Ticker

6/recent/ticker-posts

Translate

வானிலை அறிக்கையில், புயல் வலுவடைகிறது, கரையைக் கடக்கிறது என எப்படி கூறுகிறர்கள்?| How cyclones are formed? | Barometer | weather satellite usage | Naming of cyclones |

         நீங்கள் வானிலை செய்திகள் (weather news) பார்க்கும் போது, அதிகமாக பார்க்கும் மற்றும் கேட்கும் செய்தி, (cyclone, storm or hurriance) புயலைப் பற்றியே! புயல் வலுவடைகிறாது! புயல் வலுவிழக்கிறாது ! புயல் கரையைக் கடக்கிறது! அதனால், (Fishermen) மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை நிருபர் (Reporter) எச்சரிக்கை விடுவார்.


        புயல் (Cyclone) உருவாகும் (formation) போது, அதனைச் சுற்றி (surrounds) ஏன் மழையும் (Rain) , காற்றும் (Air) வருகிறாது? புயல் எப்படி உருவாகிறாது (who does form)? 


புயல் என்றால் என்ன? (Definition of Storm or cyclone)


Eye of the Cyclone's view
Eye of the Cyclone's amazing view from space


       புயல், பூமியைப் போல ஒரே திசையில் (direction) சுற்றும் அடர்த்தியான (high density) காற்றைக் கொண்டு, தனது நிலையற்ற (unstable) உருண்டையான பரப்பை (area) கொண்டு இருக்கும் என வானிலை அறிஞர்கள் (researchers) கூறுவார்.


புயல் உருவாகும் கட்டங்கள்: ( Stages of Storm's formation) 

      வெப்ப மண்டலப் (Tropical region) பகுதியில் ஏற்படும் புயலுக்கு, மூன்று கட்டங்கள் உள்ளன. அவை

  • புயலின் தோற்றம்  (Origin of the storm) 

  • புயல் வலுவடைதல் (Strengthening of the storm)

  • புயல் வலுவிழத்தல் (Weakening of the storm)   


புயலின் தோற்றம்: (Origin of the storm) 

       புயல், பூமியின் நிலநடுக்கோட்டுப் (Equator region) பகுதியில், குறிப்பாக கோடை காலத்தில் (summer season), அங்கு வெப்பம் அதிமாக இருக்கும். அங்கு இருக்கும் வெப்பதால், கடலில் உள்ள நீர் சூடாகும். சூடான கடல் நீரிலிருந்து எழும் நீராவி (water vapour), கடலின் மேற்பகுதியில் (atmosphere) உள்ள காற்றுடன் கலக்கும். நீராவி, கலந்த ஈரக்காற்று (moisture air) சூடாவதால், திணிவு (Mass) குறைந்து, செங்குத்தாக (Vertically) நேர் மேலே செல்லும். இப்போது, அந்தப் பகுதிக் கடலின் மீது உள்ள காற்றின் அளவு குறைந்து விடுவதால், வளிமண்டலப் (atmosphere) பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு (Depression in Air pressure) நிலை மண்டலம் உருவாகும். இப்படிதான் புயல் தோற்றம் பெருகிறாது.


Stormy Clouds
Cyclone's Stormy clouds



புயல் வலுவடைதல்: (Strengthening of the storm)

        புயலின் தோற்ற நிகழ்வுகள், மறுபடியும் மறுபடியும் விடாது நிகழும். இப்படியாக, தொடரும் நீராவிப் போக்கால் (increase in level of water vapours), அந்தப் பகுதியில் ஏற்படும் குறைந்தக் (less air pressure) காற்றழுத்த மண்டலம். மேலும் தீவிரமாகி (Intenisfied), வலிமையானக் காற்று (Strong air zonal) மண்டலமாக  உருவாகும். இதன் காரணமாக காற்று அந்தப் பகுதியை நோக்கி வீசும். இதனால் ஏற்படும் மேகங்கள், வேகத்துடன் சுழலத் (spin) தொடங்கும். காற்றின் வலிமை அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில் புயலாக மாறும்.


Hurriance with a Car
Hurricane with a Car Photo


காற்றின் வேகத்திற்கு ஏற்ப புயலின் வகைகள்: (Type of Storms based on the speed of air)

         வகை             -     காற்றின் வேகம்

       (Type)                          (speed of air)

   சாதாரணமாக      -       31 கி.மீ. வேகம்

       (Normal air)                   31 km/h speed 


       அழுத்தம்              -      32-51 கி.மீ. வேகம்

     (Pressured air)                32-51 km/h speed


     தீவிர அழுத்தம்   -      52-61 கி.மீ. வேகம்

 (High pressured air)         52-61 km/h speed


             புயல்                -      62-88 கி.மீ. வேகம்

   (Storm or cyclone)          62-88 km/h speed 


     கடும் புயல்           -      89-118 கி.மீ. வேகம்

   (Severe Storm)               89-118 km/h speed 


  மிகக்கடும் புயல்  -     119-221 கி.மீ. வேகம்

   (Extreme Storm)           119-221 km/h speed 


   சூப்பர் புயல்          -    221-222 கி.மீ. வேகம்

   (Super Storm)               221-222 km/h speed 


புயல் வலுவிழத்தல்: (Weakening of the Storm) 

      புயலின் சுழல் மேகக் கூட்டத்தை (clouds) உள்ளடாக்கிய காற்றுடன் சேர்ந்து, கடல்நீரின் மீது தவழ்ந்து நகரும். மேலும் ஈரக் காற்றையும் (moistured air) வலிமையாக வீசும் காற்றையும் பெற்று வலுக் (Strengthen)  கூடும். ஒரு கட்டத்தில் புயல் நிலத்தின் மீது வந்து சேரும். அதையே தான் 'புயல் கரையைக் கடக்கிறாது' என்கிறோம். நிலத்தின் மீது உராய்வு வீசை (Friction) கூடுதல் என்பதால், வெகு தொலைவுச் (more distance) செல்ல முடியாமல் புயலின் ஆற்றல் (Energy) தணியும். ஆற்றல் குறையக் குறைய, புயல் தேய்ந்து வலுவிழந்து போகும். அவ்வாறு வலுவிழந்த புயல், அடங்கி விடும்.


Silence after Cyclone
After Cyclone climate


தெரிந்துக் கொள்ளுங்கள்: (Do you know?)



         'சுருண்டு கிடக்கும் பாம்பு' எனும் கிரேக்க மொழிச் சொல் தான் 'சைக்ளோன்' (Cyclone) என்றும் பெயர்ப் பெற்றாது.

Cyclone view from space
Cyclone view from Space

             (Storm) 'புயல்' என்னும் சொல் 'பழைய நார்ஸ்' (old Norse) மொழியில் இருந்து வந்தச் சொல் ஆகும். இதனின் பொருள் 'சுழல்' (to rotate) எனப்படும்.

Hurriance power
Hurricane on land

             'சூறாவளி' (Hurricane) என்னும் சொல் 'டெய்னோ' (Taino) மொழியில் உள்ள 'ஹுருகேன்' (hurucane) என்றச் சொல், சூறாவளி எனப் பெயர்ப் பெற்றாது. இதனின் பொருள் 'காற்றின் தீய ஆவி' (evil spirit of wind) எனப்படும்.

Tornado lighting
Tornado with lightnings

              'சூறாவளி' (Tornado) என்னும் சொல் 'ஸ்பானிஷ்' (Spanish) மொழியில் உள்ள 'ட்ரோனாடா' (Tronada)  என்றச் சொல், சூறாவளி எனப் பெயர்ப் பெற்றாது. இதனின் பொருள் 'இடியுடன் கூடிய மழை' (Thunderstorm) எனப்படும்.


Typhoon view from orbit
Typhoon's amazing view

               'சூறாவளி' (Typhoon) என்னும் சொல் 'பெர்சியன், இந்தி, அராபிக் மற்றும் சீன' (Persia, Hindi, Arabic and Chinese) மொழிகளிலிருந்து தோன்றியாது.

 புயல்களுக்கு எப்படி பெயர் வைப்பார்கள்? (Nomenclautre of cyclones)

             புயல்களுக்கு பெயர் வைப்பதற்காக, உலக வானிலை அமைப்பு (World Meteorological organisation) பல வழி முறைகளை (procedure) கூறியுள்ளார். உலகில் உள்ள  பகுதியில் ஏற்படும் புயல்கள் அனைத்தும் இந்த வழி முறைகளை பின்பற்றி தான், வானிலை ஆய்வாளர்கள் (researchers) அனைத்து வகையான புயல்களுக்கும் பெயர் வைப்பார். இந்த அமைப்பு இந்தியாயில் ஏற்படும் புயல்களை இரண்டு வகையாக பிரித்துள்ளனர். ஓன்று தென் இந்தியா (South India) பகுதி மற்றொரு வட இந்தியா (North India) பகுதி ஆகும். தென் இந்தியா பகுதி இந்தியா பெருங்கடல் (Indian ocean) பகுதியை உள்ளடாக்கியது. வட இந்தியா பகுதி அரேபிய கடல் (Arabian sea) மற்றும் வங்காள விரிகுடா (Bay of Bengal) போன்ற பகுதிகளை உள்ளடாக்கியது. தென்னிந்திய பகுதிகளில் ஏற்படும் புயல்களுக்கு ஆண்பால் (male) மற்றும் பெண்பால் (female) பெயர்களை வைப்பர். வட இந்தியாவில் ஏற்படும் புயல்களுக்கு நடுநிலை (neutral) பெயர்களை வைப்பர். 

புயல்களுக்கு பெயர் வைக்கும் வழி முறை:

          - பெயர்களை உலக வானிலை அமைப்பு அளித்த பட்டியில் (list) இருந்தே தேர்வு செய்ய (select) வேண்டும்.

          - புயல்களின் பெயர்கள் எவ்வித மதம் (religion), ஒருவரின் பெயர் (particular person) அல்லது இனத்தைக் (Community) குறிப்பிடக் கூடாது.

          - புயல்களின் பெயர்கள் எளிதில் செல்லும் (easily pronounced) வகையில் இருக்க வேண்டும். மேலும், எட்டு எழுத்துக்கு (letters) அதிகமாக பெயர் வைக்க கூடாது.

            

இந்தியவில் உருவான சில முக்கிய புயல்கள்: (cyclones formed in India)

1. லைலா புயல் (Laila) 2010 ஆண்டு ஏற்பட்டது. (ஆந்திரா மாநிலம்)

2. ஃபானி புயல் (Fani) 2019 ஆண்டு ஏற்பட்டது. (ஒடிசா மாநிலம்)

3. அய்லா (Aila) புயல் 2009 ஆண்டு ஏற்பட்டது. (மேற்கு வங்கம் மாநிலம்)

4. நாடா (Nada) புயல் 2016 ஆண்டு ஏற்பட்டது. (தமிழ் நாடு மாநிலம்)

5. லெஹர் (Lehar) புயல் 2013 ஆண்டு ஏற்பட்டது. (ஆந்திரா மாநிலம்)

6. அம்பான் (Amphan) புயல் 2020 ஆண்டு ஏற்பட்டது. (ஒடிசா மாநிலம்)

7. மோர் (Mor) புயல் 2017 ஆண்டு ஏற்பட்டது. (மேற்கு வங்கம் மாநிலம்)

8. வரதா (Varadah) புயல் 2016 ஆண்டு ஏற்பட்டது. (தமிழ் நாடு மாநிலம்)

9. டிட்லி (Titli) புயல் 2018 ஆண்டு ஏற்பட்டது. (ஆந்திரா மாநிலம்)

10. கஜா (Gaja) புயல் 2018 ஆண்டு ஏற்பட்டது. (தமிழ் நாடு மாநிலம்)


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

 
1. காற்று நிறை (Air mass)  மற்றும் காற்று எடை (Air weight) உள்ள வேறுபாடு (differences between them) என்ன?


காற்று நிரை (Air mass)

   - து ஒரு பொருளின் அளவைக் கூறும். (Amount of matter on an object)

   - இதை கி.கி அளவில் அளக்கப்படும். (Kilogram unit)

   -இது எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கும். (Same in all places)


காற்று எடை (Air weight)

    - இது ஒரு பொருளில் மேல் உள்ள ஈர்ப்பு விசையைக் கூறும். (Gravitational pull acting on an object)
    - இதை நியூட்டன் அளவில் அளக்கப்படும். (Newton)
    - இது இடத்திற்கு இடம் மாறும். (Varies from place to place)



2. காற்றழுத்தம் (Air pressure) மற்றும் காற்றின் வேகத்தை (air speed) எதைப் பயன்படுத்தி அளக்கப் படுகிறது (measured)?

        'காற்றழுத்தமானி', (Barometer)  இது ஒரு அறிவியல் கருவி (scientific instrument). இது காற்றழுத்த அளவை அளக்கப் பயன்படுகிறது. 

       'அனீமோமேட்டர்' (Anemometer), இதனை பயன்படுத்தி காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசையை அளக்க முடியும்.


Barometer instrument
Barometer for measuring Air pressure


3. புயல்களை எதைப் பயன்படுத்திக் கண்டுப்பிடிப்பர்கள்? (Using which instrument we can find the cyclone formation)

       புயல்களை செயற்கைக் கோளைப் (satellites) பயன் படுத்திக் கண்டுப்பிடிப்பர்கள்.


Satellite in Space viewing earth
Satellite viewing earth's atomsphere

இந்தியவின் வானிலை செயற்கைக்கோள்கள்

SCATSAT - Satellite for Weather forecasting, Cyclone Detection and Tracking.

INSAT - 3D

INSAT - 3DR

INSAT - 3A

Kalpana 

 இவற்றைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள இடங்களின் வானிலை அறிக்கையைப் (weather report) பெறுவர்.

4. அழுத்தம் (Pressure) என்றால் என்ன? 

 அழுத்தம் (Pressure) = விசை (Force) / பரப்பளவு (Area)

அழுத்தம் பாசகலில் (Pascal) அளக்கப்படுகிறது. அதனின் எஸ்.ஐ. யுனிட் (S.I. unit) N/m^2 ஆகும்.


5. நிலநடுக்கோடு (Equator) என்றால் என்ன?

    நிலநடுக்கோடு (Equator), பூமியின் மையப் (centre) பகுதியை சுற்றி வரும் கோடு (imaginary line) ஆகும்.

      Latitude (அட்சரேகை), பூமியின் வடக்கு (North) மற்றும் தெற்கு (South) துருவங்களை (Poles) இணைக்கும் கோடுகள் ஆகும்.

     Longitude (தீர்க்கரேகை), பூமியின் கிழக்கு (East) மற்றும் மேற்கு (West) திசைகளை இணைக்கும் கோடுகள் ஆகும்.

       

World map view
World map in Black and white



*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

2 Comments

  1. Good content. I had a doubt that is in 4th qa in faq the answer where SI unit is given as N/m^2 . What is the sign ^ represents?

    ReplyDelete
    Replies
    1. It because we can't write powers at top of numbers and letters in this post. So we use symbol ^ to significance the powers.

      Delete

Enter your comments :)