திருப்பல் சோதனை (Double Asteroid Redirection Test) ஆகும். இது தான் உலகின் முதல் கிரக பாதுகாப்பு அமைப்பு (Planetary Defense System) ஆகும். இது பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்கள், சிறுகோள்கள் (Asteroid), விண்கற்கள் (Meteoroids) மற்றும் வால்மீன்கள் (comets) போன்ற பொருட்களை தடுக்க உதவும். வெவ்வேறு அளவுகளில் உள்ள சிறுகோள்கள் விண்வெளியில் நம்ப முடியாத வேகத்தில் (incredible speed) நகர்ந்து கொண்டு இருக்கும். இந்த வேகத்தில் சிறுகோள்கள் பூமியின் மேல் மோதிலால் (collide) உலகில் பேரழிவு ஏற்படும்.


Asteroid orbiting
Asteroid orbiting in the Space


                   இதனை தடுக்க டார்ட் என்ற செயற்கைக்கோள் சிறுகோளின் மீது நேரடி பாதிப்பை (direct impact) ஏற்படுத்தும். இதன் காரணமாக, சிறுகோளின் திசை (direction) திருப்பப் படும். ஆனால், இந்த செயற்கைக்கோள் சிறுகோளை அழிக்காது, திசையை மட்டுமே திருப்பும். டார்ட் செயற்கைக்கோள் ஜான்ஸ் ஹாப் கிங்ஸ் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகம் (Johns Hopkings Applied Physics Laboratory) மற்றும் நாசாவின் (NASA) கூட்டு செயல்பாடு ஆகும். ஸ்பாஸ் எக்ஸின் (Space X) பால்கன் ராக்கெட் (Falcon Rocket) இதனை விண்வெளிக்கு அனுப்ப உதவும்.

                  விண்வெளியில் இருக்கும் டிடிமோஸ் (Didymos) என்ற சிறுகோள்களுக்கு அருகில் செல்லும். டிடிமோஸ் என்ற சிறுகோள் 2540 அடி விட்டம் (diameter) கொண்டு இருக்கும். இது சூரியனை 770 நாள்களுக்கு ஒரு முறை சுற்றி வரும். இந்த டிடிமோஸ் சிறுகோளுக்கு பூமியை போலவே ஒரு நிலவு இருக்கும். அதனின் பெயர் டிடிமூன் (Didymoon) ஆகும். இந்த டிடிமூன் 520 அடி விட்டம் கொண்டு இருக்கும். 


Satellite orbiting in space
A satellite orbiting the earth in Space


                     டார்ட் செயற்கைக்கோளின் திட்டம் டிடிமூன் மூது டார்ட் மோதி டிடிமூன் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக, இரண்டு சிறுகோள்களின் பாரி சென்ட்ரேலில் (Barycentre) மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக, மனிதனால் சிறுகோள்களின் திசையை செயற்கைக்கோள்களை பயன் படுத்தி எளிதில் திருப்ப முடியும். இதனை இந்த ஆண்டு 2021, நவம்பரில் விண்வெளிக்கு அனுப்புவார்கள். இது அடுத்த ஆண்டு 2022, செப்டம்பர் மாதம் டிடிமோஸ் மீது திட்டமிட்டபடி போய் (make impact) மோதும்.

செவ்வாய் கிரகத்தில் (Mars) மனித காலனிகள் (Human Colonization) உருவாக்குவது பற்றி!

                செவ்வாய் கிரகத்தில் மனித காலனிகளை (colony) உருவாக்க பலரும் வரும்புகிறார்கள். இதனை செயல் படுத்த எலோன் மாஸ்க் (Elon musk) மிகவும் உறுதியுடன் இருக்கிறார். எலோன் மாஸ்க் தான் ஸ்பாஸ் எக்ஸின் நிறுவனர் (Founder) ஆவார். இவரின் யோசனை (idea) செவ்வாய் கிரகத்தில் மனித காலனிகளை உருவாக்குவது ஆகும். இதற்காக இவர் தனது நிறுவனத்திற்கு (ஸ்பாஸ் எக்ஸ்) 2024 ஆம் ஆண்டை காலக்கெடாக (deadline) விதித்து உள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனித காலனிகளை உருவாக்குவதில் பல சவல்கள் (challenges) இருக்கிறது.


Elon musk with mars
Elon musk with his favourite planet in the solar system 
Mars!!
in a single frame


                     முதல் சவல் செவ்வாய் கிரகத்திற்கு எவ்வாறு மனிதர்களை மற்றும் சரக்குகளை (cargo) அனுப்ப முடியும். ஏனெனில், பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் 140 மில்லியன் மைல்கள் (million miles) ஆகும். இது மிகவும் தொலை தூரம் ஆகும். ஏனெனில், பூமிக்கும் நிலவுக்கும் இடையே 240,000 மைல்கள் தூரம் தான் இருக்கிறது. இதுவே தொலை தூரம் ஆகும். ஆனால், பூமியும் செவ்வாய் கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரண்டின் சுற்றுப் பாதைகளும் (orbits) அருகில் வரும். அதனை தான் நெருக்கமான அனுகுமுறை (closest approach) என்பர். இப்போது, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே வெறும் 33.9 மில்லியன் மைல்கள் தொலைவு தான் இருக்கும். இந்த நிகழ்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும்.     

             செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய ஸ்பாஸ் எக்ஸ்னால் உருவாக்கப்பட்ட பிரத்தியேக (specialized) ராக்கெட்டின் பெயர் ஸ்டார் ஷிப் (Starship) ஆகும். இதனின் உயரம் 180 அடி ஆகும். இதனுடைய ராக்கெட் பூஸ்டரின் (Rocket Booster) உயரம் 230 அடி ஆகும். இந்த ராக்கெட் மீண்டும் பயன்படுத்தக் (reusable) கூடிய தன்மையை கொண்டது ஆகும். இந்த ராக்கெட் இரண்டு நிலையை (stages) கொண்டாது ஆகும். ஒன்று ஸ்டார்ஷிப் மற்றொன்று சூப்பர் ஹெவி (Super Heavy) பூஸ்டர் ஆகும். இந்த ராக்கெட்டில் ராப்டார் இயந்திரம் (Raptor Engine) இருக்கும். இந்த ராப்டார் இயந்திரம் தான், ராக்கெட்டுக்கு தேவை படும் உந்து விசையை (Thrust) உருவாக்கும். இந்த ராப்டார் இயந்திரங்கள் இரண்டு மேகா நியூட்டன்கள் (Mega Newton) வரை உந்துதல் விசையை உருவாக்கும் தன்மையை கொண்டது. 


Starship art
Art of a Starship travelling in the space


                  இந்த ஸ்டார் ஷிப் ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் (atmosphere) இருந்து தரையிறங்கும் (land) வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட்டுகள் வளிமண்டத்திலேயே எரிபொருளை (fuelling) மாற்றம் செய்யும் தொழில் நுட்பத்தை கொண்டது ஆகும். இந்த ஸ்டார் ஷிப்புகளை கொண்ட தலைமை இடத்தின் ஸ்டார் பேஸ் (Star Base) ஆகும். இந்த ஸ்டார் பேஸ் போகா சிக்கா, டெக்சாஸ்யில் (Boca Chica, Texas) அமைந்துள்ளது. 

                  எலோன் மாஸ்கின் நோக்கம் (Aim) 10 ஆண்டுகளுக்குள் 1000 ஸ்டார் ஷிப்களை உருவாக்குதல் மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புதல் ஆகும். பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 245 நாட்கள் ஆகும். 


Mars to earth transforming
Transforming Mars planet into Earth's Nature


பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு (From Earth to Mars) செல்லும் கட்டங்களை (Phases) பற்றி!

முதல் கட்டம்: (First Phase)

- பூமியில் இருந்து ஸ்டார் ஷிப் (Star ship) ராக்கெட் பூஸ்டருடன் வளிமண்டலத்திற்கு செல்லும். பின்னர் ராக்கெட் பூஸ்டர் ஸ்டார் ஷிப்பில் இருந்து பிரிந்து (Separate) பூமியில் வந்து தரையிறங்கும். 

இரண்டாம் கட்டம்: (Second Phase)

- வளிமண்டலத்தில் இருக்கும் ஸ்டார் ஷிப்புக்கு மற்றொரு ஸ்டார் ஷிப் மூலம் எரிபொருள் (refuelling) நிரப்பப் படும். 

மூன்றாம் கட்டம்: (Third Phase)

- ஸ்டார் ஷிப் எரிபொருள் நிரப்பப் பட்டதுடன் (refuelled), செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் (travel) செய்ய தொடங்கும். 

நான்காம் கட்டம்: (Fourth Phase)

- செவ்வாய் கிரகத்தை அடைந்தவுடன் ஸ்டார் ஷிப் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும். (Land)

          வெற்றிகரமாக (Successfully) முதல்  முறையாக செவ்வாய் கிரகத்தில் ஸ்டார் ஷிப் தரையிறங்கிய பின்னர், ஒரு நாளுக்கு மூன்று ஸ்டார் ஷிப் பூமியின் வளிமண்டலத்திற்கு அனுப்ப படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகத்திற்கு வளிமண்டலத்தில் இருக்கும் ஸ்டார் ஷிப்புகள் பயணம் செய்ய தொடங்கும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் தளத்திலேயே (Base) எரிபொருளை உருவாக்கி (Fuel production) மீண்டும் பூமிக்கு வருவார். இதனை தான் இஸ்ரு (ISRU) (In Situ Resource Utilization) பயன்பாடு என்பர்.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently Asked Questions)

1. சிறுகோள்கள் (Asteroid), விண்கற்கள் (Meteoroid) மற்றும் வால்மீன்கள் (Comets) பற்றி!

       விண்கற்கள் (Meteoroid) என்றால் பூமியின் தரைப் பரப்பின் மேல் மோதிய (collide) விண்வெளி கற்கள் ஆகும்.

        சிறுகோள்கள் (Asteroid) என்றால் விண்வெளியில் சூரியனின் சுற்றுப் பாதையில் சுற்றி (orbits) வரும் கற்களால் ஆகும்.


Comet in space
View of a comet in the space
Amazing!!


         வால்மீன் (Comets) என்றால் பனி மற்றும் தூசுக்களால்உருவான ஒரு விண்வெளி கல் ஆகும். இவைகள் சில நேரங்களில் பூமியின் சுற்றுப் பாதையில் காட்சியளிக்கும்.

2. சூரியனின் தெர்மோனியூக்ளியர் இணைவு (Sun's Thermonuclear Fusion) பற்றி!

        சூரியன் தனக்கு தேவைப்படும் ஆற்றலை தெர்மோனியூக்ளியர் இணைவு (Thermonuclear Fusion) மூலம் பெறுகிறது. சூரியனில் ஹைட்ரஜன்கள் (Hydrogens) ஹெலியுமாக (Helium) மாற்றம் அடைந்து ஆற்றலை உருவாக்கும். மேகம் மற்றும் தூசிகள் ஈர்ப்பு விசையால் (gravitational force) உள்நோக்கி ழுத்து இயக்க ஆற்றலை (Kinetic Energy) உருவாக்கும். சூரியன் ஒரு நொடிக்கு 6×10^11 கி ஹைட்ரஜன்களை மாற்றம் செய்யும். இந்த செயல் இன்னும் 5 பில்லியன் (Billion) ஆண்டுகள் வரும் தங்கும். பின்னர், ஹைட்ரஜன்கள் எரிந்து, சிவப்பு இராட்சத (Red Giant) நிலையை அடையும். 


Sun's Thermonuclear fusion
Art of Sun's Thermonuclear fusion





ஹான்ஸ் பெதின் (Hans Bethe) புரோட்டன் சுழற்சி (Proton Proton Cycle) பற்றி!

         1H1 + 1H1 -> 2H1 + e^+  + 1v.

         1H1 + 2H1 -> 3He2 + gamma rays.

         3He2 + 3He2 -> 4He2 + 1H1 + 1H1.

இந்த சுழற்சி (Cycle) மூலம் சூரியன் 27 மே வோ (MeV) வரை ஆற்றலை உருவாக்க முடியும்.



*Note: The images in this post may or may not relevant to the topics.




Post a Comment

3 Comments

  1. Is starship is fully reusable?
    And also when will be its first test flight takes place?
    Updates about starship.
    :)

    ReplyDelete
    Replies
    1. Starship is fully stacked up in the Star base facility. For more recent updates, follow the Elon musk account in twitter.

      Delete
  2. Starship is a fully reusable rocket. This Starship has heat shields placed outside for entering the atomsphere multiple times. It's first test flight will occur after the approval from the Federal Aviation authority of America. Starship and Super heavy both the stages are fully resuable. It is also will be one of the low cost resuable rockets in the world.

    ReplyDelete

Enter your comments :)