Ticker

6/recent/ticker-posts

Translate

ஆடு மற்றும் மாட்டு கொம்பும், மான் கொம்பும் ஒன்றா? | ஹார்ன்ஸ் மற்றும் ஆண்ட்லெரஸ் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? | Specialized hair follicles | Velvet | Cartilage | Horns | Antlers | Osteoporosis | Human bones |

           எலும்பு (bone), மனித மற்றும் விலங்கு உடலில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். எலும்புகள் தான் ஒரு உயிரினத்திற்கு வடிவம் (shape) தர உதவுகிறது. மேலும், ஒரு உயிரினம் நடபத்தற்கு, ஒடுவதற்கு, பறப்பதற்கு மற்றும் பல வகையான செயல்களை செய்ய எலும்புகள் நமக்கு உதவுகிறது. அது மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளை எலும்புகள் தான் பாதுகாக்கிறது. (Protection) எலும்புகள் மட்டும் உடலில் இல்லை என்றால் நாம் அனைவரும் புழு போல தான் மணலில் உர்ந்து செல்வோம். மேலும், எலும்புகள் தான் கண் போன்ற உடல் உறுப்புகளை உடலில் நிலைத் தன்மையுடன் வைக்க உதவுகிறது. ஒரு கட்டிடத்திற்கு  அடித்தளம் (basement) மற்றும் தூண்கள் (pillar) முக்கியம் ஆகும். அதுபோல, மனிதனுக்கு மற்றும் பல வகையான விலங்குகளுக்கு எலும்புகள் தான் நிலைத் தன்மைத்திற்கு (stable) உதவுகிறது. மேலும், சில விலங்குகளில் எலும்புகள் பரிணாமம் அடைந்து, விலங்குகளுக்கு ஒரு பாதுகாக்கும் உறுப்பாக (protective organ) இருக்கிறது.



Deer forest view
Deer in a forest view
Wow!


         இப்படி, எலும்புகளால் உருவான கொம்புகள் (horns) ஒரு விலங்கு மற்றொரு விலங்கில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. 

           எலும்பு (bone) என்றால் என்ன? ஆடு (goat) மற்றும் மாட்டு (cow) கொம்பும் (horn), மான் (Deer) கொம்பும் (horn) ஒன்றா? ஹார்ன்ஸ் (Horns) மற்றும் ஆண்ட்லெரஸ் (Antlers) இடையே உள்ள வேறுபாடுகள் (difference) என்ன?

எலும்பு (bone) என்றால் என்ன?

         எலும்பு என்பது உடலில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். எலும்புகளில் உள்ள எலும்பு மஜ்ஜையில் (Bone marrow) தான் சிவப்பு இரத்த செல்கள் (Red blood cells) - எரித்ரோசைடுகள் (Erythrocytes) உருவாகிறது. மேலும், எலும்புகள் தான் உடலில் உள்ள உடல் உருப்புகளை  நிலைத்தன்மை  கொண்டு வைத்துள்ளது. உடலில் உள்ள பற்கள் (teeth) அனைத்தும் எலும்புகளாால் தான் உருவானவை.


Back view human skull
Back view of human skull


              மனித உடலில் உள்ள மிகப்பெரிய எலும்பு தொடை எலும்பு (thigh bone) ஆகும். இங்கு தான் அதிக அளவில் சிவப்பு இரத்த செல்கள் - எரித்ரோசைட்டுகள் உருவாகப் படும். எலும்புகள் தான் ஒரு உயிரினத்தில் நடைபெறும் லோகோமோஷன் (locomotion) மற்றும் இயக்கம் (movement) போன்ற முக்கிய செயல்கள் நடைபெறுவதற்கு உதவும்.

ஆடு (goat) மற்றும் மாட்டு (cow) கொம்பும் (horn), மான் கொம்பும் (deer horn) ஒன்றா (same)?

              ஆடு, மாடு மற்றும் மான் வகைகளில் கொம்புகளைப் பார்த்திருப்போம். தாவர உண்ணிகளில் (Herbivores) அசைபோடும் (Stirring) உயிரினங்களில் கொம்புகள் பரவலாக் காணப்படுகின்றன. ஆனால், எல்லாக் கொம்புகளும் ஒன்றா?

                 இல்லை. மான் கொம்புக்கும், ஆடு மற்றும் மாட்டின் கொம்புகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. ஆடு மற்றும் மாடுகளின் கொம்புகள் இரண்டு பகுதிகளை கொண்டவை ஆகும். ஒன்று, மண்டையோட்டின் நீட்சியாக உள்ள எலும்பு மற்றொன்று, அதன் மேற்புறம் கெராட்டின் (carotene) என்னும் புரதப் படிவைக் (protein form) கொண்ட வளர்ச்சி ஆகும்.


Bull horn
Bull with their horn


               அந்தப் புரதம் பிரத்யேகமான மயிர்க்கால்களால் (Specialized hair follicles) உருவாக்கப் படுகிறது. இவற்றை ஆங்கிலத்தில், "ஹார்ன்ஸ்" (Horns) என்று அழைக்கிறார்கள்.

               கொம்புகளில் கிளைகள் வகை கிடையாது. ஆனால், உயிரினத்தைப் பொருத்து அவை நீண்டோ, சுருள் (curl) சுருளாகலோ வடிவம் பெற்று இருக்கும். இது ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினம் விலங்குகளுக்கும் வளரும். அதிகாரச் சின்னமாகவும், தாக்குதல் மற்றும் வேட்டையாடும் விலங்குகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் கொம்புகள் பல வகையான விலங்குகளுக்கு மிகவும் பயன் படுகிறது. மேலும், கொம்புகள் சேதமடைந்து (damaged) அடியோடு உடைந்தால் (broke off), கொம்புகள் பின்னர் மீண்டும் வளர்வதில்லை.

               ஆனால், மான் கொம்புகள் முழுக்க முழுக்க எலும்புகளால் மட்டுமே ஆனது. மண்டை ஓட்டின் நீட்சியாக வளரும் இவை விழுந்து மீண்டும் முளைக்கக் (grow) கூடிய தன்மையைக் கொண்டவை ஆகும். இவற்றை ஆங்கிலத்தில் "ஆன்ட்லெரஸ்" (Antlers) என்று பலர் அழைக்கிறார்கள்.


Deer antlers
Deer with their antlers 


                வளரும் காலத்தில் இவற்றை மெத்தென்ற அமைப்பு (soft structure) கொண்ட இரத்த நாளங்கள் (vessels) மிகுந்த "வெல்வட்" (Velvet) என்ற தோல் ஓன்று இவற்றை மூடியிருக்கும். கார்டிலேஜ் (Cartilage) என்னும் திசுக்களால் வளரும் இவை, ஒரு கட்டத்தில் எலுப்பாக மாறி இறுகுகின்றன (Tighten). இதற்கு பின்னர், வெல்வட் தோல் உதிர்ந்து, வெறும் கொம்புகளாக சில காலம் இருக்கின்றன. பின்னர், கொம்புகளும் உதிர்ந்து (fallen off) விழுந்து விடும்.

                மான் வகை உயிரினங்களின் கொம்புகள், கிளை பரப்பி வளரும் அமைப்பு கொண்டவை ஆகும். ஆண் உயிரிகளில் இவை இணையைக்  (partner) கவரவும், இணைக்காகச் சண்டையிடவும் பயன் படுகின்றன. சில வகை மான்கள் ஒவ்வொரு ஆண்டும் கொம்புகளை வளர்த்து உதிர்க்கின்றன.

சுவாரசியமான தகவல்: (Interesting information)

              காண்டா மிருகத்திற்கு (rhinoceros) கொம்பு இருப்பதாகச் சொல்லப் பட்டாலும் அதில் எலும்பு கிடையாது. அது வெறுமனே, கெராட்டின் புரதம் (carotene protein) தான். ஆகவே, காண்டா மிருகம் கொம்பு என்பது பிரத்யேக (specialized) வடிவம் கொண்ட தலைமுடி (hair) என்று சொல்லாம். என்ன இந்த தகவல் ஆச்சிரியமாக இருக்கிறதா?


Shocking news
Shocking information 
Ooooooo...


                 நாம் பார்க்கும் பல விஷயங்களில் உயிரிலைத் தேடினால் பிரமிப்பாகத் தான் இருக்கும். விலங்குக் குடும்பத்திலேயே மிகவும் வேகமாக வளர கூடிய எலும்புகள் மான் கொம்புகளே ஆகும்.

                 தற்போது, எலும்பு முறிவு (fracture) மற்றும் "ஆன்டியோபோரோஸிஸ்" (osteoporosis) ஆகிய எலும்பு தொடர்பான பாதிப்புகளுக்கான தீர்வு, கொம்பு வளர்ச்சியை ஆராய்வதன் மூலம் நமக்கு கிடைக்குமா என்று உயிரியவாளர்கள் ஆராய்கின்றனர்.

ஹார்ன்ஸ் (Horns) மற்றும் ஆன்ட்லெரஸ் (Antlers) இடையே உள்ள வேறுபாடுகள் (difference) என்ன?

ஹார்ன்ஸ்: (Horns)


Bull horn view
Bull with strong horn


           -இது ஒரிடத்தில் துருத்திக் (bellows) கொண்டு இருக்கும். 

            -விலங்குகளின் வாழ்நாள் (lifespan) முழுவதும் விழாது வளரும்.

            -எலும்புகள், கெராட்டின் (carotene) என்ற புரதத்தால் ஆனவை.

ஆன்ட்லெரஸ்: (Antlers)


Two deer eat grass
Two Deer eating grass


           -விலங்குகளின் மண்டையோட்டின் நீட்டிப்பு பகுதியில் இருக்கும்.

            -இது வாழ்நாள் முழுவதும் விழுந்து, மீண்டும் முளைக்கும், முளைக்கும் போது பெரியதாகும்.

            -எலும்புகளால் மட்டுமே ஆனவை.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. மனித உடலில் (Human bone) உள்ள எலும்புக்களை (bones) பற்றி!

               மனித உடலில் மொத்தமாக 206 எலும்புகள் இருக்கும். (பெரியவர்கள்) (adults)

மனித எலும்புக்கள் இரண்டு வகைப் படும். அவை:

               -அச்சு (Axial) எலும்புகள் மற்றும்

               -பிறச்சேர்க்கை (Appendicular) எலும்புகள் ஆகும்.

அச்சு எலும்புகள் நான்கு உட்பிரிவுகளை (divisions) கொண்டது. அவை:

               -மண்டை ஓடு, (skull)

               -முதுகெலும்பு, (vertebral column)

               -ஸ்டெர்னம் மற்றும் (sternum)       

               -விலா எலும்புகள் ஆகும். (Ribs)

மண்டை ஓட்டில் (Skull) உள்ள எலும்புகள்:

                -கிரானியம் (Cranium) = 8 எலும்புகள்,

                -முக எலும்பு (Facial bone) = 14 எலும்புகள்,

                -நடு காது (middle ear) = 6 எலும்புகள் மற்றும் 

                -உவையுரு நாவெலும்பு (Hyoid bone) = 1 எலும்பு.

மொத்தமாக மண்டை ஓட்டில் 29 எலும்புகள் இருக்கும்.

முதுகெலும்பில் (Vertebral column) உள்ள எலும்புகள்:

                 -கழுத்துப் பகுதி (Cervical) = 7 எலும்புகள், 

                 -தொராசி (Thoracic) = 12 எலும்புகள்,

                 -இடுப்பு (Lumbar) = 5 எலும்புகள்,

                 -சாக்ரல் (Sacral) = 5 எலும்புகள் உருகி சேர்ந்து (fuse) 1 எலும்பு இருக்கும் மற்றும்

                 -தண்டுவட எலும்புவால் பகுதி (Coccyx) = 4 எலும்புகள் உருகி சேர்ந்து 1 எலும்பு இருக்கும்.

மொத்தமாக முதுகெலும்பில் 26 எலும்புகள் இருக்கும்.

ஸ்டெர்னம் (Sternum) = 1 எலும்பு மற்றும்

விலா எலும்புகள் (Ribs) = 24 எலும்புகள் இருக்கும்.

மொத்தமாக அச்சு எலும்பு வகையில் 80 எலும்புகள் இருக்கும். 


Human skeleton
View of the human skeleton


பிறச்சேர்க்கை எலும்புகள் நான்கு உட்பிரிவுகளை கொண்டது. அவை:

            -முன் மூட்டு, (Fore limb)

            -பின்னங்கால், (Hind limb)

            -மார்பு கச்சைய மற்றும் (Pectoral girdle)

            -இடுப்பு வளைய ஆகும். (Pelvic girdle)

முன் மூட்டில் (Fore limb) உள்ள எலும்புகள்: 

             -மேற்கையின் நீண்ட எலும்பு (Humerus) = 1 எலும்பு,

             -முன்கை எலும்பு (Radius) = 1 எலும்பு,

             -உல்னா (Ulna) = 1 எலும்பு, 

             -காலாட்படை அணி (Phalanges) = 14 எலும்புகள்,

             -கார்பல்கள் (carpals) = 8 எலும்புகள் மற்றும் 

             -மொட்டாகார்பல்கள் (metacarpals) = 5 எலும்புகள்.

மொத்தமாக முன் மூட்டில் = 2 × 30 = 60 எலும்புகள் இருக்கும்.

பின்னங்காலில் (Hind limb) உள்ள எலும்புகள்;

              -தொடை எலும்பு (Femur) = 1 எலும்பு, 

              -திபியா (Tibia) = 1 எலும்பு,

              -ஃபைபுலா (Fibula) = 1 எலும்பு, 

              -டார்சல் (Tarsal) = 7 எலும்புகள்,

              -மொட்டாடார்சல்கள் (Metatarsals) = 5 எலும்புகள்,

              -காலாட்படை அணி (Phalanges) = 14 எலும்புகள் மற்றும் 

              -முழங்காலில் வட்ட வடிவில் இருக்கும் எலும்பு (Patella) = 1 எலும்பு.

மொத்தமாக பின்னாங்காலில் = 2 × 30 = 60 எலும்புகள் இருக்கும்.

மார்பு கச்சையில் (Pectoral girdle) உள்ள எலும்புகள்:

               -தோள்பட்டை எலும்பு (Scapula) = 1 எலும்பு மற்றும்

               -கிளாலிக்கிள் (Clavicle) = 1 எலும்பு.

மொத்தமாக மார்பு கச்சையில் = 2 × 2 = 4 எலும்புகள் இருக்கும்.

இடுப்பு வளையில் (Pelvic girls) உள்ள எலும்புகள்:

                -பெயரிடாத (Innominate) = 1 எலும்பு.

மொத்தமாக இடுப்பு வளையில் = 2 × 1 = 2 எலும்புகள் இருக்கும்.

பிறச்சேர்க்கை எலும்புகள் மொத்தமாக 126 எலும்புகள் இருக்கும். 

2. பிரத்யேகமான மயிர்க்கால்கள் (Specialized Hair follicles) பற்றி!

                பிரத்யேகமான மயிர்க்கால்கள் (Specialized hair followed) லைப்ரிசா (vibrissae) அல்லது விஸ்கர்ஸ் (whiskers) என்று அழைக்கப்படும். இது சில விலங்குகளில் உணர்ச்சி (sensory) உறுப்பாக இருக்கும். மாற்றப்பட்ட முடிகளை குயில்ஸ் (Quills) என்று அழைப்பார்கள். இது ஒரு பாதுகாப்பு உறுப்பு ஆகும். இவைகள் பாலூட்டி விலங்குகளின் தோல்களில் காணப்படும். இது 20 வெவ்வேறு செல்களால் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த செல்கள் வெவ்வேறு செயல்பாடுகளை செய்யும்.


Hair follicles
Bull with their specialized hair follicles


                இவைகள் ஹார்மோன்கள், (hormones) நியூரோபெப்டைடுகள் (neuropeptides) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி (immune cells) செல்களின் தொடர்பை பராமரிக்கிறது. இதனின் வகைகள் வட்ட (circular) மற்றும் ஓவல் (ival) மயிர்க்கால்கள் ஆகும். வட்ட வடிவ மயிர்க்கால்கள் நேராக (straight) முடியை வளர்ச்சி அடைய செய்யும் மற்றும் ஓவல் மயிர்க்கால்கள் கரைலர் (curiler) மயிர்க்கால்கள் வளர்ச்சி அடைய செய்யும். இவைகள் தான், முடியின் நிறத்தை தீர்மானம் செய்யும்.

 3. வெல்வட் (Velvet) மற்றும் குருத்தெலும்பு (Cartilage) பற்றி!

              வெல்வட் (Volver), குருத்தெலும்பின் (cartilaginous) வகையை சேர்ந்தது ஆகும். இது வளர 55 முதல் 65 நாட்கள் வரை ஆகும். இது தோல் போல இருக்கும். இதனை மருந்துகள் உருவாக்க பயன் படுத்துவார்கள். இதனை உணவு நிரப்பியாகவும் (dietary supplement) பயன் படுத்தலாம்.


X ray bone
X ray of a bone


                குருத்தெலும்பு (Cartilage), உடலில் முக்கியமான அமைப்பு ஆகும். இது உறுதியான திசு (girm tissue), மென்மையான (soft) மற்றும் நெகிழ்வான (flexible) உறுப்பு ஆகும். இது இணைப்பு திசு (connective tissue) வகையை சார்ந்தது ஆகும். இவைகளை முழங்கைகள் (elbows), முழங்கால் (knees) மற்றும் கணுக்காலின் (ankles) கூட்டுப் பகுதியில் காணப்படுகிறது. இதில் இயக்க திரவம் (motion liquid) பூச்சப்பட்டு இருக்கும்.

4. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoprosis) பற்றி!

                ஆஸ்டியோபோரோசிஸ் (osteoprosis), எலும்புகளில் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இந்த நிலையில் எலும்புகள் பலவீனமாக (weak) மற்றும் உடையக் (brittle) கூடிய நிலையை அடையும். உடலில் உள்ள எலும்புகள் தொடர்ந்து உறிஞ்சுகிறது (absorbs) மற்றும் எலும்புகள் மாற்றம் அடையும். இதனால், புதிய எலும்புகள் படைப்பு (creation) என்ற செயல் நடைபெறாது.


Calcium food products
Calcium rich food products 

 

இதனின் அறிகுறிகள் (symptoms) எலும்பு முறிவு மற்றும் உயரம் இழப்பு (loss of height) ஆகும். இதற்கு கால்சியம் (lack of calicum) பற்றாக்குறை தான் காரணம் ஆகும். கால்சியம் பற்றாக்குறை எலும்பு அடர்த்தியை (density) குறைத்து விடும். நடைப்பயணம், நடைப்பயிற்சி, ஜாகிங், (jogging) யோகா மற்றும் நடனம் மூலம் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்ய முடியும்.

 


*Note: The images in this post may or may not relevant to the topics.




Post a Comment

2 Comments

  1. You Mentioned about the largest bone in the human body. What about the smallest bone in the human body and its location????....

    ReplyDelete
    Replies
    1. The Stapes is the bone found in the middle ear of humans and other animals involved in the conduction of sound vibrations to the inner ear. It is the smallest and lightest Bone found in the human body. It measures about 3 × 2.5 mm. The Stapes is also called as Stirrup.

      Delete

Enter your comments :)